RSS

ஆண்டவன் கட்டளை



"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).

வணக்கம் வாசகர்களே. இன்றைய நத்தார் பண்டிகையை முன்னிட்டு இக்கட்டுரையை மகிழ்வுடன் சமர்ப்பிக்கின்றேன். பிறக்கப்போகும் புதிய ஆண்டு எல்லோருக்கும் இனிதாக அமைய வேண்டுகிறேன். (அன்புடன் கங்கைமகன்)

இயேசுநாதர் இப்பூவுலகில் மண்ணின் மைந்தனாக அவதரித்தது வரலாறு என்பதை யாவரும் அறிந்ததே. சரித்திரச் சான்றுகளின்படி அவர் பிறப்பு கி.மு. 4-5 என்று ஆய்வுகளில் கணக்கிடப்பட்டுள்ளது. 

இயேசு நாதர் ஏறக்குறைய (33 1/2) ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் பிறந்த நோக்கத்தின்படி மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத எல்லாவித தீய சக்திகளையும், மூட மத கோட்பாடுகளையும், ஆதிக்க போக்கையும் எதிர்த்தார். மக்களிடையே பல அதிசயங்களை செய்தார். இவ் உலக வாழ்வை விட தேவனுடைய ராஜ்ய தேடுதலையே மக்களிடம் போதித்தார். இவரும் ஒரு அவதாரமாகவே இந்துநாகரிகத் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இவரை விவேகானந்தரும் அவரது குருதேவரும் ஆன்மீகக் கண்ணால் கண்டு மகிழ்ந்துள்ளார்கள். 
 
இந்த இறைதூதரின் வருகையை அன்றிருந்த அரசும், யூத மதவாதிகளும் ஏற்க மறுத்தனர். மாறாக இவர் மேல் பழி சுமத்தி சிலுவையில் அறைய திட்டமிட்டனர் என்பது வரலாறு. அந்த நாட்களில் இருந்த அரசு கொடூர செயல் புரிந்த குற்றவாளிகளையும், (அல்லது) ஒருவரை சமூகத்தில் மிகக் கேவலமாக நடத்த வேண்டுமானாலும் சிலுவையில் அறைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதுவே அக்காலக் கடும் தண்டனையாகக் கொள்ளப்பட்டது. புதிய ஏற்பாடடில் இயேசு நாதரைச் சிலுவையில் அறையும்போது அவர் 7 கட்டளைகளைப் பிறப்பித்ததாக மத்தேயூ சுவிசேசத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

1) "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34) 

2) "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோக‌‌த்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43) 

3) தம்முடைய தாயை நோக்கி : "அ‌ம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27) 

4) "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" (மத்தேயு 27 : 46) 

5) எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19 : 28) 

6) இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30) 

7) பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23 : 46)

இது இவ்வாறிருக்க இயேசுவின் விசுவாசத்திற்குரிய சீடனே அவரைக் காட்டிக்கொடுத்தான் என்றும் ஒரு வரலாறு யூதாசின்மேல் பழியாக விழுந்திருக்கின்றது. இதைப்பற்றிக் கண்டெடுக்கப்பட்ட (நூல்)கல்வெட்டின் தகவல் வருமாறு. 
இது காப்டிக் மொழியினால் (Coptic Language) எழுதப்பட்டுள்ளது. காலம் ஏறக்குறைய கி.பி. 300. (காப்டிக் மொழி, எகிப்திலுள்ள பழங்கால காப்டிக் கிறிஸ்துவ திருச்சபையால் (Coptic Church) பயன்படுத்தப்பட்ட மொழியாகும். எகிப்து மற்றும் எத்தியோப்பியர்களை உறுப்பினர்களைக் கொண்டது.) இந்நூல் முற்கால கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூலின் பிரதியாகும் (copy). யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி பற்றி, கி.பி.180 வாக்கில், லியனின் (தற்போதைய ப்ரான்ஸ் ) ஆயர் இரேனியஸ் (Bishop Iraneous) முதன் முதல் குறிப்படிகிறார். அவர் அது திருச்சபைக்கு முக்கிய கொள்கைக்கு விரோதமானது ஆகையால் விலக்கப்பட்ட நூல் ( heresy), என அறிவித்தார். புதிதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நற்செய்தி நூல் இவ்வாறு ஆரம்பிக்கின்றது: இயேசு யூதாஸிடம் பேசிய உரையாடலின் ரகசியத்தின் வெளிப்பாடு. நூலின் முக்கிய பகுதியில் இயேசு யூதாஸிடம் , "என்னை மூடியிருக்கும் மனிதனை நீ பலியிடுவதால், நீ அவர்கள் அனைவரிலும் மேலோங்கி நிற்பாய்', என கூறுகிறார். இயேசு தனது மாமிசத்தை வெற்றி கொண்டு, ஆன்மீக உயர்நிலையை அடைவதை, இதுகுறிப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். இதன்பிரகாரம் இயேசு காட்டிக் கொடுக்கப்படவில்லை என்பதும் இயேசுவாகிய ஆண்டவன் கட்டளையையே யுதாs செய்ததும் புலனாகிறது. 

"மற்ற அனைவரிடமிருந்து ஒதுங்கியிரு, நான் அரசாட்சியின் (kingdom) புதிர்களை உனக்கு அறிவிப்பேன்",எனவும் இயேசு யூதாஸிடம் கூறுகிறார். யூதாஸை தனியே தெரிவு செய்து சிறப்பான அங்கிகாரம் அளிக்கிறார். "பார், உனக்கு அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது, உன் கண்களை ஏறெடுத்து அந்த மேகத்தை உற்றுப் பார், மேலும் அதனுள் உள்ள ஒளியையும், அதனைச் சுற்றியுள்ள விண்மீன்களையும் பார். வழி நடத்தும் அந்த விண்மீன் நீயே", இயேசு யூதாஸிடம் கூறுவதாக, யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி மேலும் குறிப்பிடுகிறது.
யூதாஸ் இஸ்காரியோத், இயேசுவை யூத குருமார்களிடன் காட்டிக் கொடுப்பதுடன் நற்செய்தி நிறைவு பெறுகிறது. கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது பற்றியோ, அவரது உயிர்தெழுதல் பற்றியோ ஏதும் இதுகூறவில்லை.
இந்நூலின் ஆசிரியர் யாரெனெ குறிப்பிடப்படவில்லை, ஆனால் அவர், யூதாஸ் மட்டுமே கிறிஸ்துவின் போதனைகளின் முக்கியத்துவதை புரிந்திருந்ததாக நம்பியவர், என தேசிய புவியியல் சங்கம் தெரிவிக்கிறது. 1970-ல் கண்டு பிடிக்கப்பட்ட பைப்பிரஸ் (papyrus) சுருள்கள், பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டதாக அது கூறுகிறது. 1000 துண்டுகள் மீண்டும் ஒருங்கிணக்கப்பட்டதாகவும் கூறுகிறது. ரேடியோ கார்பன் டேட்டிங் முதலான பல அறிவியல் ஆய்வுமுறைகளும், பிற பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்பட்டதாக, அது மேலும் கூறுகிறது.
யூதாs இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்கு இன்னுமொரு விளக்கமும் உண்டு. "தான் காட்டிக்கொடுத்தால் இயேசு; கர்த்தர் வல்லமையால் எதிரிகளை இனம்கண்டு அவர்களைச் சபிப்பதனூடாக மேலும் புகழ்பெறுவார்"  என்பதை தன் எண்ணமாகக் கொண்டிருந்தான் என்று கருதுவும் இடமுண்டு. 

கடவுள் அனுமதி இல்லாமல் கடவுளைக் காட்டிக்கொடுக்க முடியாது என்பதே மானிடர்களுக்கு இந்தக் கட்டுரை ஊடாக நான் கூறும் கருத்தாகும். கிறித்துவ நட்புக்களிடம் இருந்து அவர்களது கருத்துக்களைப் பின்னூட்டமாக எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் மீண்டும் எனது நத்தார் புதுவருட வாழ்த்துகள். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

. பித்தாப்பிறை சூடி



கடல்சூழ்ந்து பூவுலகை வாழ்விக்க வந்த சைவவமய குரவருள் சுந்ததரை ஒரு அவதாரமாகவே சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். சிவபிரானுக்கு வழிவழி தொண்டு செய்யும் குலத்தில் இவர் பிறந்தவராதலால் இவரது பெற்ரோர்களும் சிவனுக்கு அடிமையாகவே வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இவரது பிறப்பைக் கூறவந்து சேக்கிழார் தனது பாடலில் இவரை அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். 

மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்
வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானியார்பால் 
தீதகன்று உலகமுய்யத் திருவவதாரம் செய்தார் (சேக்கழார் திருமுறை 12)

சுந்தரரது திருமணத்தன்று இறைவன் தன்னைத் தடுத்தாட்கொண்ட விடையத்தை ப் பல பாடல்களிலும் நினைவு கூருகின்றார். 

நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே (தி.7 ப.69 பா.8)
வலிய வந்தென்னை ஆட்கொண்டானே (தி.7 ப.70 பா.2) என்ற தனது பாடல் வரிகளில் நினைவு கூருகின்றார். 
இவர் பரமன்மீது பண்கனிந்த பாடல்களைப்பாடிச் சைவர்கள் மத்தியில் பரமனது புகழ்பாடும் அடியவராக எல்லோராலும் போற்றப்பட்டார். இவரது பாடல்கள் யாவும் 7ம் திருமுறைக்குள் அடக்கப்பட்டுள்ளன. இத்திருமுறைக்குள் 100 பதிகங்களும் 1026 பாடல்களும் 84 கோவில்களும் பாடப்பட்டுள்ளன. 

இவரது முதலாவது பாடல் பித்தா என்று தொடங்குவதற்கன காரணம் "நீ என்னைப் பித்தன் என்று சொன்னாய் அதனால் பித்தா"  என்று தொடங்கியே பாடு என்று இறைவன் சொன்னதாக நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் பிறிதொரு சுவையான செய்தியும் அவர் இறைவனைப் பித்தா என்று தொடங்கிப் பாடுவதற்குக் காரணமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். 

சிவபெருமான் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டபோது கையில் ஓர் அடிமைப் பத்திரம் (அடிமைச் சாசனம்) கொண்டுவந்தார். அதிலு சிவபெருமானுடைய பெயர் எவ்வாறு அமைந்திருந்தது எனப் பார்ப்போம். இதோ அந்த அடிமைப் பத்திரப் பாடல்

"அருமறை நாவலாதி சைவன் ஆரூரான் செய்கை
பெருமுனி வெண்ணை நல்லூர்ப் பித்தனுக்கு ஞானும் என்பால் 
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்வதற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து"

இப்பத்திரத்தில் இறைவன் பெயர் பித்தனென்று இருப்பதனாலும் இறைவன் தன்னைத் தானே பித்தன் என்று கூறியிருப்பதாலும் சுந்தரர் பித்தா என்று தொடங்கிப் பாடியிருக்கலாம் என்பதும் ஒரு கருத்துக் கணிப்பீடு. 

பேரருளுடைய சிவபெருமானின் செயல்களை பித்தனின் செயல்களுக்கு ஒப்பிடுவதில் தவறில்லை என்பதை உணர்ந்த சம்பந்தரும் தனது பாடலில் சுந்தரர் காலத்திற்கு முன்பே "பித்தாப் பிறைசூடி" என்ற சுந்தரரின் அதே வரிகளை தனது பாடலிலும் புகுத்தியுள்ளமையை இங்கு காணலாம். சிலவேளை சுந்தரர் இந்தப் பாடல் வரிகளை அறிந்தும் இருந்திருக்கலாம். 

"விண்ணோர் பெருமானே விகிர்த்தா விடையூர்த்தீ
பெண்ணாணலியாகும் பித்தாப்பிறை சூடி 
எண்ணா ரெருக்கத்தும் புலையூருறைகின்ற 
அண்ணா என வல்லார்க் கடையா வினைதானே" (தி.1 ப.89 பா.3)

"தோடு கூற்றுப் பித்தா" என்று அகத்தியர் தேவாரத் திரட்டிலும் இறைவனைப் பித்தா என்று கூறிய ஒரு வரி வருகின்றது. 

சுந்தரரின் பித்தாஎன்று தொடங்கும் பதிகத்திலிருந்து ஊழிதோறும் என்ற இறுதிப்பாடல் வரை 38 ஆயிரம் தேவாரப் பாடல்களைப் பாடினார் என்று திருமுறைகண்ட புராணம் கூறுகின்றது. ஆனால் நமக்குக் கிடைததுள்ளது 1026 பாடல்களே. கீழ்வரும் பாடல் அவரது 38 ஆயிரம் பாடல்களுக்கும் சான்றாக இருக்கின்றது. 

"பின்புசில நாளின் பின் ஆரூர்நம்பி பிறங்குதிரு 
வெண்ணை நல்லூர்ப் பித்தாவெனும் இன்பமுதல்
திருப்பதிகம் ஊழிதோறும் ஈறாய் முது;பத்தெண்ணாயிரம் ஆக
முன்பு புகுன்றவர் நொடித்தான் மலையிற் சேர்ந்தார் (திருமுறைகண்ட புராணம்)

சுந்தரர் தனது பாடல்களினூடாகச் சமூகக் கருத்துக்களையும் மக்கள் இறைவன்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் தனது பாடல்களினூடாக அக்காலச் சமூகத்தினருக்கு அள்ளித் தெளித்தள்ளார். அது மட்டுமன்றி நீறிடாதோர்; சிவனை நினைக்காதோர்; ஐந்தொழுத்தை ஓதாதோர்; சிவபூசை புரியாதோர் போன்றவர்களைப் பார்த்துப் பேய்கள் என்று கூறுகின்றார். 

"நாயேன் பலநாளும் மனத்துள் நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்தேன் என்று தன்னைத் தானே குறிப்பிடுகிறறார். 

இதே கருத்தைத் திருவள்ளுவரும் தனது குறளில்

"உலகத்தார் உண்டென்பது இல்லை என்பான்
வையகத்து அகலையா வைக்கப்படும் (குறள் 850)

இதே கருத்தைச் சம்பந்தரும் இறை அன்பு இல்லாதவர்களைப் பேய்கள் என்று குறிப்பிடுகின்றார் 

"ஆர்த்தானை அழகர் வெண்மணி அம்மான் தன்னை
ஏத்தாதார் என் செய்வார் ஏழைப் பேய்கள்" (தி.2 ப.14 பா.4)

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

(முலம்; தமிழர் வாழ்வில் சைவநெறி- கங்கைமகன்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணா! நீயும் நானுமா?


சந்தேகம் என்பது கேள்வி ஞானம் குறைந்தவர்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் என்று ஒருசாரார் விடைகூறுகின்றார்கள். ஆனால் சந்தேகப் படுதல் என்ற சொல் இருவருக்கு இடையில் இருக்கும் புரிந்துணர்வு மறைக்கப்படுதல் என்று உளவியலாளர்கள் கருதுகின்றார்கள். மாணவனுக்கு பாடத்தின்மீது சந்தேகம். ஆசிரியருக்கு மாணவன்மீது சந்தேகம் இந்த இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. சிலர் தங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களை இரகசியமாக வைத்துள்ளார்கள். சிலர் தங்கள் சந்தேகங்களைப் பகிரங்கப்படுத்தி விடைகாண முயல்கின்றார்கள். ஒருவருக்குத் தீர்க்கப்படாமல் இருக்கும் சந்தேகம் ஒன்று வந்துவிட்டால் அவர் வாழ்வின் தன்னப்பிக்கை இழந்தவராகக் கருதப்படும் ஒரு நோயாளியாகவே இந்த உலகத்தில் நடமாடுவார். 

நாம் நம்மைப்பற்றி நிறையவே நம்பிக்கை வைத்திருக்கிறோம். நான் புத்திசாலி என்னால் எதையும் செய்யமுடியும் என்று அகங்காரப்படுகின்றோம். நான் என்ற வெளியில் வீசப்பட்ட இந்த எண்ணங்கள்தான் உலகில் நிறையப் பிரச்சனைகளைக் கொண்டு வருகின்றன. நம்மிடையே இருந்து எழும் இந்த கெட்ட குணம்தான் மற்றவர்களுக்கிடையே பகையை உருவாக்கி பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. நாம் நமது மேன்மைக்காக மற்றவர்களைப் பயன்படுத்த நினைக்கிறோம். அதனால் நாம் நமது கருத்துக்களை மற்றவர்கள்மீது திணித்துவாழப் பழகிவிட்டோம். இந்தத் தவறான போக்கு இல்லாத ஒருவரைப் பார்ப்போம். 

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட வாழ்வியல் தேடல்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்களே பகவத்கீதை என்ற ஆன்மீக நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது.(நாம் படிப்பதற்குக் கீதை என்னும் பாடம் கொடுத்தான் - கண்ணதாசன்) பகவான் அந்தக் கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன்; அர்ஜுனன் கொண்ட சந்தேகம் என்ன தெரியுமா ? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாகக் கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதுவே அவனின் அர்சுனனின் பெரும் சந்தேகமாக இருந்தது. எங்களால் போற்றுதலுக்குரிய பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். மிகவும் சிறந்து அறிவு படைத்தவர் அவர். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர் முனையில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும் ? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம் ? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.

அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.  ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது - தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்

அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய்.


இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான். 
எல்லாமே சரியாகப் படுகிறது. அவிட்ட கூந்தலை சிகைக்காய் வைத்துத் தலைமுழுகி  முடியவேண்டும் என்ற சபதத்திற்கு இந்தப்போர் தேவையா என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. why this கொலவெறி. 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனிதம்+மனிதர்=மணிவண்ணன்


"உன் எழுத்துக்கள் எவை என்று காட்டு நீ யாரென்பதை சொல்கிறேன்".என்ற கூற்றுக்கு இணங்க நல்ல நூலைத் தந்த நல்ல எழுத்தாளரான திரு கங்கை ஐயாவை காப்பாற்றி வருவது தமிழையும் தமிழரையும் காப்பாற்றுவதற்கு சமம்.வாழ்த்துக்கள் கங்கை ஐயா.(பேராசிரியர் மணிவண்ணன்; தகிதா பதிப்பகம்; கோவை)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே"


பக்தி இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலம் என்று அழக்கப்படுகின்றது. இக்காலத்தில்தான் சைவம் என்ற மதம் தமிழ் இலக்கியத்தில் எக்காலத்திலும் இல்லாதவாறு அதனை மக்கள் மனங்களில் பிரவாகம் அடையச் செய்தது. பிற மதங்கள் சைவத்தை மக்கள் மனங்களில் இருந்து அகற்றி தாங்கள் குடிபுகவந்த வேளை சமயகுரவர்கள் தோன்றி அக்காலச் சமுதாய வரலாற்றையே மாற்றி அமைத்தனர்.
இந்த ஆலயம்தான் திருவதிகை ஆலயமாகும். அப்பர் சுவாமிகள் தனது சூலைநோயை இந்தக் கோவிலில் பாடல்பாடியே குணமாக்கினார் என்பது வரலாறு.

சம்பந்தரும் அப்பரும் ஒரே வயதினராக இல்லாவிட்டாலும் ஒரேகாலத்தில் வாழ்ந்தார்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன. இறைவனுக்குப் பூசை எவ்வாறு செய்யப்படல் வேண்டும் என்பதைக்கூட சமய குரவர்கள் மிகவும் தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள். அவற்றில் அப்பர் ஸ்வாமிகள் பாடிய ஒரு பாடலை இங்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரே கருத்தை சம்பந்தரும் தனது பாடல்களில் குறிப்பிட்டிருக்கின்றார். 
சிவ பூஜைக்கு மிகவும் முக்கியமானது தூய அபிஷேக ஜலமும்,பசும் பாலும் , வில்வ இலைகளும் ஆகும். "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு " என்று திருமூலரும் பாடி இருக்கிறார். அதோடு தூய மலர்களால் அர்ச்சனை செய்வதால் விசேஷமான பலன் கிடைக்கும். மனத்தூய்மையும் முக்கியம்.எனவேதான்,"கரவின்றி நன் மாமலர்கள் கொண்டு இரவும் பகலும் தொழுவார்கள்" என்று மயிலாடுதுறையில் பக்தர்களைச் சிறப்பித்தார் ஞானசம்பந்தர். இறைவனை வணங்கி மலர்களால் அர்ச்சனை - தோத்திரங்கள் செய்து , அன்பு மேலிட்டு கண்ணீர் மல்க அவனது நாமங்களைச் சொல்லி பூஜிப்பவர்களைக் கணக்கில் எழுதி வைத்துக்கொள்கிறான் ஈசன் என்று அப்பர் பெருமான் பாடியதைநாமும் அறிந்து கொள்ளலாம். 

"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும் "
"பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."

நாம் செய்வதைப் பார்க்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்ற அகம்பாவதில் அக்கிரமங்கள் செய்பவர்களுக்கு இப்பாடல் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சித்திரபுத்திரன் கணக்கு இறைவனாலேயே நமக்கு எழுதப்படுகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். 
திருநூவுக்கரசு நாயனார் இவ்வுலகத்தில் 81 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்கள் செய்து சைவத்தை நிலைநிறுத்தி அவனருளாலே அவன்தாழ் வணங்கி இறைபதம் அடைந்தவர். இவரால் பாடல் பெற்ற தலங்களில் இவருக்கென்றே சில இடங்களில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர் சமண சமயத்திற்கு மாறி பின்னர் சைவசமயத்திற்கு வந்தவர். இதையறிந்து பாண்டியர் இவருக்குச் சூலை நோயை உண்டாக்கி திரும்பவும் தங்கள் மதத்திற்கு வரும்படி அழைத்தனர். (இறைவனே சூலைநோயை உண்டாக்கி இவரை சைவமதத்திற்கு அழைத்ததாகவும் கதைகள் உண்டு). சமணமதத்திற்குத் திரும்பாத அப்பர் சுவாமிகளைப் பாண்டியர்கள் சித்திரவதை செய்தனர். சுண்ணாம்பு அறையில் அடைத்துப் பார்த்துனர். இறைவன் அருளால் தீங்கின்றி வெளிவந்தார். 

அப்பர் சுவாமிகள் சமணத்தில் இருந்து சைவத்தின்பால் வந்தபோது அவர் பாடிய முதுலாவது பாடல் "கூற்றாயினவாறு விலக்ககலி கொடுமை பல செய்தன நானறியேன்" என்ற பாடலாகும். 

"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே"

இப்பாடலில் கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாச்சினும்; நற்றுணை ஆவது நமச்சி வாயவே! என்ற வரிகள் இங்கு நோக்கத்துக்கது. நம்மில் பலர் இப்பாடல் கல்லோடு கட்டி கடலில் போடப்பட்டபோது பாடப்பட்டது எனக்கொள்வர். "கடலில் பாச்சினும்" என்ற சொல் எதிர்கால வினையாகும். இறைவன் திருவருளால் சமணர்களது இக் கொடிய செயலை அப்பர் ஏற்கனவே அறிந்து இவ்வாறு பாடினார் என்பதே பொருந்தும். இப்பாடல் கல்லுடன் கட்டி கடலில் போடுவதற்கு முன்னரே பாடப்பட்டது என்பதுவே உண்மை.

மேற்குறிப்பிட்ட தகவலை உண்மைப் படுத்தும் முகமாக திருநாவுக்கரசு நாயனாரே தன்னைக் கல்லுடன் கட்டி கடலில் போடப்பட்ட பின்னர் பாடிய பாடல் இங்கு நோக்கத்துக்கது. 

"கல்லினோடு என்னைப்பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நுக்கவென் வாக்கினால் 
நெல்லு நீள்வயல் நீலக் குடியரண்
நல்ல நாமம் நவிற்றி உயர்ந்தேன் அன்றே".

"ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே" என்ற பாடலை நாம் கேட்கும்போது கவிஞர் கண்ணதாசனது ஞாபகமே எமக்கு வருகிறது. ஆனால் இந்த வரி கிட்டத்தட்ட 1250 ஆண்டுகளுக்குமுன் அப்பர் சுவாமிகளால்தான் பாடப்பட்டது. 

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரோருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆரோருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே"
இவை எனது ஆய்வுகளுக்குக் கிடைத்த முடிவுகள். ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு தெளிவை முன்வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்- கங்கைமகன்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆத்மலயம் நூல் அறிமுகவிழா- டென்மார்க்.



அனைத்து உறவுகளுக்கும் என் பணிவான வணக்கம். லண்டனில் வெளியீடு செய்யப்பட்ட எனது "ஆத்மலயம்" என்ற நூலின் அறிமுகவிழா எதிர்வரும் சனிக்கிழமை அன்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை டென்மார்க்கின் பரடேசியா நகரத்தில் அலே பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதோடு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.  
நூலாசிரியர் ''கங்கைமகன்'' சிறப்புரை

தகிதா பதிப்பாசிரியர் மணிவண்ணன் அவர்கள் கோவையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் உரையாற்றுகின்றார்.
சென்னை டிsளகவரி புத்தக நிலையத்தில் எனது நூல்
பாராட்டுவைபவம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பித்தாப்பிறை சூடி



கடல்சூழ்ந்து பூவுலகை வாழ்விக்க வந்த சைவவமய குரவருள் சுந்ததரை ஒரு அவதாரமாகவே சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். சிவபிரானுக்கு வழிவழி தொண்டு செய்யும் குலத்தில் இவர் பிறந்தவராதலால் இவரது பெற்ரோர்களும் சிவனுக்கு அடிமையாகவே வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இவரது பிறப்பைக் கூறவந்து சேக்கிழார் தனது பாடலில் இவரை அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். 

மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்
வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானியார்பால் 
தீதகன்று உலகமுய்யத் திருவவதாரம் செய்தார் (சேக்கழார் திருமுறை 12)

சுந்தரரது திருமணத்தன்று இறைவன் தன்னைத் தடுத்தாட்கொண்ட விடையத்தை ப் பல பாடல்களிலும் நினைவு கூருகின்றார். 

நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே (தி.7 ப.69 பா.8)
வலிய வந்தென்னை ஆட்கொண்டானே (தி.7 ப.70 பா.2) என்ற தனது பாடல் வரிகளில் நினைவு கூருகின்றார். 
இவர் பரமன்மீது பண்கனிந்த பாடல்களைப்பாடிச் சைவர்கள் மத்தியில் பரமனது புகழ்பாடும் அடியவராக எல்லோராலும் போற்றப்பட்டார். இவரது பாடல்கள் யாவும் 7ம் திருமுறைக்குள் அடக்கப்பட்டுள்ளன. இத்திருமுறைக்குள் 100 பதிகங்களும் 1026 பாடல்களும் 84 கோவில்களும் பாடப்பட்டுள்ளன. 

இவரது முதலாவது பாடல் பித்தா என்று தொடங்குவதற்கன காரணம் "நீ என்னைப் பித்தன் என்று சொன்னாய் அதனால் பித்தா"  என்று தொடங்கியே பாடு என்று இறைவன் சொன்னதாக நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் பிறிதொரு சுவையான செய்தியும் அவர் இறைவனைப் பித்தா என்று தொடங்கிப் பாடுவதற்குக் காரணமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். 

சிவபெருமான் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டபோது கையில் ஓர் அடிமைப் பத்திரம் (அடிமைச் சாசனம்) கொண்டுவந்தார். அதிலு சிவபெருமானுடைய பெயர் எவ்வாறு அமைந்திருந்தது எனப் பார்ப்போம். இதோ அந்த அடிமைப் பத்திரப் பாடல்

"அருமறை நாவலாதி சைவன் ஆரூரான் செய்கை
பெருமுனி வெண்ணை நல்லூர்ப் பித்தனுக்கு ஞானும் என்பால் 
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்வதற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து"

இப்பத்திரத்தில் இறைவன் பெயர் பித்தனென்று இருப்பதனாலும் இறைவன் தன்னைத் தானே பித்தன் என்று கூறியிருப்பதாலும் சுந்தரர் பித்தா என்று தொடங்கிப் பாடியிருக்கலாம் என்பதும் ஒரு கருத்துக் கணிப்பீடு. 

பேரருளுடைய சிவபெருமானின் செயல்களை பித்தனின் செயல்களுக்கு ஒப்பிடுவதில் தவறில்லை என்பதை உணர்ந்த சம்பந்தரும் தனது பாடலில் சுந்தரர் காலத்திற்கு முன்பே "பித்தாப் பிறைசூடி" என்ற சுந்தரரின் அதே வரிகளை தனது பாடலிலும் புகுத்தியுள்ளமையை இங்கு காணலாம். சிலவேளை சுந்தரர் இந்தப் பாடல் வரிகளை அறிந்தும் இருந்திருக்கலாம். 

"விண்ணோர் பெருமானே விகிர்த்தா விடையூர்த்தீ
பெண்ணாணலியாகும் பித்தாப்பிறை சூடி 
எண்ணா ரெருக்கத்தும் புலையூருறைகின்ற 
அண்ணா என வல்லார்க் கடையா வினைதானே" (தி.1 ப.89 பா.3)

"தோடு கூற்றுப் பித்தா" என்று அகத்தியர் தேவாரத் திரட்டிலும் இறைவனைப் பித்தா என்று கூறிய ஒரு வரி வருகின்றது. 

சுந்தரரின் பித்தாஎன்று தொடங்கும் பதிகத்திலிருந்து ஊழிதோறும் என்ற இறுதிப்பாடல் வரை 38 ஆயிரம் தேவாரப் பாடல்களைப் பாடினார் என்று திருமுறைகண்ட புராணம் கூறுகின்றது. ஆனால் நமக்குக் கிடைததுள்ளது 1026 பாடல்களே. கீழ்வரும் பாடல் அவரது 38 ஆயிரம் பாடல்களுக்கும் சான்றாக இருக்கின்றது. 

"பின்புசில நாளின் பின் ஆரூர்நம்பி பிறங்குதிரு 
வெண்ணை நல்லூர்ப் பித்தாவெனும் இன்பமுதல்
திருப்பதிகம் ஊழிதோறும் ஈறாய் முது;பத்தெண்ணாயிரம் ஆக
முன்பு புகுன்றவர் நொடித்தான் மலையிற் சேர்ந்தார் (திருமுறைகண்ட புராணம்)

சுந்தரர் தனது பாடல்களினூடாகச் சமூகக் கருத்துக்களையும் மக்கள் இறைவன்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் தனது பாடல்களினூடாக அக்காலச் சமூகத்தினருக்கு அள்ளித் தெளித்தள்ளார். அது மட்டுமன்றி நீறிடாதோர்; சிவனை நினைக்காதோர்; ஐந்தொழுத்தை ஓதாதோர்; சிவபூசை புரியாதோர் போன்றவர்களைப் பார்த்துப் பேய்கள் என்று கூறுகின்றார். 

"நாயேன் பலநாளும் மனத்துள் நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்தேன் என்று தன்னைத் தானே குறிப்பிடுகிறறார். 

இதே கருத்தைத் திருவள்ளுவரும் தனது குறளில்

"உலகத்தார் உண்டென்பது இல்லை என்பான்
வையகத்து அகலையா வைக்கப்படும் (குறள் 850)

இதே கருத்தைச் சம்பந்தரும் இறை அன்பு இல்லாதவர்களைப் பேய்கள் என்று குறிப்பிடுகின்றார் 

"ஆர்த்தானை அழகர் வெண்மணி அம்மான் தன்னை
ஏத்தாதார் என் செய்வார் ஏழைப் பேய்கள்" (தி.2 ப.14 பா.4)

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

(முலம்; தமிழர் வாழ்வில் சைவநெறி- கங்கைமகன்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

"இடக்கர் அடக்கல்"



என் உயிரிலும் மேலான வாசகர்களே என்று உங்கள் அனைவரையும் ஒரு பதிவில் விழித்திருந்தேன். ஒரு நண்பர் உயிரிலும் மேலாக ஒன்றுமே இருக்கமுடியாது! அப்படிக் கூறுவது நாடகீயத்தமிழ் என்று கூறியிருந்தார். அவருடைய பார்வையில் அது சரியாக இருக்கலாம். எனது பார்வையில் வாசகர்களுக்கு ஒரு சிறந்த மதிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு குறிப்பிட்டேன். தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்திற்குக் காலம் தமிழ்மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கின்றது. தொல்காப்பியர் காலம் தொட்டு பல்லவர் காலம் வரை உரை நடைக் காவியங்களைவிட செய்யுள் நடைக் காவியங்களே சிறப்புப் பெற்றிருந்தன. அதில் மிகவும் சிறப்புப் பெற்றது திருக்குறள் என்ற நூலாகும். திருக்குறள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு திருக்குறளுக்கு உரை தேவைப்படவில்லை. அதனை அவர்கள் விளங்கிக் கொள்ளும் அறிவு பெற்றவர்களாகவேதான் இருந்தார்கள். விளங்கிக்கொள்ளும் அறிவு அந்தக்காலப் பகுதி மக்களுக்கு இருந்திராவிட்டால் திருக்குறளின் வடிவம் வேறுமாதிரி அமைந்திருக்கும். மொழியின் மரபுரீதியான மாற்றத்தை உணர்ந்தவரே "நன்னூலார்" ஆவார். அதனால்தான் அவர் தனது பதிவில் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல காலவரை" என்று கூறிச் சென்றார். 

இவ்வாறு இருந்த ஒரு காலகட்டம் வளர்ச்சியடைந்து வெளிநாட்டவர் வருகையுடன் உரைநடை இலக்கிங்கள் பெரிதும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதனால்தான் தமிழ் இலக்கியத்துள் மணிப்பிரவாளநடை என்ற பண்பு புகுத்துப்பட்டது. சோழர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் புலவர்களைப் போற்றுவதற்கு வலிமை பெற்ற வசதியான மன்னர் ஆட்சி தமிழகத்திலும் சரி மொத்த இந்தியாவிலும் சரி வலுவிழந்திருந்தது. அதனால் அக்காலக் காவியங்களில் ஒரு வரட்சிப்போக்குக் காணப்பட்டது. இதன் காரணமாக எழுந்த காப்பியங்களும்; நூல்களும்; மக்கள் கதைக்கும் பாங்கும் வித்தியாசப்பட்டு அவை படித்தவர்களுக்கே விளங்கக்கூடிய தகுதியைப் பெற்றிருந்தன. அதனால் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களின் பண்பு "தத்துவச் செருக்கு" "வித்துவக் காச்சல்" என்ற ஒரு பண்பைப் பெற்றது. 
இதன் செல்வாக்கு ஈழத்திலும் நாவலர் காலத்தில் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தது. நாவலர் கதைப்பதுபோல் மற்றவர்களுக்கும் கதைக்க ஆசை. தமிழ் கதைப்பார்கள். அது சாதாரண தமிழருக்கு விளங்காது. நாவலர் எதிரில் வந்துகொண்டு இருக்கும்போது அவரை இவர்தான் நாவலர் என்று தெரியாத ஒரு அரைகுறைத் தமிழ் படித்துவர் அவர் கதைப்பதைப்போல் தானும் கதைக்க ஆசைப்பட்டு நாவலரைப்பார்த்து "இவ்வழிச் சேரின் எவ்வழிச் சேரும்" என்று கேட்டார் (இந்த வழியால் சென்றால் எங்கே போகலாம் என்பது இதன் கருத்து). நாவலர் இவன் படித்தவனாகத்தான் இருப்பான் என்பதை மனதில் கொண்டு "சம்புகண்டம் கருதண்டம் புக்கு" என்று பதிலளித்தார். (அதாவது நாவல்குழிக்கும் கைதடிக்கும் போகலாம் என்பது இதன் கருத்து).  கேள்வி கேட்டவருக்குப் பதில் விளங்கவில்லை. இடத்தைக் காலிபண்ணிவிட்டார். 

இவற்றைவிட "குழுஉக்குறி" என்று தமிழில் ஒரு பண்பு இருக்கிறது. இது குறிப்பிட்ட  குழுவினருக்கே விளங்கும் சொற்களாகும். இது விடையம் தெரியாதவர்களுக்கு மிகவும் கடுப்பு ஏற்றும் மொழிநடையாகும். "என்னைப்பற்றி தந்தையாரிடம் பாக்குவைத்தான்" என்றால் கோள்மூட்டிக் கொடுத்தான் அல்லது இக்காலச் சினிமாத் தமிழில் போட்டுக்கொடுத்தான்என்ற கருத்தைக் கொண்டுள்ளது. கொச்சைத் தமிழில் ஆப்பு வைத்தான் என்றும் கூறலாம். ஆனால் இந்த குழுஉக்குறி என்பது சமுகத்தவரால் பேசப்படும் வழக்கில் இருந்தது. தற்கால இளைஞர்கள் கூட இப்படியாக குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக வெளிநாட்டில் ஆபிரிக்காக் காரனை நாம் கானாகாரன் என்பதும் ஒரு குழுஉக்குறி தான். 

காளமேகப் புலவர் காலத்தில் சிலேடைத் தமிழ்வழக்கு மரபில் இருந்தது. அதாவது இரண்டு பொருட்களை ஒரே பாடலில் சொல்லும் திறமை. காளமேகப்புலவர் "ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்...." என்று தேங்காய்க்கும் நாய்க்கும் ஒருபாடல் பாடிருக்கிறார். அதேபோல் "நைஞ்சிருக்கும் தோல் கழற்றும் நாதர்முடி மேலிருக்கும்...." என்று பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் ஒரு பாடல் பாடி இருக்கிறார். எங்களது உயர்தரம் படிப்பித்த வாத்தியார் சிலேடை என்பதை "டிபிள்மீனிங்" என்று படிப்பித்தார் எங்களுக்கு உடனே விளங்கிவிட்டது. அதற்குப்பிறகு நானிருந்த ஆண்கள் விடுதியில் இதுதான் கொஞ்சக் காலம் எங்களை வாழவைத்தது. விடையம் என்னவென்றால் இந்த "டபிள்மீனிங்" வாத்திமாருக்கு கூட விளங்காது. "கொத்துது மச்சான்" என்றால் குறிப்பிட்டபெண் தன்னைப் பார்க்கிறது என்று பொருள். இப்படிப் பல சொற்கள் இருக்கின்றன. 

ஆடை இல்லாமல் பால் கொண்டு வந்தாள்; கொஞ்சலாம் பெண்ணை (கொஞ்ச லாம்பு எண்ணை); மணியஞ்சாகப்போகிறது (மணி ஐந்து ஆகப்போகிறது); பால் கறப்பது எப்படி பஞ்சபாண்டவர் பிறந்ததெப்படி (விடை குந்தியிருந்து); இப்படிப் பரீட்சைக்குத் தேவையில்லாத பலவற்றையும் குழுஉக்குறியாகவும் சிலேடைத் தமிழாகவும் கற்றுக்கொண்டவர்களில் நானும் ஒருவன்.

இவற்றைவிடக் கிராமங்களிலும்; நாட்டுப் புறங்களிலும்; பல வகையாக சொற்கள் பாவிக்கப்படுகின்றன. அமரிக்காவில். ஒருவர் வந்து Johson எங்கு இருக்கிறது என்று கேட்டால் பாத்றூம் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார் என்பது கருத்து. சிறியவகதில் சின்னவிரலை காட்டினால் அதற்கு ஒரு கருத்து இருக்கிறது. சர்வதேச ரீதியில் நடுவிரலை காட்டினால் ஒரு கெட்ட வார்த்தை இருக்கிறது. சுவிசில் காரோட்டிகள் காருக்குள் இருந்து இன்னொரு காருக்குள் ஓடுபவருக்குக் காட்டினால் தண்டனை உண்டு. ஈழத்தில் போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் வெளிநாடுபோகவந்த ஒருத்தர் விமானநிலையத்தக்குள் அவசர அவசரமாக நடந்து சென்றபோது ஆமிக்காரன் (கோய்த யன்னே) "ஏய் எங்கே போகிறாய்" என்று கேட்ட அவரும்(மம இக்மட்ட பம் கரண்டோண) "நான் அவசரமாகப் "பம்பண்ணப் போகிறேன்" என்று சொல்லித்  தடுப்புக்காவலில் அவரைப் போட்ட கதைகளும் உண்டு. 

வளவுக்குள் போய்விட்டு வாறன்; கால் கழுவிவிட்டுவாறன்; கொல்லைக்குப் பேகிறேன்; குழத்தைக்கு போய் வருகிறன் என்பதெல்லாம் காலைக்கடன் முடித்து வருவதைக் குறிக்கும் சொற்களாகும். இடக்கர் அடக்கல் என்பதும் இதேமாதிரியாக சில விடையங்களை இடத்திற்கு ஏற்றதுபோல் அடக்கி வாசித்தல் அல்லது சொல்லுதல். இது ஓரளவு தமிழ் இலக்கணம் தெரிந்தவர்களுக்குத்தான் விளங்கும். இடக்கர் அடக்கல் என்றே பல சொற்கள் தமிழ் இலக்கணத்தில் உண்டு. மலசலம் கழிக்க ஒருவர் சென்று வரும் இடத்து அவர் சபையில் வந்து பகர ஈகாரம் செய்து வருகிறேன் என்பார். அது ஒருவருக்கும் விளங்காது. பகரம் என்றால் "ப்" ஈகாரம் என்றால் "ஈ". இரண்டையும் சேர்த்து வாசியுங்கள் அவர் எங்கு சென்றுவந்தார் என்று உங்களுக்கே இலகுவாக விளங்கும். இதைத்தான் இடக்கர் அடக்கல் என்று இலக்கணகாரர் வகுத்துள்ளார்கள். கவிஞர் பாரதிதாசன் இவ்வாறான ஒரு அவசரத்தைத் தனது பாடலிலே குறிப்பிட்டிருக்கிறார். 
"நாவில் இடுகையில் நடுவயிறு வலித்தது
வெளிக்குப் போகவேண்டும் என்றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன் விடேன் என்றது
கொல்லையை நோக்கிச் செல்லவும் துடித்தான்
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வல்லம்பு போல மிகவும் விரைவாக
நடுவில் கிடந்த நாயை மிதித்துப்
படபடவென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால் தடுக்குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ பூட்டுப்
புரண்டெழுந் தோடிப்போனான் கொல்லைக்கு"

இடக்கர் அடக்கல் என்பது. அந்த வார்த்தையைச் சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதே தவிர செய்யாமல் இருக்கவேண்டும் என்பதல்ல. உலகக் கணக்கெடுப்பின்படி Johson கள் குறைந்துகொண்டு வருகிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது.  முந்துங்கள். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஊமை விழிகள்


எனக்கு சில நேரங்களில் சில கேள்விகள் மனதைப் போட்டு துழைக்கும். தெரியாவிட்டால் போர்த்துக்கோண்டு படுத்துவிடுவன். குளிருக்கு ஐரோப்பாவில் அதுதான் ஒரு சொர்க்கமாக எனக்கு தெரியும். ஆனால் எனது ஒரு நண்பன் இப்படிக் கூறினான். "இவரை நின்மதியாகப் படுக்கவிடக்கூடாது என்பதில் சில சத்திராதிகள் கவனமாக இருக்குமாம்.  பொருட்களை நிலத்தில் போடுவது; தொலைபேசியைச் சத்தமாகக் கதைமப்பது; கதவை அடித்துச் சாத்துவது; கூவர் பிடிப்பது; தையல் மெசினில் தைப்பது; தொலைக் காட்சியை பெரிதாகப் போடுவது; இவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு படுத்தாலும் சிலர் புறுபுறுத்துக்கொண்டு இருப்பார்கள் அவற்றைத் தாங்கிக்கொண்டு படுக்க முடியாது" எனறு சொன்னார். பாவம் அந்த நண்பர் மாடாக உழைத்து ஓடாகிப்போய் தனது நித்திரையை வீட்டிலேயே தொலைத்துவிட்டுத் திரிகிறார். இதைவிட செவிடனாகவே பிறந்திருந்தால் மற்றவர்களின் தொல்லைகளை கேட்காமல் சந்தோசமாக இருந்திருக்கலாம் என்றும் சொன்னார். 

சிறியவயதில் எங்கள் தமிழ்வாத்தியார் ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் ஒரு குருடன். அவனது பிள்ளைக்கு பால் பருக்கும்போது மூச்சுத்திணறி பிள்ளை இறந்துவிட்டது. குருடன் பால் எப்படி இருக்கும் என்று கேட்டான். பருக்கியவர் கொக்குப்போல் வெள்ளையாக இருக்கும் என்று பதில் அளித்தார். குருடன் கொக்கு எப்படி இருக்கும் என்று கேட்டான். பருக்கியவர் தனது கையை கொக்குப்போல் உருவகித்து இப்படி இருக்கும் என்று சொன்னார். குருடன் கையைத் தடவிப் பார்த்துவிட்டு இதை விழுங்கினால் பிள்ளை சாகும்தானே என்று சொன்னான். யானையின் காதைத் தடவிப் பார்த்து சுழகு போலிருக்கிறது என்று சொன்னவனும் குருடன்தான். எனக்கும் குருடன் என்று சொன்னதும் ஒரு ஞாபகம் வருகிறது. 10ம் வகுப்பு (G.C.E O/L)அரசாங்கப் பரீட்சைக்கு ஆங்கிலக் கட்டுரைக்கு "குருடன்" என்ற தலைப்பைப் பாடமாக்கிக் கொண்டு சென்றேன். பரிட்சை வினாத்தாளில் ஒரு பிச்சைக்காரனைப்பற்றிக் கட்டுரை எழுதும்படி கேட்டிருந்தார்கள். உடனே நான் " எனது பிச்சைக்காரன் ஒரு குருடன் என்று முதல் வரியை எழுதிவிட்டுப் பின்னர் குருடனைப்பற்றி பாடமாக்கிய கட்டுரையை எழுதி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டன். குருடர்களை ஐரோப்பாவில் மிகவும் கண்ணியமாகப் பார்க்கிறார்கள். தனியாக வெளியில் செல்லும் அளவிற்கு பழக்கப்பட்ட நாய்களை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. சுவிசில் தாள் காசுகளில் குருடர்கள் தடவிப்பார்த்து கண்டுபிடிப்பதற்கு அடையாளம் வைத்துள்ளார்கள். டென்மார்க்கில் நடை பாதைகளில் குருடர்கள் நடப்பதற்கென்று வித்தியாசமான கற்கள் பதித்துள்ளார்கள். அதில் நடந்துசென்றால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு குருடனைத் தெருவில் கண்டால் வலியச் சென்று உங்களுக்கு நான் உதவிசெய்வது பிடிக்குமா என்று தயவாகக் கேட்டு உதவி செய்வார்கள். காரோட்டிகள் ஒரு குருடனை கார் ஓடும் பாதையில் கண்டால் ஹாண் அடிக்கக்கூடாது என்ற சட்டம் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். வலது குறைந்தவர்களுக்கு வாழ்வழிக்கும் ஐரோப்பாகவில் வாழ்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கலோ! என்னை வலதுகுறைந்தவன் என்று நினைத்துவிடாதீர்கள். 
ஊமைகளுக்கென்று பாடசாலலை; போக்குவரத்து; இலவச கல்வி; இலவச விளையாட்டுத்திட்டம்; அரச உதவிப்பணம் எல்லாம் கிடைக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு மொழியையும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதாவது கைப் பாசை. நான் ஆரம்பத்தில் சுவிசுக்கு வந்தபோது கைப்பாசை பெரிதும் உதவியது. அது தான் சர்வதேச மொழி என்பதை அன்று உணர்ந்து கொண்டன்.  ஊமைப் பெண்களும் ஆண்களும் ஒரே பாடசாலைகளில் கல்வி பயில்கிறார்கன். காதலிக்கிறார்கள். திருமணம் செய்கிறார்கள். ஆனால் ஊமைகளுக்கு அரசாங்கம் ஒரு அநியாயத்தையும் செய்கிறது. அதாவது அவர்களுக்குக் குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக ஏதோ ஒருவிதத்தில் தடையையும் செய்து விடுகிறது. காரணம் இன்றி தண்டிக்கப்படுபவர்களில் இவர்களும் அடங்குகிறார்கள். இவர்களுக்கு மூக்கைச் சொறிந்தால் கோபம் வரும் என்று எனக்கு தெரியும். எங்கள் கிராமத்தில் ஊமைக்கு முன் நின்று மூக்கைச் சொறிந்து அவர்கள் துரத்திவர ஓடியும் இருக்கிறேன்.  அதைக் கணக்குப் பண்ணிப் பார்த்தால் எனது வேகத்தில் உலக சாதனை படைத்திருக்கலாம்.  உலகசாதனை 100மீட்டர் 9.8 வினாடியில் ஓடியிருக்கின்றார்கள்.  நான் பாடசாலையில் 15 வயதில் 5அடி.2 அங்குலம் (அப்போது எனது உயரம்) பாய்ந்திருக்கிறேன். இதனால் நான் மதில் பாய்ந்து விடுவேன். மற்றவர்கள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஐரோப்பாவில் ஊமைகளுக்குமுன் நமது மூக்கைச் சொறிந்தால் அவர்களுக்குக் கோபம் வருவதில்லை. பழக்கப்பட்டு விட்டார்களோ அல்லது பயிற்றப்பட்டுவிட்டார்களோ எனக்குத் தெரியாது. 

இன்று ஒரு ஊமையும்; ஒரு செவிடனும்; ஒரு குருடனும்தான் எனது கதையின் கதாநாயகர்கள். இந்த மூன்றுபேரும் உயிருக்குயிரான நண்பர்கள். நண்பர்கள் மாத்திரமல்ல ஒருவருக்கு ஒருவர் இயன்ற உதவிகளைச் செய்து வாழ்பவர்கள். ஒரே வீட்டில் 3 அறைகளில் தனியாக வாழ்ந்தவர்கள். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது. பின்னரும் அதே வீட்டில் அவரவர் பாட்டில் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். மனைவிமார் வந்த படியால் ஒருவருக்கு ஒருவர் இப்போது உதவிசெய்வதில்லை.  மிகவும் சந்தோசமாக வாழ்க்கை போகிறது. சண்டையும் வரும் சமாதானமும் வரும். "சண்டை சமாதானம் பெண்டில் அவதானம்" என்று ஒரு பழமொழியும் சொல்வார்கள். ஒரு நாள் ஒரு விபரீதம் நடந்துவிட்டது.  திட்டம் போட்டு காரியம் செய்ததுபோல் குருடனது மனைவியைச் செவிடன் கெடுத்துவிட்டான். செவிடன் கெடுத்ததை ஊமை பார்த்துவிட்டான். ஊமை குருடனது மனைவி கெடுக்கப்பட்டதைக் குருடனுக்குச் சொல்லப் போகிறான். அவன் எப்படிச் சொல்லுவான் என்பதே ஆரம்பத்தில் என் மனதைப்போட்டுத் துழைத்ததற்குக் காரணம்.  பின்னூட்டம் எழுதும் நண்பர்களே எனது குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள். நான் நின்மதியாக நித்திரை கொள்ளவேண்டும். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு தபால்காரன்.



பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். அது ஒரு வெள்ளைக்கார வீடு. அங்கு ஒருதாய்; ஒரு தகப்பன்; 3 பிள்ளைகள்; ஒரு நாய் போன்ற உயிர்கள் வாழும் சிறிய வீடு. இடைக்கிடை இசை வாத்தியங்கள்.  பின்னர் வெளியில் நின்று சிகரட் பிடிப்பவர்களின் புகை வாசம்.  நான் பாடசாலையிக்குப் பக்கத்தில் நிற்பது போல் ஒரு சத்தம்.  உலகத்தில் பல நாட்டுப் பாடசாலைகளுக்குப் பக்கத்தில் நான் நின்று கேட்டிருக்கிறேன் எல்லா இடத்திலும் ஒரே சத்தம் தான். மொழி அதற்கு ஒரு தடை இல்லை.  பின்னர் பல்கலைக்கழக நூல் நிலையத்தில் தோன்றுவதுபோல் ஒரு மயான அமைதி அந்த வீட்டில். மழை நீரில் குமிழி விழுந்து வெடிப்பது போல் பல சத்தங்கள். எனக்கு வெளியில் சென்று வந்த களைப்பு. அதைவிட மீசையில் பனி உறையும் குளிர் வேறு. ஒரு கிலோ சீனிவாங்கப் போவதற்கு 25 கிலோ உடையணியும் கடும் வின்ரர். தொலைக்காட்சியைத் தட்டிப் பார்த்தேன். vijai தொலைகாட்சியில் கள்ளச் சாமிகளைப்பற்றி ஒரு தொடர். கலைஞர் தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் அடுத்த பிரபுதேவா யார் என்ற ஒரு போட்டி நடனம். தீபம் தொலைக்காட்சியை தட்டினேன். அதில் ராசிபலன் பற்றி ஒருவர் எல்லா ராசிகளுக்கும் பலன் சொல்லிக்கொண்டிருந்தார். அது எனக்குக் கொஞ்சம் பிடித்திருந்தது. எனது ராசிபலனைப் பார்ப்பதற்காக உட்காந்தேன்.  பலன் சொல்பவர் இப்போது இடப ராசியில் நிற்கிறார். நான் கடைசி மீனராசி. மீனராசியில் பிறப்பவர்களுக்கு இது கடைசிப் பிறப்பு என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன்.  அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.  பொறுத்துப் பார்ப்பதாக முடிவு எடுத்துவிட்டேன். 30 நிமிடம் சென்றுவிட்டது. அதற்கிடையில் 9 விளம்பரம் வந்து போய்விட்டது.  2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற மலிவு விற்பனை விளம்பரமும் அதில் வந்து போனது.  ராசி பலன் சொல்பவர் துலாம் ராசிக்கு பலன் சொன்னதும் மீதி பலன்கள் மறுநாள் இதேநேரம் ஒளிபரப்பப்படும் என்ற அறிவித்தலுடன் காட்சி மாறியது. மாதாமாதம் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குக் கட்டும் பணத்தின் கணக்கை மட்டும் மனதிற்குள் பார்த்துவிட்டு; பக்கத்துவீட்டு சத்தங்களே பரவாயில்லை என்பதுபோல் இருந்தது.  எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும். தமிழ்த் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வருகிறார்கள். பெண்களை மட்டும் ஏன் 16 முழ சேலை கட்டச்சொல்லி நிர்வாகிகள் பணிக்கிறார்கள்.  இது சம்பந்தமாக ஒரு ஐரோப்பாவில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் கதைத்துபோது "வேட்டி சட்டை சால்வையில் வந்தால் நாட்டான்; காட்டான் மாதிரி இருக்கும் என்று பதில் அளித்தார். அப்போ பெண்கள் நாட்டுக் கட்டைகளோ என்று கேட்டேன்.  "உங்களைமாதிரி அரைவேக்காடுகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை" என்று விட்டு தொலைபேசியைத் தானாகத் துண்டித்துவிட்டார்.  இவர்தான் ஒருமுறை சிறுவருக்கான தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் "கிளி" க்கு "ளி" என்ற எழுத்தா "ழி" என்ற எழுத்தா வரும் என்று கேட்க; இரண்டில் நீங்கள் எது வேண்டும் என்றாலும் போடலாம் என்று பதில் அளித்துவர். 

இப்போது பக்கத்து வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. ஒரு புல்லாங்குழல் இசைமட்டும் இதமாக வந்து கொண்டிருந்தது. ஒரு மூங்கில் மரத்தை முழுதாகச் சாப்பிடும் அளவு நேரம் இசை ஒலித்தது. அதில் மக்கல் யக்சனின்; விட்னிகூsடன்; ரினாரேணர்; யெனிபர்றs; லயணல்றிச்; மடோனா; சப்றீனா சமந்தாபொக்s,  போன்றவர்களின் ஆங்கிலப் பாடல்களை ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார். நானும் புல்லாங்குழல் பழகினால் என்ன என்ற உத்வேகம் எனக்கு வந்தது. விடிந்ததும் பக்கத்து வீட்டு பெரிய மகன் வெளியில் தகப்பனின் காரில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றிக்கொண்டிருந்தான். நானும் எனது காரில் உறைந்தபனிப் படலங்களை அதற்குறிய கருவிகளால் அகற்றிக்கொண்டு இருந்தேன். தெருவெலலாம பனியால் மூடப்பட்டிருந்தது. அதில்தான் எனது பயணம் தொடங்கப்போகிறது. "பனி படர்ந்த பாதையில் பயணம் ஏது" என்று பாடிய கண்ணதாசனையும் அழைத்துச் செல்லவேண்டும்போல் எனக்கு ஆசையாக இருந்தது.
இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்கிறோம் .  அவன் ஒன்றும் கதைப்பதாக இல்லை. சூரியனை நல்ல விலைக்கு விற்று விட்டதுபோல் பூமியில் காலை 9 மணியாகியும் வெளிச்சம் வரவில்லை.  டென்மார்க் என்பதை "இருள்சூழ்ந்த பனிநாடு" என்று வெள்ளைக்காரர் பெருமையாகச் சொல்வார்கள். நானே அவனிடம் சென்று இரவு நீ நன்றாகப் குல்லாங்குழல் வாசித்தாய் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் என்றேன்.  வெள்ளைகள் சிரித்தால் கடைக்கண் கன்னங்கள் சுருங்கும். அப்படி இவனும் சிரித்தான். எனக்கு ஏன் சிரிக்கிறான் என்று விளங்கவில்லை. பாசையைப் பிழையாகக் கதைத்ததாக நான் நினைத்தேன். அவன் கூறினான். அது நான் வாசிக்கவில்லை. ஒரு தமிழ் இந்திய புல்லாங்குழல் வித்துவான் ஆங்கிலப் பாடல்களை புல்லாங்குழலில் அமரிக்காவில் வாசித்த வீடியோவைப் பார்த்தேன் என்று பதில் கூறினான். எனக்கு இடத்தைக் காலிபண்ண வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் பனிதட்டி முடியவில்லை. அவனது தாயார் இன்னும் தட்டி முடியவில்லையா? வேலைக்கு நேரமாகிறது என்ற ஒலியுடன் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.   இவன் கிளம்பும்போது தாயார் பத்திக்கொண்டிருந்த அரைவாசிச் சிகரட்டை வாங்கிப் பத்திக்கொண்டு வாகனத்தை start பண்ணினான். உங்கள் மகன் எங்கு வேலை செய்கிறார் என்று கேட்டேன். அவள் "இவர் எனது மகன் இல்லை; எனது புதிய புருசனின் மகன்" என்றாள். நான் விளங்கிக்கொண்டேன்.  தபால் அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டாள். 

தபால் அலுவுலகம் என்றதும் எனக்கும் ஒரு அனுபவம் உண்டு . சாதாரண 10ம் தரம் படித்துவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் காலத்தில்-. எனக்கு 17 வயது இருக்கும். கிராமத்து தபாலகத்தில் தந்தி கொடுக்கும் வேலை கிடைத்தது.  இப்படியே வேலை செய்து செய்து post master ஆகிவிடலாம் என்று நினைத்தன். நாள் முழுவதும் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு தந்தியும் வரவில்லை.  post master க்கு கடைக்குப்போய் சாமான் வாங்கி கொடுத்ததும்; இன்னுமொருவருக்கு மதிய சாப்பாடு அவரது வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து கொடுத்ததும் தான் மாலை 4 மணிவரை பார்த்து வேலை. ஆபீசு முடியும் தரவாயில் ஒரு தந்திவந்தது. எங்கள் கிராமத்தில் ஆதிகாலத்தவர் முத்துக்கள் குளித்தனராம். இப்போ அதே பரம்பரை சங்கு குளிக்கிறது. (கடலில் சங்கு எடுத்துல்) அப்படி சங்கு குளிக்கச் சென்றவர் ஒரு வலமபுரிச்சங்கொன்றை எடுத்துவிட்டார். அது மிகவும் பெறுமதிகூடியது. அநத மகிழ்ச்சியை வீட்டுக்கு தந்தி மூலம் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட விலாசத்திற்கு கொண்டு செல்கிறன். என்னைக் கண்டதும் தந்தி என்றேன். சங்கு குளிக்கச் செசன்றவர் ஒருவர் கடலோடு போய் விட்டார் என்பதுதான் தந்தி என்று நினைத்து சிலர் அழத் தொடங்கி விட்டார்கள். குறிப்பிட்ட நபரக்கு தந்தியை கொடுத்தேன். உடைதது வாசிக்கச் சொன்னார். அவரது மகன் தங்கராசா வலம்புரிச்சங்கை எடுத்திருப்பதாக வாசித்து காட்டினன். மிகவும் மகிழ்நதார்கள். என்னை கட்டி தழுவினார்கள். "தம்பிக்கு ஒரு 5 ரூபா கொடுத்து விடடி என்று தன் மனைவியையும் அதட்டினார். நான் வேண்டாம் என்றேன். தம்பி அப்பசரி நாளை நல்ல மீன் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுக்கிறேன் என்று சொன்னார்.  மிகவும் பாராட்டி வழியில் அரைவாசி தூரம்வரை வந்து சந்தோசம் அடைந்தார்கள். கடமையைச் செய்த சந்தோசம் எனக்கும் ஏற்பட்டது. 

மறுநாள் நான் வேலைக்குச் சென்றேன். அதிகாலையிலேயே அதே விலாசத்திற்கு ஒரு தநதி ஒட்டப்பட்டு இருந்தது. கொண்டு சென்றேன். மக்கள் அயலவர் குவிந்து விட்டார்கள். யார் வலம்பரிச்சங்கு எடுத்தார்கள் என்று அறிய அவா. தங்கராசாவின் தாயாரும் நின்றார். தந்தியை உடைத்தேன். "தங்கராசா மரணம்; பந்தல் போடவும் மாலைக்குள் கொண்டு வருகிறோம் என்று இருந்தது. 

என்னைச் சுற்றி ஒரு மரண ஓலம். நேற்று என்னை வாழ்த்திய அதே ஆட்கள் "பாழ்பட்டுப் போடுவான் விடிய விடிய வந்தானே; பிள்ளையை கொல்லிப் போட்ட அறிவித்தலோட வந்தானே; நீயும் ஒரு தாய் பெத்து பிள்ளைதானே; நீ உருப்படுவாயா" என்றெல்லாம் திட்டினார்கள்.  எனக்கும் கவலை வந்தது. நான் என் கடமையைச் செய்தேன்.  பலன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை என்ற துணிவு எனக்கு ஏற்பட்டது.  ஆனால் நான் சாதாரண ஒரு தபாற்காரனாக என் கடமையைத்தான் செய்தேன். இந்தத் தத்துவத்தையே கீதையில் கண்ணன் அருச்சுனனுக்கும் உபதேசம் செய்கின்றார். கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள். நம்மில் சிலர் பலனை எதிர்பாராதே என்பதை அதனால் வரும் இலாபம் என்று பிழையாக விளங்கிவிடுகிறார்கள். பனி தட்டிய என் கார் பிரதான தெருவை அடைந்தது. எனக்கு முதல் வெளிக்கிட்ட பக்கத்து வீட்டு பொடியன் பனியில் சில்லு வழுக்கி ஒரு மரத்துடன் மோதியபடி அவரது கார் நின்றதைக் கண்டேன். எனக்கு அடுத்த மரம் தயாராக இருப்பதுபோல் தெரிந்தது. கவனமாக ஓடுகிறேன். மரம் கழிந்துவிட்டது. இனி நேர் பாதைதான். சென்று வருகிறேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வலவன் ஏவா வானூர்தி.



0 R
பறத்தமிழன்; பனங்கொட்டை இது சிங்களவன் தமிழரை இயல்பாகச் சொல்லும் வார்த்தைகள். விடுவானா தமிழன் "மோட்டுச் சிங்களவன்" இது தமிழர் சிங்களவனைப் பார்த்துக் கூறும் வார்த்தை. சிங்களவன் மோடனாக நடித்ததை நம்பி முட்டாள் ஆகியவன் இலங்கைத் தமிழன். பட்டங்கள் சூட்டுவதைத் சிலர் தமது பரம்பரைப் பொக்கிசமாக நினைத்த நினைவுகளுடன் அகதியாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள். விமானத்தில் ஏறி மானத்தைப் பறக்கவிட்ட பெரும்பான்மைத் தமிழர்கள்தான். இன்று உலக அரங்கில் தாங்கள்தான் பிரபஞ்சத்தின் நடுப்புள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்து ஆளுக்காள் கருத்து முரண்பட்டு பலதரப்பட்ட முகமூடிகளை அணிந்தவர்களும் தமிழர்கள்தான். முகமூடிகளைக் கழற்ற மனமின்றி முகமூடிகளையே முகமாக்கிக் கொண்டவர்களும் பெரும்பாலான தமிழர்கள்தான்.
இரண்டு பேர் சந்தித்தால் ஆங்கிலத்தில் கதைத்து இருபதுபேர் சந்தித்தால் சங்கம் அமைத்தவர்களும் தமிழர்கள் தான். ஐரோப்பாவில் 10 தமிழ் கோவில் இருந்தால் அங்கு 9 சண்டைகள் நடந்திருக்கும். 11வது கோவில் அமைப்பது 10வது கோவிலில்வரும் சண்டையைப் பொறுத்து இருக்கிறது. 

ஈழத்துமிழரின் எதிர்கால வெளிநாட்டு வாழ்க்சைச் சூழல் இப்படி இருக்கப்போகிறது என்று தெரியாத ஒரு காலகட்டத்தில்தான் இலங்கை மத்தியவங்கியில் வேலைசெய்துவிட்டு நானும் 2 வருடம் வெளிநாட்டில் உழைப்புடன் படிப்பையும் பார்க்கலாம் என்று சுவிசில் வந்து இறங்கி 29வது தமிழர் என்ற சிறப்பப் பெயரைப் பெற்றேன்.  1983ம் ஆண்டு தைமாதம் 14ம் திகதி சுவிசின் தலைநகரத்தில் தமிழர் பொங்கல்விழா ஒன்று வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். கவிஞர் கண்ணதாசன் கூறியதுபோல "கடல்கடந்தான் தமிழன் கற்பூரதீபம் கண்டான் இறைவன்" என்றதுபோல் கடவுளுக்கு படைத்து கற்பூரதீபம் காட்டி புக்கையும் சாப்பிடத் தந்தார்கள் சாப்பிட்டேன். பிரசாதம் சாப்பிட்டவர்கள் உண்டியலில் காசுபோடவேண்டும் என்று ஒரு அறிவித்தலும் பிரசாதம் பரிமாறியபின் சபைநடுவில் வைக்கப்பட்டது. அப்போதுதான் அந்த அகதிமுகாமில் பலநாட்டு மக்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாட்டுக்காரருக்கு ஒவ்வொரு பட்டப்பெயர் சூட்டி அழைத்தார்கள்.

சீனா வியட்னாம் தாய்லாந்து போன்ற மக்களை "சப்பட்டை" என்று அழைத்தார்கள். ஆபிரிக்காக் கண்டத்து அனைத்து மக்களையும் "கானா" காரன் என்று அழைத்தார்கள். ஈரான் ஈராக் போன்ற இடத்தில் இருந்து வந்தவர்களை "எண்ணைக்காரன்" என்று அழைத்தார்கள். ஆனால் தமிழர்களைப் பார்த்து சுவிற்சலாந்து மக்கள் "கப்புசீனோ" என்று அழைப்பது அப்போது பலருக்குத் தெரியாமல் இருந்தது. 
நான் லண்டன் செல்லும் விமானத்திற்குள் இருக்கின்றேன். டென்மார்க்கில் இருந்து விமானம் புறப்பட்டது. பிரயாணிகளாக அகதித்தமிழன் கொடுத்த பட்டத்தை உடையவர்களே காணப்பட்டார்கள். செக்கின் முடித்து பிரயாணிகள் தங்கள் விமானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டேன். அந்த அறையே நடுங்குவதுபோல் ஒரு மனிதன் வந்தான். மிகவும் பயந்துவிட்டேன். இவன் எனக்குப் பக்கத்தில் இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.கடவுளும் எனக்கு "யாம் இருக்கப் பயம் ஏன்" என்பதுபோல் வேறு இடத்தில் அவனை விமானத்துள் உட்காரவைத்தார்.
ryanair என்ற விமானம் மேலெழுந்து சென்ற சற்று நிமிடத்தில் பக்கத்தில் இருப்பவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரது பற்கள் மிகவும் அழகாக இருந்தன.  அவர் ஒரு "கானா" காரன். மிகவும் ரசித்து ரசித்து வேப்பம் குச்சியால் பல் துலக்கிக்கொண்டு இருந்தார். நான் அவரை ஒரு புகைப்படம் வேப்பம் குச்சியுடன் எடுத்துவிடவேண்டும் என்பதற்காக அவருடன் கதைத்தேன். அவரது பெயர் முகமட். சோமலியாவில் இருந்துவந்து டென்மார்க்கில் குடியேறி தனது உறவினரைப் பார்க்க லண்டன் செல்கிறார். தரையிறங்கும் அறிவித்துல் தரப்பட்டதும் முகிலுக்குமேல் வெளிச்சத்தில் பறந்து முகிலுக்குக் கிழே வந்ததும் உலகம் இருண்டுவிட்டதுபோல் பனிப்புகார் தென்பட்டது. முகமட் என்னைப்பார்த்து "ஏன் மேலே வெளிச்சமாகவும் கீழே இருளாகவும் இருக்கிறது தெரியுமா என்று கேட்டார். ஒருவிடையத்திற்கு பிழையான பதில் சொல்லும்போது நமக்கு இரண்டுவிடையங்கள் தெரியாது என்பதை நாம் காட்டிக்கொடுக்கிறோம். அதனால் தெரியாது என்று கூறிவிட்டேன். முகமட் "மேலே இறைவனும் கீழே சாத்தானும் இருப்பதால் இந்த நிலை" என்று பதிலளித்தார். முகிலுக்குக் கீழேவந்த விமானம் தரையில் ஓடத்தொடங்கியதும் ஓட்டுனர் இல்லாத விமானமா என்று கேட்கத் தோன்றியது. மிகவும் மெதுவாகத் தரையில் இறக்கினார் விமானி. பயத்தில் இருந்த சில பிரயாணிகள் தங்கள் கைகளைத்தட்டிப் பயத்தைப் போக்கிக்கொண்டனர். 
அப்போதான் எனக்குச் சங்ககாலப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று (புறநானூறு பாடல் 27. பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்துனார்) ஞாபகம் வந்தது. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானூர்தி எய்துப என்ப!. எந்தை சேட்சென்னி; நலங்கிள்ளி" இந்த வரிகளின் கருத்து என்னவென்றால் நளங்கிள்ளி என்ற அரசனுக்கு அதாவது வலவன் என்னும் ஓட்டுபவன் இல்லாமலே வானில் பறந்திடும் விமானத்தில் செல்லும் வாய்புகள் கிடைத்தவர்களுக்கு வாழ்வின் உயர்வு அந்த வானத்தின் உயர்வுபோல் வந்துவிடும் என்பதாகும்.
2000 ஆண்டுகளுக்கு முதலே இவ்வாறான விமானி இல்லாத விமானம் பறந்ததா? இல்லாவிட்டால் புலவரின் கற்பனையில் ஓட்டுனர் இல்லாதவிமானம் பிரயாணிகளை ஏற்றிச் சென்றது எப்படி. அப்துல்கலாமின் கனவுகளுக்கு இந்தப் புலவர்தான் முன்னோடியா? இன்னும் பிரயாணிகளை ஏற்றிச்செல்ல ஓட்டுனர் இல்லாத விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிந்தனையில் இருந்த என்னைத் தட்டி முகமட் உங்களுக்கும் ஒரு வேப்பம் குச்சி தரவா என்று கேட்டார். நாங்கள் சிறியவயதில் இருந்தே கோபால் பற்பொடியைத்தான் தீட்டியதுபோக திண்டது மிச்சம் என்று சொல்லப் பார்த்தேன். ஆனால் ஒரு சிரிப்புடன் விடைபெற்றுவிட்டேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலைக்கண்ணாடி 12 இன் தொடர் "கோவையில் ஒரு தமிழர் யாகசாலை"



b
பக்கத்து அறையில் இருந்துவந்து பாடலை ரசித்தக்கொண்டு இருந்தநான் அடுத்து என்ன நூலை மணிவண்ணனன் கூடாக பதிவுசெய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது எனது அறையின் அழைப்பு மணி அடித்தது. அப்போது கவிஞர் வைரசும் என்னுடன் கூட இருந்தார். மணிவண்ணன் வந்தால் அவரை எப்படி வரவேற்பது; காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாமா? கட்டித்தழுவி அன்பைப் பகிர்ந்து கொள்ளலாமா என்பதை எல்லாம் நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
கதவைத் திறந்ததும் ஒரு தமிழ் ஒளி. அவர்தான் மணிவண்ணன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உலகத் தமிழரின் உச்சரிப்புக்களை அவர் முகத்தில் கண்டேன். தமிழுக்கு உலகத்தில் முகவரி எழுதும் ஒரு கலைஞனைக் கண்டேன். மெல்லத் தமிழ் இனி வாழும் என்று சொன்ன தீர்க்கதரிசியைக் கண்டேன். கட்டிப்பிடித்து ஆரத்தழுவி அன்பைப் பகிர்ந்து கொண்டு அவர் காலணிகளை வெளியில்கழற்றிய பாதங்களுடன் என் அறை புகுந்தார். 
வந்ததும் எனக்காக முதலில் வாங்கிவந்த இனிப்பான பண்டங்களைக் கையில் எடுத்து கோவையின் விருந்தோம்பலை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஐயாவுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று அடிக்கடி கேட்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். எனக்காக அவர் ஒழுங்கு செய்திருந்த நட்சத்திட விடுதியில் அன்று மாலைப் பொழுதைக் கழித்தோம். அவருக்காக நான் வாங்கிச் சென்ற எந்தவிதமான அன்பளிப்புப் பொருட்களையும் ஏற்க மறுத்துவிட்டார்.
மனிதர்களில் ஒரு மாணிக்கம் ஆகவே எனக்குத் தோற்றமளித்தார். மூச்சிலும் பேச்சிலும் தமிழைச் சுவாசிக்கும் ஒரு தமிழனை நான் பார்த்தது இதுவே முதல் தடவை என்று என் மனதிற்குள் நினைத்துப் பெருமிதம் அடைந்தேன். அன்று மாலை எனக்கான இராப்போசனத்தில் அவர் மட்டும் கலந்து கொண்டார். கோவையில் சினிமா நட்டச்திரங்கள் மட்டும் செல்லக்கூடிய ஒரு உல்லாச விடுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். அவர் ஒரு குருவின் உபதேசத்தால் மாமிசம் சாப்பிடுவதில்லை என்றும் தனது ஆன்மீகத் தேடல்கள் பற்றியும் தெளின விளக்கங்களை எனக்கு அளித்தார். எனது பார்வையில் அவரது செய்கைகனள் ஒரு சிறந்த மனிதனாக அதுவும் தமிழராகக் காட்சி தந்தார். என்னைவிடப் மேலான ஒரு பேராசிரியராக இருப்பவர் எனக்குத் தந்த மரியாதைகளை என் நூலுக்கான காணிக்கைகளாக நான் ஏற்றுக் கொண்டேன்.
மாலை உணவு முடிந்து திரும்பவும் விடுதிக்கு வந்ததும் என்னைத் தனியாக விட்டுச் செல்ல மனமின்றி அன்று இரவை என்னுடனேயே களித்தார். நான் அவரை கடினப்படுத்துகிறேனா என்று யோசிக்கும் அளவிற்கு அவர் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.
நான் தங்கியிருந்த விடுதிக்கோ மற்றைய செலவுகளுக்கோ எந்தவிதமான உதவிகளையும் எதிர்பார்க்காமல் தனது உழைப்பின் சேமிப்புகளை தமிழுக்காகவே அர்ப்பணிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து முக்கிய எழுத்தூளர்களையும் தனது தொலைபேசிக்குள் தொடர்பு இலக்கங்களை வைத்துள்ளார். திரு சேரன் அவர்கள் என்னுடன் கதைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொலைபேசியினூடாகவே செய்யும் அளவிற்கு மற்றவர்கள் மத்தியிலும் மணிவண்ணன் அவர்கள் பெயரும் புகழுடனும் விளங்குகிறார் என்பதை உணர்ந்தேன். இரவு இரவாகத் தமிழ் கதைத்து மறுநாள் எனது ஆத்மலயம் நூல் வெளியீட்டிற்காக ஆயத்தமானோம். 
மண்டபம் நிறைந்த அறிஞர் கூட்டம்; அத்துடன் சமூக அவலங்களைத் தங்கள் இதயத்துக்குள் பதுக்கி கவிதை செதுக்கும் கவிஞர்கள் பலரும் சமூகமளித்திருந்தார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும் மணிவண்ணன் தனது பெற்றோர்களையும் அழைத்துவந்திருந்தார். அவர்களிடம் நான் பெற்ற ஆசீர்வாதம் இந்த உலகத்தில் கிடைத்தற்கரியது ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எனது "ஆத்மாலயம்" நூலை சிபி ஐ .எ .எஸ் அகாதமியின் இயக்குஞர் திரு அரங்ககோபால்,தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்க பொதுச்செயலர் திரு பூ ஆ ரவீந்திரன்,கவிஞர் நாணர்காடன் மற்றும் தகிதா குழுமத்தார் சிறப்பாக வெளியிட்டு வைத்தனர்.
மணிவண்ணன் எனது நூலைப்பற்றிக் குறிப்பிடுகையில் "உலகத்தில் சமாதானப் புறாக்களைத் தன் ஒவ்வொரு சொல்லிலும் பறக்கவிட்டிருக்கும் ஓர் ஆசிய ஒளி" என்று பாராட்டிதோடு மட்டும் நின்றுவிடாமல் கங்கைமகன் அவர்கள் உலகத்துற்கு ஆத்மலயம் என்ற பொக்கிசத்தை அளித்திருக்கின்றார். உலகம் இவருக்கு எதைப் பரிசளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று தனது உரையை முடித்தார். 
இந்த உலகத்தில் பலர் தோன்றுகின்றார்கள். உலகம் சிலரைத் தோற்றுவிக்கின்றது. உலகம் தோற்றுவித்த ஒருவருக்கு நான் எனது ஆத்மலயம் நூலைப் பரிசளித்தேன். ஆத்மலயத்தை இவ்வாறு எழுதிவிட்டு நீங்கள் இன்னும் உங்கள் மனத்தின் புனிதத்தைப் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் நூலையே திருப்பி பலமுறை வாசியுங்கள் என்று நான் பரிசளித்த புத்தகத்தையே திருப்பி எனக்குப் பரிசளித்தார். அந்த ஆத்மாவின் வலிமையைப் புரிந்துகொண்ட நான் மகிழ்வுடன் அதனை ஏற்றுக்கொண்டேன்.
அவரையே என் குருவாகவும் முற்பிறவிப்பயனாக அடையப்
பெற்றேன். சிவபெருமானுக்கு முருகன் போதனைகள் செய்ததுபோல் எனது குருவானவர் என்னைவிடப் பலவயதுகள் குறைவாக இருந்தாலும் ஆன்மீக நாட்டத்திலும் ஒவ்வொரு வலிமை குன்றிய ஆன்மாக்களை வழிநடத்துவதிலும் மிகவும் அனுபவம் பெற்றவர். அவரின் வருகையின் பின்னரே நான் என்னை உணர்ந்தேன். எப்படியும் வாழலாம் என்ற எனது போக்கை மாற்றி இப்படித்தான் வாழவேண்டும் என்ற வழிகாட்டியாகவும் ஒரு தூண்டுகோலாகவும் என் உள்ளம் நிறைந்து வாழ்கின்றார். மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இவை முற்பிறப்பின் கர்மவிதியின்படி ஒருவருக்குக் கிடைக்கின்றது. அந்த வகையில் நான் பெருமைப்படுகின்றேன். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்வார்கள். அந்த இரண்டும் எனக்கு விதியின்வழி அமைந்திருக்கின்றது. இதுதான் உலகம் தந்த பரிசு என்ற மகிழ்வில் கோவையில் இருந்து சென்னை நோக்கிப் பயணமானேன்."மனதில் உள்ளதையே பேசு, பேசியதையே செயலாய் மாற்று. தவறு செய்திருப்பினும் அதை உண்மையாய் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு ஒரு தெளிவும் மன சந்தோசமும் கிடைக்கும். மீண்டும் அத்தவறை செய்ய மனம் அஞ்சும். மனதில் ரகசியம் இல்லை என்றால், எதற்கும் பயம் இல்லை. முயற்சித்து பாருங்கள், மனம் நிம்மதி பெறுவதை உணர்வீர்கள் என்று அன்போடு தட்டிக் கொடுத்த குருவை மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன்.  உண்மையை உரத்துச் சொல் கடவுள் உன்னைக் காப்பாற்றுவார் என்ற குருவின் போதனையில் எழுதியதுதான் நிலைக்கண்ணாடியில் நான் எழுதிய "மந்திரப்புன்னகை". எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று மணிவண்ணன் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளோடு என் பயணம் தொடர்கிறது. 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS