RSS

உயிர்மெய்


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி; பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி; கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்; வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய் .... இது தொல்காப்பியர் தனது இலக்கணநூலில் கூறியுள்ள ஒரு அறிவில் இருந்து 6 அறிவுவரையாக உயிரினங்களில் மறுபிறப்புப் தோன்றும் என்பதை மாணிக்கவாசகர் தனது பாடலில் வைத்த கருத்தாகும். 

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பிறந்த காலையின்கல்வியும் செல்வமும் தான் பெறுதல் அரிது....இது ஓளவையாரின் கூற்றாகும். 

ஒருமனிதன் 100 வருடங்கள் வாழலாம் என் வைத்துக்கொண்டால் 40 வருடங்கள் நித்திரையில் கழிந்து விடுகின்றது. 15 வருடங்கள் குழந்தைப் பருவத்தோடும் ஒன்றுமறியாப் பருவமாகவும் கழிந்து விடுகின்றது. மீதமுள்ள 45 வருடத்தில் படிப்பு;தொழில்; குடும்பம்; பிள்ளைகள்; நோய்பிணி; துன்பம்; மகிழ்ச்சி; பகை; கோபம்; முதுமை என்று கழிந்து இறப்புவரை சென்று விடுகின்றது. இதில் இறைவனை நினைக்கவோ ஆன்மிகத்தில் ஈடுபட்டு பொதுவாழ்வு வாழவோ ஒருவனுக்குப் போதிய அளவு அவகாசம் கிடைப்பதில்லை. டார்வினது கூற்றுப்படி மனிதன் உலக உயர்ந்த விலங்கினம் என்பதுவே சரியாக இருக்கின்றது. 

இவற்றின் அடிப்படையில் தொல்காப்பியத்தின் சூத்திரங்கள் கூறும் விளக்கங்களே இன்றுவரை பழமைவாய்ந்த தேசவழமைச் சட்டம்போல் இன்றுவரை மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கின்றது. 

உடம்பினால் அறிவது ஓரறிவு கொண்ட உயிர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. 
"புல்லும் மரனும் ஓரறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது புல் மரம் முதலியனவற்றோடு கொட்டி; தாமரை என்பனவும் இவற்றுள் அடங்கும். 

உடம்பினாலும் வாயினாலும் அறிவது ஈரறிவு கொண்ட உயிர் என்று வலையறுக்கப்பட்டுள்ளது. 
"நந்தும் முரளும் ஈரறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது நந்து முரள் போன்றவற்றோடு சங்கு நத்தை போன்றனவும் இவற்றுள் அடங்கும். 
உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறிவது மூவறிவென்று வரையறுக்கப்பட்டுள்ளது.
சிதலும் எறும்பும் மூவறிவினவேபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது சிதல் எறும்பு போன்றவற்றோடு அட்டை போன்றனவும் அடங்கும்

உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் அறிவது நான்கறிவாகும் 
"நண்டும் தும்பியும் நான்கறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது நண்டு தும்பிபோன்றவை இவற்றுள் அடங்கும்.

உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் அறிவது ஐந்தறிவாகும்
மாவும் புள்ளும் ஐயறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது நாலுகால் விலங்குகளும் பறவைகளும் பாமபு மீன் முதலை ஆமை போன்றனவும் இதனுள் அடங்கும். 

உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் (இவற்றையே ஐம்புலன்னள் என்பர்) மனத்தினாலும் (பகுத்தறிவு)அறிந்து கொள்ளுதல் ஆறறிவாகும்.
மக்கள் தாமே ஆறறிவுயிரே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!
அதாவது மனிதர்களுடன் தேவர்கள் அசுரர் இயக்கர் முதுலானவரும் இதனுள் அடங்குவர். 
ஒருசாரார் கிளி குரங்கு யானை முதுலானவும் ஆறறிவு உடையது எனக்கூறுவர். 

அறிவு என்பதனை பலபாகங்களாக வகுத்து நோக்கலாம்! கல்வி அறிவு கேள்வி அறிவு
அனுபவ அறிவு தன்னறிவு சொல்லறிவு நுண்ணறிவு
இயற்கையறிவு உணர்வறிவு தொழில்சார் அறிவு ஆள்மனப்பதிவறிவு
 அறிவை விளக்கும் திருவள்ளுவர்.
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
 நற்றின்பால் உய்ப்பது அறிவு.
பொருள்: மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்: எந்தப் பொருளைப்பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு.  
 வேதகாலத்தில் அறிவு.

 மேல் அறிவு. ஆன்மிகத்தேடல் மூலம் பெறும் அறிவு மேல் அறிவு எனப்பட்டது.
 கீழ் அறிவு. கலைகளில் உள்ளவை கீழ் அறிவு.

சமணம் மேலோங்கிய காலத்தில் அறிவு.
 நேர் அறிவு. சுய அனுபவம் ( பிறர் மனதினை உணருதலும் சுய அனுபவமாக கருதப்பட்டது).

வழி அறிவு. படித்து பெற்றவை, பிறர் சொல்ல கேட்டு பெற்றவை. பெற்றவை யாவும் வழி அறிவாக கருதப்பட்டது.

அறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகள்
விளங்கிக்கொள்ளல்; தெரிந்துகொள்ளல்; புரிந்துகொள்ளல்;கற்றுக்கொள்ளல்
உணர்ந்துகொள்ளல்;அறிந்துகொள்ளல; அனுபவப்படுதல்
 மேற்க்கண்ட யாவும் அறிவின் வரத்துக்கான பல்வேறு வழிகளாகும். இவ்வழிகள் யாவையும் எண்ணம் என்ற ஒன்று இல்லாமல் திறப்பது கடினம். தொடர்ச்சியான ஓங்கிய சிந்தனையின் மூலம்தான் அறிவின் கதவுகளை மெல்ல மெல்ல திறக்க முடியும். சிந்திக்கும் தன்மையும் அதன் விளைவை கிரகிக்கும் தன்மையும் இல்லாமல் அறிவு வளர்சியடைவதில்லை.
"தோன்றிற் புகழெடு தோன்றுக அகிதிலார் தோன்றலில் தோன்றாமை நன்றே" (குறள்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: