வானத்தில் ஒரு சிரிப்பொலி;
கல்லறைக் கதவு தட்டும்
சில்லறைச் சிணுங்கல்கள்;
விடிவெள்ளி ஒளி மங்கி
தரை விழுந்து முகம் பார்க்கும்
கீழ்த்திசையின் தாரகை நீ;
பூத்துக் குலுங்கும் முல்லை;
கால் முளைத்த கனகாம்பரம்;
உலகத்தில் ஒரு புள்ளியில் நீ
தேசம் தாண்டிய நதியாய் நான்;
என் உயிரைத் துளியாக்கி
உன்மீது சொரிவதற்காய்
அனல் இடை மெழுகாகிப்
புதுப் புனலாகப் பொழிகிறது
அவள்மீது என் அடைமழை.
1 Comments:
இரங்கலை ரசித்தேன் என்று எழுத எதுவோ போல் உள்ளது...நன்று...
Post a Comment