RSS

Gangaimagan: ஆத்மலயம்!

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

"கங்கைமகள் கலைக்கோலம்"


எனது அன்பு சகோதரி சிவகலை தில்லைநாதன் அவர்களது 50வது அகவையை முன்னிட்டு வாசிக்கப்பட்டது.


சீருடன் வந்து சிறப்புடன் இங்கு அமர்ந்து இந்த
சீதையை வாழ்த்தவந்த அனைவருக்கும் என் முதல் வணக்கம்.



தங்கை என்ற பாசக்கிளி கொஞ்சி விளையாடும்
பொங்கும் எங்கள் நெஞ்சங்களில் புன்னகைகள் ஆடும்
அண்ணன்மார்கள் சுற்றிநின்று ஆனந்தக்கூத்தாட
பிள்ளைக்கனியாய் பிறந்து வெள்ளிக்கனியாய் வளர்ந்தவள் நீ
செழும் சுடர்போல் வானத்தில் உயர்ந்தவளும் நீ தான்
எங்கள் வீட்டில் தங்கையாய் பிறந்து தாயாய் உயர்ந்தவளும் நீதான்

உன் புன்னகைக்கு மரங்கள் பூக்கும் சிரிப்பிற்கு சிலைகள் தலையாட்டும்.
சிற்றாடை கட்டி இவள் சிரித்தபோது என்னைப்
பெற்றவள் சாயல் என்று பேசி மகிழ்ந்தேன். இன்று
விண்மீன்கள் கண்ணாகிப் பார்க்கின்றன;
உந்தன் கண்மீன்கள் களிப்புற்றுக் கிடக்கின்றன.
இந்த மழைமேகம் உன் மீது பூத்தூவட்டும்
கோவில் மணிச்சங்கின் ஒலி கேட்டு நீ வாழட்டும்.

சின்னவயதில் நாம் விளையாடிச் சிரித்ததெல்லாம்
நினைவாக வந்துவந்து வாடி வாடி உதிருதம்மா
கொப்பிக்கு உறைபோடும் பூப்போட்ட பேப்பருக்கு
அடிபட்டுக் கிழித்ததெல்லாம் இன்னும் நினைப்பிருக்கு.
சைக்கிளில் உனைவைத்து ஓடிப் போகையிலே
சறுக்கிவிழுந்ததும் எனக்கு சாடையாய் நினைப்பிருக்கு
அம்மாட்ட கோள்மூட்டி அடிவாங்கித் தந்துவிட்டு
அப்புறம் வந்து ஆறுதல் சொன்னதும் நினைப்பிருக்கு
சந்தியில் நான் நின்று சிகரட் பத்தையிலே
சிரிப்புடன் நின்று நீ வேடிக்கை பார்த்ததும் நினைப்பிருக்கு.
பள்ளிக் காலத்தில் என் கள்ளத் தனங்களை நீ
கண்டும் காணாமலும் இருந்தது நினைப்பிருக்கு.
லாம்பு சிமினி; சுடுதண்ணி போத்தல்; கண்ணாடிப் பொருட்கள்
அனைத்தையும் நீ உடைத்து என் பெயரில் பதிவுசெய்தது நினைப்பிருக்கு
பிள்ளையார் கோவிலில் கடலைக்கு நான் காசுதர
ஓடிப்போய் லொத்தர் எடுத்து உனக்கு கோபால் பற்பொடி கிடைத்தது நினைவிருக்கு

நீ தவழ்ந்து வந்ததை தள்ளிநின்று வேடிக்கை பார்த்தது ஒரு காலம்
நடமாடி நடந்தபோது என் ஆவியழுவியது ஒரு காலம்
உனக்காக அவித்த புட்டை அரைகுறையாய் நீ உண்ண
மீதியை நான் தின்று பெருமூச்சு வாங்கியது ஒரு காலம்.
பள்ளிக் காலத்தில் என் கள்ளத் தனங்களை நீ
கண்டும் காணாமலும் இருந்தது ஒரு காலம்.
பருவம்வந்த பெண்ணாய் நீ ஆகையிலே
ஊர்முழுக்க நான் புட்டுக்கழி சுமந்தது ஒரு காலம்

கண்ணகியாய் நீ அன்று காதல் களம் புகுந்து வேளை
நாதன் அவன் கைபிடிக்க நீ நாட்டைவிட்டு வந்தது ஒரு காலம்.
தேவர்கள் வாழ்த்திநிற்க வேதியர்கள் சாட்சி சொல்ல
திருமால் பிரம்மா சிவன் எனும் மூவராய் உன்னை நாங்கள்
காத்து நின்றது ஒரு காலம்.


















பொன்னாக நான் நினைத்த உன் புதுவாழ்வை
அன்று காலன் அவன் கவர்ந்தபோது
வெந்நீரில் நான் குளித்து உன் கண்ணீரில்
ஓடம் நடத்தியது ஒரு காலம்.

அம்மாவை நீ அணைத்து அன்புடனே தாலாட்டி
21 ஆண்டுகள் இதயத்தில் நீ பூட்டியது ஒரு காலம்
பபியை வளர்த்தெடுத்து வாழ்க்கை துணை அமைத்து
மகிழ்வுடனே வாழும் உனக்கு இது பொற்காலம்.
மதன் என்ற மகாராசன் உன் மனைக்குள் வந்ததினால்
உன்னை இமைபோலக் காப்பது உன் வசந்தகாலம்.
ஒருநாளும் உனை மறக்காத உன் நிழலாக நான் தொடர்ந்துவரும்
வரம் எனக்கு வேண்டுவதே எனக்கு நிலாக்காலம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS