RSS

சகுனப்பிழை


அந்தக் காலத்தில் இப்போதைய தமிழ்நாட்டுத் திருமணங்களில் இருப்பதுபோல் சாந்திமுகூர்த்தம் என்ற சடங்குவரை மணமக்களைப் பிரித்து வைப்பதில்லை.சித்திரையில் புத்திரன் பிறந்தால் பார்ப்பானிய சமூகத்தை அடக்கியாளும் என்ற உண்மையை மாற்றுவதற்காகவே சித்திரையில் புத்திரன் பிறக்காமல் இருக்கப் பார்ப்பானியர்களால் சாந்திமுகூர்த்தம் கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. சித்திரையில் பிறந்த இராமன் உலகை ஆண்டான் என்பது ஒரு வரலாறு. பார்ப்பானியயர்கள் தங்கள் தொழிலுக்கு சித்திரையில் பிறப்பவர்கள் ஆப்பு வைத்துவிடுவார்கள் என்பதற்காகவே பாமர மக்கள் சமுதாயத்தில் அதனைக் கட்டாயப்படுத்தினர்.

திருமணத்தின் அன்றே சாந்தி முகூர்த்தம். மணமகன் மஞ்சத்தில் காத்திருக்கிறான்; மணமகளின் தோழிமார் கையில் பால்செம்பைக் கொடுத்து மணமகளை மஞ்சத்து அறைக்குள் தள்ளிக் கதவைத் தாழிடச்சொல்லிவிட்டு மணமகளுக்குப்பதிலாகத் தாங்களே கூடுதலாக வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டு ஓடிவருகின்றார்கள். அறைக்குள் என்ன நடக்கும் என்று தோழிமார் குசுகுசுவென்று ஏதோ ஏதோ எல்லாம் கதைக்கிறார்கள். முளைத்து மூன்று இலை விடாவிட்டாலும் தழைத்து வளரவேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு. தூரத்தில் இருந்த ஒரு பாட்டியும் இவர்களுடன் வந்து குந்திக்கொணடார். பாட்டி வந்தது இவர்களுக்குச் சங்கடமாகியது. "உங்களுக்கு ஒரு விசயம் சொல்லுவம் என்றுதான் இங்குவந்தனான்" என்று பாட்டி ஆரம்பித்தா. பாட்டியும் விடுப்புக் கதைக்கவந்துவிட்டா என்று நினைத்து தோழியருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பாட்டி கூறினார். இருவரும் மச்சானும் மச்சாளும் தானடி. ஆரம்பகாலத்தில் மஞ்சத்தான்; மஞ்சத்தாள் என்ற சொற்கள்தான் காலப்போக்கில் மச்சான் மச்சாள் என்று ஆகிவிட்டது. முன்பு ஆயுள்மத்திரமனை என்பதுதான் இப்ப "ஆசுப்பத்திரி" என்று நாமள் சொல்லுவதுபோல என்று பல உதாரணங்களும் கூறினார் பாட்டி. மஞ்சத்திற்குள் சென்று மணமகள் முதலாவதாக தனது கணவனின் காலில் விழுந்து வணங்கவேண்டும். அது ஒரு மரியாதைக்குரிய வணக்கம்தான். பிறகு மணமகன் மணமகளது காலில் விழுந்து வணங்கவேண்டும். அதாவது மணமகன் இவளவுகாலமும் கட்டிக்காத்த எனது மரியாதையையும்; குடும்பக் கொரவத்தையும் உனது காலடியில் காணிக்கை ஆக்குகிறேன். அதற்கு இழுக்குவராமல் நீ ஒழுக்கமுள்ளவளாக; குலமகளாக இருந்து என்னைச் சமூகத்தில் தலைகுனியாமல் நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே பெண்ணின் காலில் விழுந்து மணமகன் வணங்குகிறார். கேட்டுக்கொண்டிருந்த தோழிகள் வணக்கத்திற்கு அப்புறம் அப்புறம் என்று ஆர்வமாகினார்கள். பாட்டி " என்னடி அப்புறம் அப்புறம் என்று கேட்டுக்கொண்டு.... விளக்கு அணைத்தாச்சு ஒன்றும் தெரியுதில்லை போய் தூங்குங்கடி" என்றுவிட்டுப் பாட்டி அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டார். பாட்டி என்றால் கொக்கா!

அதே கிராமத்தில்தான் ஒருநாள் பிற்பகல்;  தெருவில் சென்ற பெண்கள் எல்லாம் தங்கள் முந்தானைகளைச் சரிசெய்து நடந்துகொண்டு இருந்தனர். அழுகின்ற குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கின்றனர். நெல்லுக்குச் சூடு மிதிப்பவர்கள் தங்கள் மாட்டுக்குக் கேட்கக்கூடிய அளவிலேயே சத்தம் இடுகின்றனர். தண்ணிபோட்டு தள்ளாடுபவர்கள் ஓங்காளித்து அதை எடுத்துவிட்டுத் தம்மைச் சரிசெய்கின்ற பாணியில் மற்றவர்களைப்பார்த்து ஒரு செயற்கைப் புன்முறுவல். பாடசாலை மாணவர்கள் தங்கள் மரியாதையின் நிமித்தம் வேலிஓரங்களால் வீடு சென்றுகொண்டிருந்தார்கள். குளாய் அடியில் தண்ணீர்பிடிக்கும் பெண்கள் வம்புக் கதைகள் இன்றி ஒழுங்கின்படி வரிசையில் நின்று தண்ணீரைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். ஊர்ப் பெரிசுகள் தங்களுக்குத் தெரிந்த செய்திகளை மட்டும் சந்தியில் நின்று ஒவ்வொரு நூல்நிலையம்போல் காட்சியளித்தனர். இப்படி அடங்கிப்போயிருந்த கிராமத்தில் அவன்தான் அன்றைய கதாநாயகன். அவன் பெயர் பத்திரன். இவனைக்கண்டுதான் எல்லோரும் இயற்கை வடிவாகினர். 

தூரத்தில் ஒரு குதிரை வண்டில். அதன் மணிகள் அவனது பெருமையைச் சொல்வதுபோல் பல காததுர்ரம் ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. அறத்தின்வழி பொருளைத்தேடி வீடுபேற்றுக்கான பல முயற்சிகளைத் தான்பிறந்த கிராமத்திற்காகச் செய்துகொண்ருப்பவன். திறமையுடன் வீரமும் அவனுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்ததுது. பத்திரன் சொல்லுவதையே வேதமாகக் கருதும் கிராமத்து மக்கள் அவனைத் தங்கள் கிராமத்திற்குக் கடவுளின் கொடை என்று கருதி வாழ்ந்தனர். அதனால்தான் அக்கிராமத்து மக்கள் அவனுக்கென்று ஒரு தனிமரியைதை வைத்திருந்தனர். மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்லும் அளவிற்குப் பத்திரன் தன்மானமுடையவன். தன்னிலை தாளாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் விடுதலுமே அவனது வாழ்வின் தத்துவமாக இருந்தது. வாழ்க்கையில் தவறு என்பதே செய்யாத பத்திரன் ஒருவரும்கும் அஞ்சாத முரட்டுக்காளை. அவன் அந்தக் கிராமத்தில் வாழ்வதே தங்களின் பாதுகாப்பு என்று அனைவரும் கருதினர். இளந்தாரிக் கல்லைத் தூக்கித் தன் வீரத்தைக்காட்டி அந்தக்கிராமத்து ஒரு பெண்ணை அண்மையில்தான் மணந்துகொண்டவன். அவனது குதிரைவண்டில் சத்தும் கேட்டும்போதெல்லாம் கிராமத்து மக்கள் அவனுக்காகத் தங்கள் மரியாதையைச் செய்யத் தவறுவதில்லை. 

காலம் சிலருக்குச் சில பதில்களைத் தயாரிப்பதற்காகக் காலத்தை எடுத்துவிடுகிறது. காலம் சிலவேளை விதியின்பால் கொண்ட பற்றுதலால் புதிய விதிகளை உருவாக்குகின்றது. காலம் பதில் சொல்லும் என்பவர்கள்கூட அதற்காகக் காத்திருந்து முழுமை பெறாமலு இறந்தவர்களும் உண்டு. சகுனம் என்பது விதியின் எச்சரிக்கைதான். பத்திரனுக்கு இவற்றில் ஒன்றுகூட அனுசரணையாக இருக்கவில்லை. துர்ரத்தில் ஒரு உயரமான உருவம் நடந்துவந்துகொண்டு இருக்கிறது. கிராமமே இவனா அவன் என்று மூக்கில்விரல்வைத்து நிற்கிறது. கம்பீரமாகக் கண்ணியமாகக் காட்சியளித்தவன் வீடுநடை போட்டவன்! ஓரு வேலியின் ஓரமாக ஒதுக்குப் புறத்தால் தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாத அளவிற்கு அடங்கி ஒடுங்கிப்போய்ச் சென்றுகொண்டிருந்தான். அனைத்துக் கிராம மக்களின் முகங்களிலும் போத்துக்கீசர் நாட்டிற்குள் வந்ததுபோல் பிதுங்கியவிழிகள். ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்துப் பேசக்கூடப் பயந்து ஒதுங்கிச் சென்றனர். பத்திரனுக்கு என்ன நடந்தது; பத்திரனுக்கு என்ன நடந்தது என்றே எல்லோரது கேள்விகளும் கிராமத்தில் ஏலம் விடப்பட்டதுபோல் எதிரொலிக்கத் தொடங்கியது. 

ஊர்ப் பெரிசு ஒருவர். இவர்தான் அந்தக் கிராமத்தின் திறந்தவெளி நூல்நிலையம். தங்களைத் தாங்களே பெரிசுகள் என்று பட்டம் சூட்டிக்கொண்ட சிலர் அந்த ஊர்ப் பெரிசிடம் பத்திரன் பற்றி விளக்கம் கேட்டனர். பெரிசுக்கு அது நகைச் சுவையாக இருந்தது. மற்றப் பேரிசுகளுக்கு அவர் சிரித்தது நக்கலாக இருச்தது. 

ஊர்ப் பெரிசு கூறியது "பத்திரன் மனைவியின் காலில் விழுந்து வணங்கியதற்கு அவனது மனைவி தலைசாய்க்கவில்லை அதுதான் பத்திரனது இந்த நிலைக்குக் காரணம்" என்று அசிங்கமான ஒரு விடையத்தை மிகவும் அழகாகக்கூறி முடித்தார். அவரது விளக்கத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்காகக் திருவள்ளுவரையும் அழைத்திருந்தார். விளங்காதவர்கள்கூட இக்காலத்துச் சில தமிழர்களைப்போத் தலயாட்டினர். 

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை
இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.(குறள்)


எவளவுதான் வீரனாகவும் ஏறுபோல் கம்பீரமாக நடந்தவனாக இருந்தாலும் புகழுக்குரிய இல்வாழ்க்கை (நல்ல பெண்களால்) அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

இந்த விளக்கத்தைக் கேட்ட எல்லோரும் பத்திரனுக்காக அனுதாபப்பட்டார்கள். பெண்களின் ஒழுக்கம் தமது கிராமத்திற்கு முக்கியம் என்பதை உணர்ந்தார்கள். ஊர்ப் பெரிசிடம் பாடம் கற்க ஆரம்பித்தார்கள்.

இந்தக்காலத்தில் கணவன் மனைவியின்காலில் விழுந்து வணங்குவதில்லை அதனால்நான் சிலபெண்கள் உயரமானவேலிகளையும் பாய்ந்து விடுகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.(ஒரு உண்மைக் கதையை உருவகப்படுத்தியிருக்கிறேன்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: