RSS

கொடை-நிலைக்கண்ணாடி - 38



லண்டன் Heathrow விமான நிலைய வெளிப்பக்கத்தில் அடை மழைக்காக ஒதுங்கிநின்றவர்களில் நானும் ஒருவன். எனக்கு இன்னும் விமானம் புறப்ட 3 மணித்தியாலங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாக நனைந்துகொண்டு ஓடுகின்றார்கள். சிலரது குடை காற்றின் வேகத்தால் வெளிப்பக்கமாக மடிந்துவிட்டது. சிலரது குடை அவசரத்தில் விரிக்கமுடியாமல் இருக்கின்றன. மழையில் நனைந்துகொண்டு ஓடுபவர்கள் ஏன் தலையைமட்டும் பொத்திக்கொண்டு ஓடுகிறார்கள் என்று ஒருகுழந்தை தாயிடம் கேட்டது. எனக்கு முன்வரிசையில் ஒரு கறுப்புக்குடை வேகமாக நடந்து மறைந்தது. அதைப்பார்த்ததும் நான் பல வருடங்கள் பின்வாங்கி பாதுகாப்பான ஒரு இடம் தேடி அமர்ந்துவிட்டேன்.

எங்கட ஊரில ஒருகாலத்தில ரீச்சர்மார்தான் மழையோ வெயிலோ குடைபிடித்துக்கொண்டு போவார்கள். ஆசிரியர்கள் வீட்டில் குடை இருந்தாலும் மழைகாலத்தில் நேரம் செல்லத்தான் வகுப்பிற்கு வருவார்கள். மழைகாலத்தில் கணக்கு வாத்தியார் அப்படி வருவது எனக்கு மிகவும் சந்தோசம். கணக்கு வகுப்பு முழுக்க எங்களுக்கு விளையாட்டுத்தான். சாதாரண காலங்களிலும்கூட கணக்கு வாத்தியார் இன்று வரப்படாது என்று பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்துக்கொண்டு போகிறனான். என்ன நேர்த்தி தெரியுமா? பெரியவனாக வந்ததும் ஒரு ரூபா உண்டியலில் போடுவேன் என்பதுதான். அப்போது எனக்கு 9 வயது. பிள்ளையாருக்கு ஒருரூபா சின்னக்காசுபோல் தெரிந்ததோ அல்லது அவசர தேவையாக இருந்ததோ என்னவோ எனது வேண்டுதல் நிறைவேறவில்லை. சிறியவயதில் எனக்கு கணக்கு ஓடாது. பெரியவனாக வந்ததும் ஊரில் மற்s புலி(கணிதப்புலி) என்று பெயர் எடுத்தவன்.
கணிதப்புலியின் தாயார் மிகவும் கண்டிப்பானவர். ஆத்திசூடி; கொன்றைவேந்தன்; மூதுரை; நல்வழி எல்லாவற்றையும் எனக்கு 10 வயதிற்குள் சொல்லித்தந்தவர். "தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்" என்று தென்னைமரம் நாம் ஊற்றியநீரை நன்றிக்கடனாக இளநீராகத்தருகிறது என்று கற்பித்தவர். எனக்கு காட்டி காட்டி படிப்பித்த தென்னைமரம் எங்கள் வீட்டு முற்றத்தில்தான் நிற்கிறது. அதன் அடியில் எங்கள்வீட்டு நாய் மட்டுமல்ல நானும் போயிருக்கிறேன். இருந்தாலும் அதன் இளநீர் எப்பவும் இனிமைதான். அந்தத் தென்னைமரம் இருக்கும் முற்றத்தைத்தான் (பேச்சுவழக்கில் முத்தம்) நான் அதிகாலை எழுந்து கூட்டிக்கொண்டு இருக்கிறன். எனக்கு 10ம் வகுப்பு முடிந்தவிட்டது. A/L படிக்கும் தராதரத்தில் பாசாகிவிட்டன். குடைக்குள்  சென்ற மாணவியர் முதல்முதலாகக் குடையை உயர்த்தி என்னைப் பார்த்தார்கள். எனக்கு அந்த அளவிற்கு அறிவு இல்லை. அதனால் அம்மா நான் அங்கு இங்கு சுத்தி வந்தாலும் ஏசமாட்டா. அதிலிருந்து கல்விக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன். எங்க ஊரில ஆங்கில ரீச்சர்தான் நான் அறியக்கூடியதாகக் கலர் குடை பிடித்தவோ. அந்தநேரம் குடை பிடிக்கும் பெண்புரசுகளை கெட்டுப்போய் விட்டுதுகள்; கலிகாலம் பிறந்துவிட்டது என்று சொல்லும் பெரிசுகளும் இருந்தார்கள். குடையை கண்டுபிடித்தவன் சீனன் என்கிறார்கள்; எகிப்தியன் என்கிறார்கள்; கிரேக்கர் என்கிறார்கள். ஒருநாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. ஆங்கில ரீச்சர் என்னை தனது குடைக்குள் கூட்டிவந்து விட்டுவிட்டு போனா. அப்போ'தும் எனக்கு umbrella என்று எழுதத்தெரியாதது அவவுக்கும் தெரியும். ஆங்கில ரீச்சருடன் போவது ஒரு வெள்ளைக்காரனுடன் போவதுபோன்ற பிரமை எனக்கு.
காலைத் தேனீர் அருந்துவதற்குமுன் அம்மா எங்களுக்கு சில வீட்டுவேலைகள் வைத்திருப்பா. அதில் நான் தேர்ந்தெடுத்த வேலைதான் முத்தம் கூட்டுதலும் தெரு வேலியின் வெளிப்புறம் கூட்டுதலும். முததத்தில் விளக்குமாத்துடன் நிற்கிறேன் வேலிக்கு அருகாமையால் ஒரு கறுப்புக்குடை மளமளவென்று செல்கிறது. விரைவாக வந்து பார்த்தும் அதைப் பார்க்க முடியவில்லை. சிறு வருத்தும். இதற்கெல்லாம் பனடோலா போடமுடியும் நாளைக்குப் பார்க்கலபம் என்று இருந்துவிட்டென்.

இன்று முதலாவதாகத் தெருப்பக்கம் கூட்டுவதற்கு விளக்குமாற்றுடன் வந்துவிட்டேன் சொல்லிவைத்ததுபோல் கறுப்புக்குடை தூரத்தில் தெரிகிறது. எனக்கு யாரென்று பார்ப்பதற்கு இடையில் அம்மா கூப்பிட்டுவிடவார் என்ற டென்சன் வேறு. கிட்டவந்தது குடை. தெரிந்துவர்தான். என்ன வெயி'லும் இல்லை மழையும் இல்லை குடை எதற்கு என்று கேட்டேன். நீங்கள் எல்லாம் விடிய விடிய முழிவளத்திற்கும் உதவாத விளக்குமாத்துடன் நிற்கலாம். நாங்கள் குடை பிடிக்கப்படாதோ?  எல்லாம் ஒரு அடக்கமான பெண்ணுக்கு அடையாளங்கள். என்று சொல்லி நடந்துகொண்டே இருந்தாள். கூட்டுவதை யாருக்காவது கொடுங்கள் ஆளை விடுங்கள் என்று சிரித்துவிட்டு வேறு வென்றாள். விளக்குமாத்தை யாருக்குக் கொடுப்பது என்றுவிட்டு பேசாமல் இருந்துவிட்டன்.

தூரத்தில் ஒரு குரல். "என்ன தம்பி ..அடக்கமான பொண்ணு பார்க்கிறயளோ? அப்படி என்றால் சுடுகாட்டில்தான் போய்ப் பார்க்கணும். என்ன கதைத்தன் என்ன நடந்தது ஒன்றுமே அவருக்குத் தெரியாது. இந்தக்காலத்து சில ஐரோப்பியத் தமிழ் வானொலிகள்போல் தான் நினைத்ததைச் சொல்கிறார். கூட்டுவதை யாருக்காவது கொடுங்கள் என்றாளே அதுகூட உனக்கு விளங்கவில்லையா. அதுதாண்டா முத்தம். ஒரு சிரிப்புடன் கலைந்தார்.
சாயந்தரம் 7 மணி மழையும் விட்டது. விமானமும் கிளம்பிவிட்டது. நான் நினைப்பது ஒன்றும் நடப்பதில்லை. நினைக்காதது நடந்து விடுகிறது. அதனால் இந்த விமானம் விழவேண்டும் என்று நினைப்போமா என்றுகூட எனக்குத் தோன்றும். விமானத்தில் பயணம் செய்யப்பயந்த ஒரு கணிதமேதை ஒரு கணக்குப்போட்டார். 10 ஆயிரம் விமானப் பறப்பில் ஒரு விமானத்தில்  வெடிகுண்டு இருக்கச் சாத்தியம். 10 லட்சம் விமானப் பறப்பில் ஒரு விமானத்தில் 2 வெடிகுண்டு இருக்கச் சாத்தியம். ஆகவே நான் ஒரு வெடிகுண்டைக் கொண்டு செல்வதன்மூலம் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறேன் என்றாராம். வெளியில் பார்க்கிறேன். திருமணவீடுகளில் ஐயர் பகலில் காட்டும் அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது. பூலோகத்தில் அவளது கற்பைச் சோதித்துத் தோல்வி கண்டவர்கள் பலர். அதனால்தான் யாருக்கும் எட்டாத தூரத்தில் நட்சத்திரமாகக் காட்சி தருகிறாள். அருந்ததி என்றதும் எனக்கு நினைவு வருபவர் ஒட்டகக்கூத்தர்தான்.

ஒட்டகக்கூத்தர் ஒரு சோளர்கால அரசவைப் புலவர். அரசன் பரிவாரங்களுடன் புலவர் உட்பட இரவு நேரத்தில் நகர்வலம் வருகிறான். அவனது அழகைப் பார்ப்பதற்கு நகரத்து ஆண்களும் பெண்களும் அணிதிரண்டு நிற்கின்றனர். அரசனுக்கு காவலாளிகள் குடையைப் பிடித்துக்கோண்டு வருகின்றார்கள். இடையில் ஒரு பெண்கள் கூட்டத்தினரின் பரிகாசமான சிரிப்பு.; சிரிப்பின் முடிவில் "பாரடி நம்ம அரசரை; அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்டீ" . இது அரசனின் காதுகளில் மிகவும் அவமானமாகப் பட்டது. உடனே அரசன் ஒட்டகக்கூத்தரை அழைத்தான்.
"நம்மநாட்டுப் பெண்கள் நான் இரவில் குடைபிடித்துச் செல்வதைப் பரிகசிக்கிறார்கள்; அவர்கள் வாயடைப்பதுபோல் ஒரு விளக்கம் கொடுங்கள் புலவரே" என்றான். ஒட்டகக்கூத்தர் சிரித்திவிட்டு அந்தப் பெண்களுக்குக் கேட்கும்படி சொன்னார்.

"தேவர்களிடம் இருந்து தனது கற்பைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அருந்ததி; எங்கள் அரசரின் அழகைக் கண்டு கற்பிழந்து களங்கத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது என்ற பெருந்தன்மையிலேயே அரசர் இரவில் குடைபிடிக்கிறார்" என்றார். பெண்களின் சிரிப்பொலிகள் மீண்டும் வந்தவழி திருப்பிச் சென்றன. அரசன் புலவரின் புலமைக்குப் பரிசளித்தான்
வானத்து அருந்ததி பார்த்தேன் இவ் வையகத்து அருந்ததி பார்ப்பதற்காய் எனது விமானம் இந்துசமுத்திரத்தைக் கடந்து பறக்கிறது

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலர்தினம் (14.02.கிமு 270)



14ம் திகதி பெப்ரவரி மாதம் கி.மு 270ம் ஆண்டு ரோம் நகரத்தில் ஒரு பாதிரியார் கல்லால் அடிக்கப்பட்டுக் கொடுரமாகச் சித்திரைவதை செய்யப்பட்டு அந்தநாட்டு அரசனது உத்தரவின் பெயரில் பொதுமக்கள்முன் கொல்லப்படுகின்றார்.
எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ காதல் வசப்பட்டு இருக்கும்போது கல்வியி'லொ அறிவிலோ வேறு வகை முயற்சிகளிலோ சாதாரணமானவர்களைவிட ஒருபடி மேலோங்கியே காணப்படுவார். இந்த அறிவியல் அன்று இருந்திருந்தால் இன்று காதலர் தினம் என்ற ஒரு நாளை நாம் கொண்டாடியிருக்க முடியாது. அல்லது வேறு ஒரு நாளில் கொண்டாடப்பட்டு இருக்கலாம்.

ரோம் நகரத்தை முட்டாள் தனமாகவும் கோமளித்தனமாகவும் கொடூரத்தனமாகவும் ஆட்சி செய்தவன்தான் 2ம் கிளாடி என்ற அரசனாவான். அவனது முட்டாள் தனமாக கட்டளைகளால் அவனிடம் இருந்த அத்தனை படைவீரர்களும் மந்திரிமார்களும் அவனைவிட்டு விலகிச் சென்று விட்டார்கள். 2ம் கிளாடி புதிய இராணுவ வீரர்களைப் படையில் சேர்ப்பதற்குப் பகிரதப்பிரயத்தனம் எடுத்தும் யாருமே அவனது படையில் வந்து சேர மறுத்துவிட்டனர். அவனது எதேச்சாதிகாரப் போக்கால் அவனுக்கு ஆலோசனை வழங்கவும் ஒருவரும் முன் வரவில்லை.

ஒருநாள் தனது ஆசைநாயகியுடன் மெய்மறந்து பொய்பேசிக்கொண்டிருந்தவேளை அவனுக்கு ஓர் சிந்தனை உதயமாகியது. "இந்த நாட்டில் திருமணமானவர்கள் தங்கள் மனைவிமாரைவிட்டுப் பிரிந்துவர மனமில்லாத காரணத்தாலும்; காதலர்கள் தங்கள் காதலிகளைவிட்டுப் பிரிந்துவர மனமில்லாத காரணத்தாலும் தான் இராணுவத்தில் ஒருவரும் வந்து சேருகின்றார்கள் இல்லை என்று முடிவுக்கு வந்தான்.குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் மனமொறுத்து இராணுவத்தில் சேர்வார்கள் என்றும்: மூர்க்கத்தனமாகப் போர்புரிந்து தனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள் என்றும் கற்பனை செய்தான்.
மறுநாள் "இனிமேல் ஒருவரும் திருமணம் செய்யக்கூடாது என்றும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஒருவரும் காதலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டான். மீறுவோர் சிறையில் அடைக்கப்பட்டு குறிப்பிட்டதினத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுவார்கள்" என்றும் உத்துரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அறிவித்தலால் சொர்க்கத்தின் வாசலாக இருந்த ரோமாபுரி சோகத்தின் வசமாகியது.
அரசனின் இந்த முடிவு அநியாயமானது என்று கொதித்தெழுந்தவர்தான் கிறித்தவப் பாதிரியார் வலண்டைன் ஆவார். இவர் அரசன் கட்டளையைமீறி காதலர்களுக்கு இரகசித் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனை அடைந்ததும் பாதிரியார் வலண்டைன் சிறைவைக்கப்பட்டார். அவருக்கான கொலைத் திகதியும் அறிவிக்கப்பட்டது. அதுதான் 14ம் திகதி பெப்ரவரி கிமு 270ம் ஆண்டு.
அவர் சிறையில் இருந்த காலத்தில் சிறைக் காவலனின் கண்தெரியாத மகள் அசுடோரியசு பாதிரியாரைச் சிறையிலிருந்து மீட்கப் பலவழிகளிலும் முயற்சி செய்தவேளை இருவருக்கும் காதல் எனும் பூ இதயத்தில் மலர்ந்தது. இதை அறிந்த அரசன் அவளையும் வீட்டுச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.இருந்தும் வலண்டைனுக்கான தண்டனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
குறிப்பிட்ட நாளில் அரச கட்டளைப்படி வலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டுச் சித்திரைவதை செய்யப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இத்தனைக்கும் இடையில் வலண்டைன் தனது காதலிக்காக எழுதப்பட்ட அட்டை மட்டும் அசுடோரிசுக்குக் கிடைத்தது.

"விழி இருந்தும் வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.விழி இழந்து பார்க்க வழி இழந்து
நீ மனவலி தாங்காமல் கதறும் ஒலி கேட்டும்;
உனை மீட்க வழி தெரியாமல் மக்களுக்காகப்
பலியாடாகப் போகிறேன். நீ ஒளியாய் வாழ். பிறருக்கு வழியாய் இரு.
சந்தோச ஒளி உன் கண்கணில் மின்னும்.
அன்புடன் உன் வலண்டைன்.
கட்டளையை மீறித் தன்னையே பலிகொடுத்த வலண்டைன் அன்றிலிருந்து மனித மனங்களில் வாழத் தொடங்கினார். இது நடந்து ஏறக்குறைய 200 வருடங்களின்பின் போப்பாண்டவர் ஒருவரால் பாதிரியார் வலண்டைன் புனிதமானவராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் காதலர் தினமாக இன்று உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகின்றது.
காதலெனும் தேர்வெழுதிக்  காத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தெய்வம் தொழாள்!


n Wednesday, February 8, 2012 at 6:56am ·
அன்று ஒருநாள் 1978ம் ஆண்டு September  10ம் திகதி தனியார்துறைக் கல்வி நிலையத்தில் வகுப்பு எடுப்பதற்காக எனது நண்பன் ரகுவையும் ஏற்றிக்கொண்டு HONDA 250 CC மோட்டார் சைக்கிளில் நெல்லியடிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அக்காலத்தில் எங்கள் பெயர்களையும் படங்களையும் பெரிய பெரிய POSTER களாக ஒட்டி அறிமுகம் செய்வதில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மதிப்பு. நெல்லியடியை அடைவதற்கு வல்லன் வெயியைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் 160 இல் கூட ஓடி இருக்கிறேன். அச்சுவேலி முடிந்தவுடன் வல்லன்வெளி தொடங்குகிறது. வல்லன்வெளி தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு கள்ளுத் தவறணை உண்டு. நான் பொருளியல் ஆசிரியர்; ரகு இந்துநாகரிக ஆசிரியர். 

ரகு சொன்னான் "மச்சான் இதில எனக்குத் தெரிந்த ஒரு கள்ளு விற்கும் வீடு இருக்கிறது. அங்கு சென்று ஒரு அரை அடித்துவிட்டுச் சென்றால் வல்லன்வெளியில் முகத்தில் காற்றுப் பிடிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டத்திற்கு சொர்க்கமே தெரியும்" என்றான். அப்போது எனக்கு கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வந்தன. "ஓர்கையில் மதுவும் மறுகையில் மங்கையும் இல்லாதான் இறந்தால் ஏன் வந்தாய் என்று இறைவன் எனைக் கேட்பான் என்பது. சொர்க்கத்தை ரசிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. வகுப்பு முடிந்து வரும்போது பார்ப்போம் என்று ரகுவிற்குச் சொல்லி கல்லி நிறுவனத்திற்குச் சென்விட்டோம். 

அங்கு லொயிக் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மிகவும் இலகுவான பாடம். பார்த்தால் கடினமாகத் தொன்றும். சிந்தித்தால் விசராக இருக்கும். உதாரணமாக "நான் வாங்கிலில் இருக்கிறேன். வாங்கிலை நான் தொடுகிறேன். அவளும் வாங்கிலில் இருக்கிறாள்; எனவே நான் அவளைத் தொடுகிறேன. காகம் கறுப்பு. காகம் ஒரு பறவை. பறவைகள் எல்லாம் கறுப்பு அல்ல. இப்படித்தான் அந்தப் பாடத்தின் விளக்கங்கள். அந்த வகுப்பில்தான் ஆண்களைச் சன்நியாசியாக்கும் சரளா என்பவளும் படித்தாள். எனது பொருளியல் பாடம் அவள் எடுப்பதில்லை. அது எனக்குக் கொஞ்சம் கவலைதான். இருந்தாலும் அவளது தம்பி எனது வகுப்பில் படிக்கிறான். (A.E. மனோகரனின் பாட்டு எனக்கு அடிக்கடி நினைவு வரும்; வேல்விழாவில் கண்டு எந்தன் நெஞ்சம் இழந்தேன்; கூடவந்த தம்பிமீது அன்பைச் சொரிந்தேன்). பல்கழலைக் கழகத்தில் படிக்கும்போது சனி ஞாயிறு என்றால் எனக்கு ஓவ்வே இருப்பதில்லை. கந்தர்மடம் மானிப்பாய் சுன்னாகம் தெல்லிப்பளை பண்டத்தரிப்பு நெல்லியடி பருத்தித்துறை சாவகச்சேரி சுண்டிக்குளி என்ற இடங்களில் வகுப்புகள் இருக்கும். டாக்கரின் மகள்; வக்கீலின் மகள்; நீதிபதியின் மகள்; பெரிய பணக்காரவீட்டுப் பிள்ளைகள் என்றெல்லாம் எங்களிடம் படிப்பார்கள். சந்தைக்கு போனால் என்ன; சினிமாவிற்குப் போனால் என்ன; சுபாs கபேக்குப் போனால் என்ன எங்களைச் சுற்றி ஒரு மாணவர்கூட்டம் திரண்டுவிடும். மிகவும் மகிழ்ச்சியான காலங்கள். 

வகுப்பு முடிந்து திரும்பிவருகிறோம். ரகுவின் தொல்லை தாங்கமுடியவில்லை. வல்லன்வெளி கடந்து அந்தக் கள்ளுவிற்கும் வீட்டிற்குப் போனோம். யாழ்ப்பாணத்தில் சில வீடுகளின் வேலிகள் பிரத்தியேகமான உயரத்தில் இருக்கும். அதன் கருத்து அங்கு வடிவான பெண்கள் இருக்கிறார்கள் மற்றவர்கள் பார்த்துவிடாக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டதாம். நாங்கள் சென்ற வீட்டுவேலியும் அப்படித்தான் உயரமாக இருந்தது. மேட்டுக் குடிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர் அந்தக் கீழக்குடியில் தலைகீழாக நின்றதை நான் பார்த்தேன். தினசரி வருபவருக்குக் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. சாதி சனம் பாராமல் எல்லோரும் சமம் என்ற பாணியில் பிளாக்களில் கள்ளு ஊற்றி விற்பனை செய்யப்படுகிறது. சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் சிகரட் பிடித்தார்கள்; சிலர் செந்தமிழ் பேசி பகிடிவிட்டுச் சிரித்தார்கள். வீட்டுக்காரன் "பெண்புரசுகள் இருக்கிற இடம் கொஞ்சம் மெதுவாகக் கதையுங்கோ நயினா" என்று தாழ்பணிகிறார். 

அங்கு களவாகக் குடிப்பவர்களுக்கு ஒதுக்குப் புறத்தல் ஒரு தாழ்வாரம் இறக்கப்பட்டிருந்தது!  அதிலும் படித்தவர்களுக்கு என்று அவர்களது மரியாதையைக் காப்பாற்றுவதற்காக இன்னுமொருஇடம் அமைதியாக இருந்தது. மிகவும் மரியாதையான இடம்போல் காட்சியளிதது. அமைதிவலயத்திற்குள் நாங்கள் சென்றோம். அதற்குள் வீட்டுக்காரரின் அனுமதியுடன் மட்டுமே செல்ல முடியும். ஆச்சரியம் என்னவென்றால் லொயிக் ஆசிரியர் அதனுள் இருந்தார். வாங்க மச்சான் என்று எங்களையும் அழைத்து உட்காரவைத்தார். கொஞ்ச நேரத்திற்குள் கடல்புறாவில் வரும் கதாநாயகிபோல் மஞ்சுள் அழகி தோற்றத்தில் ஒரு பெண் ஒருமுட்டி கள்ளைக்கொண்டுவந்து லொயிக் வாத்தியாரின்முன் வைத்தாள். அவள்தான் சரளா. அவள்வீடா இது என்று புல்லரித்தது. குப்பையிலும் சில குண்டுமணிகளா? 
லொயிக் வாத்தி சொன்னார். மச்சான் இது நம்ம இடம். பயப்படவேணடாம். சரளா எனது மாணவிதான். உங்களுக்கும் தெரியும். யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிச் சிக்கலில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை. அவளையும்: விடுவிக்க முடியவில்லை. ஆ; ஊ என்றால் அவளது தகப்பன் பாளையைச் சீவும் கத்தியைப் பழபழக்கக் காட்டி விடுவான். அவளது வீட்டில் நான் இருக்கிறேன்; அவளும் இருக்கிறாள் எனவே நான் அவளுடன் இருக்கிறேன் என்றார். இது அவரது கதையா படிப்பித்தலா என்று எங்களுக்கு விளங்கவில்லை. தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கிறது. குட்டிமணியைப் பிடித்துவிட்டார்களாம் என்ற வதந்திச் செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. சரளாவின் தகப்பன் எல்லோரையும் விரைவாக வீடுசெல்லும்படி பணிக்கிறார். நாங்களும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு திருநேல்வேலிக்கு வந்துவிட்டம். பின்னர் இராணுவக் கெடுபடிகளால் தனியார் கல்லுர்ரிகள் ஒன்றொன்றாக மூடப்பட்டுக்கொண்டு இருந்தது. 

சிலவருடங்களின் பின் லொயிக் வாத்தி பாரிசுக்குவந்துவிட்டார். பாரிசில் அந்தக்காலத்தில் வேலை எடுப்பது தங்க வீடு எடுப்பதெல்லாம் இலங்கைத் தமிழருக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. bathroom க்குள் காலும் வெளியில் தலையுமாகப் படுத்து வாழ்க்கை ஓட்டியவர்களே ஏராளம். லொயிக் வாத்தி வேலை இல்லாத பிரச்சனையைப்போக்க இலங்கையில் இருந்துவரும் அகதித்தமிழரை மொsகோவிலிருந்து ஐரோப்பாவுக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டார். அதனால் அவர் காலத்திற்கு ஏற்றதுபோல் கள்ளக் கடவுச்சீட்டில் moscow விலே தங்கலானார். இலங்கையில் இருந்துவரும் ஒரு பெண்ணை ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதற்காக லொயிக் வாத்தி விமானநலையத்தில் காத்திருந்தார். பறவை பறக்கிறது. விமானமும் பறக்கிறது ஆகவே விமானமும் ஒரு பறவை என்று தனக்குத்தானே லொயிக் படிப்பித்துக்கொண்டு நின்றவர் தூரத்தில் தமிழ்சாயலில் ஒரு பெண் வருவதைக் கணடார். 

கிட்டக் கிட்டப் பெண் வந்தாள். தெளிவில்லாத ஒரு விம்பம். போதையும் இல்லைத் தெளிவும் இல்லை என்ன காரணம். எங்கோ பார்த்த முகத்தின் விம்பம். ஆம் அவள்தான் சரளா. இருவருக்கும் எதிர்பாராதா சந்திப்பு. சுமன் என்ற ஒருவர் என்னைக் கூட்டவருவதாக சொல்லி அனுப்பிவைத்தார்கள் என்று சரளா சொன்ளாள். சரளாலுவுக்கு இருந்த பயம் தெளிந்தது. தெரிந்தவர் ஒருவர் துணைக்கு நிற்கிறார் என்று. லொயிக்வாத்தி நான்தான் சுமன் எனது அகதிப்பெயர் இது என்றான். இருவரும் ஈழத்து அச்சுவேலி வீட்டு நண்பர்களாயினர். 
"சார் எங்கள் வீட்டுக்கு வந்தீர்கள். படித்தவர்களுக்கான மறைவிடம் உங்களுக்குக் கிடைத்தது. மேட்டுக்குடி மக்களின் மானம் கீழக்குடி மக்களால் காப்பாற்றப்படுகிறது. ஐக்கியம் இல்லாத உணர்ச்சிகளுக்கு என்னைத் தூண்டினீர்கள். நானோ உங்களுடன் உணர்ச்சி இல்லாத ஐக்கியமாக நடந்து கொண்டென். அப்போது உங்களைத் தடுக்க என்னால் முடியவில்லை காரணம் முதலாவது உங்கள் தொழில். இரண்டாவது எனது பிறப்பு. தொடர்பில்லாத இந்த இடைக்காலத்தில் உங்களை ஒருமுறைகூட நான் நினைக்கவில்லை. காரணம் என்மீது உங்கனுளுக்கு வந்தது ஆசையே தவிர அன்பு அல்ல. அன்பு என்ற வார்த்தை உங்கள் லொயிக் பாடத்திலும் இல்லை. எனது பெற்றோர்கள் ஆமியால் சுடப்பட்டு இறந்துவிட்டார்கள். நாட்டுப் பிரச்சனையால் தம்பியும் அயர்லாந்திற்குப் போய்விட்டான். இந்திய இராணுவக் கெடுபிடியால் நான் கற்பழிக்கப்பட்டுவிட்டேன். என் வாழ்வின் இலட்சியமே என்னைப் புரிந்த ஒருவருக்கு சிறந்த மனைவியாக இருக்கவேண்டும் என்பதுதான்" என்று அழுதுஅழுது தன் சோகங்களைக் கொட்டிளாள். 

லொயிக் வாத்தி உண்மையிலுயே அன்று அவளை விரும்பினான். அவள் தூரத் தூர நின்றாள் என்பது அவனின் வாதம். இருவரும் ஒரு சிற்றுண்டிச் சாலையில் காப்பி அருந்திவிட்டு ஐரோப்பாப் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பார்ப்போம் என்று முடிவெடுத்தனர். சரளா " உங்கள் வாழ்வு எப்படிப்போகிறது" என்று கேட்டாள். லொயிக் வாத்தி தனது பாணியில் "உங்கள் வீட்டுக் கண்ணாடியில் சென்று பாருங்கள் எனது மனைவியின் முகம் தெரியும் என்றார்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மெட்டி ஒலி


பக்கத்து வீட்டில் ஒரே அமளிதுமளியாக இருந்தது. எனது அலாரம் அடிப்பதற்கு முதலே எல்லோரும் எழுந்து விட்டார்கள். வெளியில் வைத்த சோடா எல்லாம் சிதறிப்போய் வெடித்துக்கிடக்கிறது. பால் பெட்டிகள் எல்லாம் கல்லாகிப்போய்விட்டது. கார் கதவுகளைத் திறக்கமுடியவில்லை;  இப்படிப் பல சத்தங்கள் எனக்குக் கேட்கிறது. அதற்குள் சிலர் நாசா அலுவலகத்து விஞ்ஞானிகள் போல் இந்தக் குளிரில் பொருட்களை வெளியில் வைத்தால் இப்படித்தானே போய்விடும் என்று சத்தம் போட்டவர்களுக்கு விளக்கம் சொல்கிறார்கள். இடை இடையே மெதுவாக கதையுங்க மெதுவாக கதையுங்க என்றும் சத்தம் போட்டுச் சொல்கிறார்கள். கலியாணத்திற்குக் கிளம்புகிறார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. இதற்குள் இலங்கையில் இருந்து கலியாணத்திற்காகப் பொன்சரில் வந்த ஒருவரும் சந்திர மண்டலத்து உடுப்புப் போட்டதுபோல நான் யன்னலால் பார்க்கும்போது சமர் சப்பாத்துடன் வழுக்கி வழுக்கி snow க்குள் விழுந்து விழுந்து எழும்புகிறார். மாப்பள்ளை எங்கோ தூரத்து city இல் இருப்பவராம்; அதனால் எங்கள் பக்கத்து வீடுதான் மாப்பிள்ளைவீடாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. 

இது ஒரு காதல் திருமணம். இந்தக் கலியாணத்தில் மாப்பிளை கொஞ்சம் நிறமாம். அதனால் பெண்வீட்டுக்காரர் "புடிச்சாலும் புடிச்சாள் புளியங்கொம்பாக புடிச்சாள் என்று கதைத்தவையள். மற்றைய மரங்களின் கொப்புக்களையிட (கிளைகள்) புளியமரத்தின் கொப்பு உறுதியானது இனால்தான் இந்தப் பழமொழி வந்தது என்று நானும் வலையில் விழுத்தி வாசித்திருக்கிறன். சிறிது நேரத்தில் எங்கள் வீட்டு அழைப்பு மணி அடித்தது. நான் மதம் பரப்பும் ஆட்கள் என்று நினைத்து பேசாமல் கிடந்துவிட்டன். 
சில கலியாணங்கள் பத்துப் பொருத்தம் பொருந்தினாலும் மாப்பிள்ளையின் தாய்மார்கள் அந்தக் காலத்தில் சகுனம் பார்ப்பார்களாம். அதாவது திருமணத்தைப்பற்றி நினைத்தவுடன் பல்லி சொல்லவேண்டும். அல்லது கோவிலில் ஒருமுறை பூக்கட்டிப் பார்த்து முடிவு எடுக்கப்படல் வேண்டும். ஆனால் களவியலில் முடிவெடுக்கப்பட்டு பின்னர் நடாத்தப்படும் கற்பியல் திருமணங்களுக்குச் சம்பிரதாயம் தேவை இல்லை என்றும் சங்ககால நூல்கள் கூறுகின்றன. 

‘பல்லியும்  பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கண ஆடுமால் இடனே’
என்று திருமணங்களுக்குப் பல்லிசொல் பலன் சங்க இலக்கியத்திலே சகுணம் பற்றிய குறிப்புகள் வருகிறன.

பல ஆண்டுகளுக்குமுன் ஒரு கலியாணத்திற்குச் சென்றிருந்தேன். குறித்த நேரத்திற்கே நான் சென்றுவிட்டேன். மண்டபம் அப்போதுதான் அலங்கரிக்கபப்பட்டுக்கொண்டு இருந்தது. என்னைப்போல் வேறு சிலரும் வந்திருந்தார்கள். இப்படி நேரத்தைப் போட்டால்தான் தாலிகட்டு நேரத்திற்குச் சரியாக சனம் வரும் என்று யாரோ இன்னொருவருக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஒரு கார் வந்து நின்றது. அவர்கள் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதாக அறிந்தேன். என்ன நடப்பு என்று விசாரித்தபோது "மாப்பிள்ளை கட்டில் ஏறிவிட்டார் இனி வந்திடுவார்என்று சொன்னார்கள். மணமகனின் தாயார் தனதுமகன் தாலிகட்டச் செல்லும்போது "உனது மனைவியை பத்திரமாக அழைத்துவா" என்று கட்டளை இடுவதும் அதனை மணமகன் ஏற்றுக்கொண்டு விடைபெறுவதையும் "கட்டளை ஏற்றல் என்று அழைத்தார்கள் அதுதான் பின்னைய நாளில் "கட்டில் ஏறுதல்" என்று வந்துவிட்டதை நான் மற்றவர்களுக்குச் சொன்னேன். அடக் கடவுளே! குழந்தைகளுக்கு என்று சில சொற்களைத் தமிழர்கள் திரித்து வைத்திருக்கிறார்கள். சோற்றை(rice) சோச்சி என்றும்; மீனை மீச்சி என்றும் பாலைப் பாச்சி என்றும் இப்ப பாப்பா என்றும் வந்துவிட்டதுபோலத்தான் இதுவும் என்று பக்கத்தில் ஒருத்தர் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.

மாப்பிள்ளை உட்பட எல்லோரும் வந்துவிட்டார்கள். "ஒன்று வராவிட்டால் ஒன்றுமே நடக்காது" என்பதுபோல அங்கு எதுவும் நடைபெறுவதாக இல்லை. திருமண உறவு காரர் ஆளுக்காள் தொலைபேசியும் கையுமாக நிற்கிறார்கள். என்ன விடையம் என்றால் வீடியோக் காரன் இன்னும் வரவில்லையாம். சரி வீடியோக்காரன்தான் வராவிட்டாலும் விடையத்தை ஆரம்பிக்கலாம் என்றால் வீடியோக்காரனின் காரில்தான் ஐயரும் வாறாராம் என்று சுணக்கத்திற்கான வலுவலான காரணங்களைத் திருமண வீட்டார் சமர்ப்பித்துக்கொண்டு இருந்தார்கள். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சென்றவர்கள்போல் வந்தவர்கள் ஒருவரது முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார் தங்கள் புருசன்மாரை "அவசரப்பட்டு இழுத்துக்கொண்டு வந்துவிட்டயள்; இப்ப பிள்ளைக்கு மேலதிகமாகப் பம்பசும் பாலும் கொண்டுவரவில்லை" என்று திட்டிக்கொண்டு இருந்தார்கள். இன்னும் சில அறிவுள்ளதுகள் "நாங்க மட்டும் சீலைகளை உடுத்துக்கொண்டு வரவேண்டும் அவையள் மட்டும் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு யாலியாக வந்திடுவினம்" என்று சொல்வதெல்லாம் எனக்குக் கேட்டது. 

சில கலியாணங்களை வீடியோக் காரர்தான் நடாத்தி வைப்பார்கள். ஐயர் சொல்லும் மந்திரத்தைவிட அவர்கள் சொல்வதுதான் மந்திரத்தைவிட வலிமையானது. ஐயர்தான் ஒரு முறைக்கு பகலில் அருந்ததி காட்டுகிறார் என்றால் வீடியோக் காரரும் அதை எடுத்து சந்திசிரிக்க வைப்பினம். ஆனால் அருந்ததி எதற்குக் காட்டுவது என்றால் அவர்களுக்குத் தெரியாது.  பல கோணங்களில் நின்று படம் பிடிப்பார்கள். கடைசியில் ஒரியினலைப் போட்டுப் பார்க்கும்போது ஒரு கோணமும் சரியாக இருக்காது. 

அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். தன் கணவன் ஐயப்பட நட்சத்திர வரம்பெற்று சப்தரிஷி மணடலத்தின் இடையில் உள்ள வசிட்ட நட்சத்திரத்தின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றாள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும். துருவ நட்சித்திரம் என்னும் வடமீன் கடல்பயண மாலுமிகட்கு வழிகாட்டியாக இருப்பது.

‘வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’
‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை’
‘அம்கண் உலகின் அருந்ததி அன்னாளை’ 

எனக் கலித்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது.
பெண்களுக்கு தாலி எப்படி அவள் திருமணம் ஆனவள்,என்பதை அடையாளம் காட்ட அமைந்ததோ, அது போல ஆண்களுக்கு திருமணம் ஆனவர் என்பதை அடையாளம் காட்டத்தான்.அவர்கள் காலில் மிஞ்சி அதாவது மெட்டி அனியும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கடை பிடித்தனர்.பிற்காலத்தில் இந்தப் பழக்கம்மறைந்து. ஆனால் தற்போது பல சடங்குகள் கிரியைகளாகிச் சைவசமயத்திற்குள் காரணம் இல்லாமல் வந்துவிட்டது. இதுவே பெண்களுக்குத் திருமணத்தன்று மெட்டி அணிவதற்கு வழக்கமாகிவிட்டது. பழம்தமிழர் இலக்கியங்களில் மெட்டிபற்றி ஒன்றும் கூறப்படவில்லை. 

பாலும் பழமும் சேலைபோட்டு மறைவில் மணமக்கள் சாப்பிடுவதை வீடியோக்காரன் எடுத்துக் காட்டுவது தனது வீரப் பிரதாபமாக நினைக்கிறான். அது எதற்கென்றால் மணமக்கள் பட்டினிச்சாதம் என்ற ஒரு சாப்பாட்டை ஆரம்பத்தில் சாப்பிட்டுத் தாலி கட்டும்வரை எதுவுமே சாப்பிடாமல் இருப்பார்கள். களைத்திருக்கும் மணமக்களுக்கு விரைவில் சமிபாடடையக்கூடியதும் சக்தியைக் கொடுப்பதற்காகவும் திரைமறைவில் இருவரின் கூச்சங்கள் தெளிவதற்காகக் கொடுக்கப்படுகிறது. மோதிரத்தைத் தண்ணீருக்குள் போட்டு குருக்கள் எடுக்கச் சொல்வது பெண்ணின் விட்டுக் கொடுக்கும் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு என்றும் வழக்கமாகிவிட்டது. மோதிரத்தை மணமகன் எடுத்துவிட்டால் மணமகனின் தாய் தனது முகத்தில் காட்டும் சந்தோசத்தைக் கின்னs (HINES) புத்தகத்திலேயே போடலாம். அப்படி ஒரு சிரிப்பு. 

இதைவிட முருங்கைமரம் நடுவது; ஓமம் வளர்ப்பது என்றபெயரில் குருக்கள் புகையூட்டி சபையோரை மூச்சுத்திணற வைப்பது என்றெல்லாம் வந்தவர்கள் ஆளுக்காள் தங்களுக்குத் தெரிந்ததைக் கதைக்கிறார்கள். என்னைப் பார்த்தவர்கள் நானொரு கிறுக்கன் என்று நினைத்தார்களோ பழைய பஞ்சாங்கம் என்று நினைத்தார்களோ ஒருவரும் ஒன்றும் என்னுடன்வந்து கதைக்கவில்லை. திடீரென ஆரவாரம் ஐயரும் வீடியோவும் வந்துவிட்டதாம். ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற நல்ல பாடல் போய்க்கொண்டிருந்தது அதை நிறுத்தி ஐயரின் மந்திரத்தை மண்டபம் கேட்கும்படி இசைஅமைப்பாளர்கள் செய்தார்கள். காருக்கு 3 மணித்தியாலத்திற்குத்தான் காசு போட்டது இப்ப துண்டு வைச்சிருப்பான் அதையும் மொய்க் கணக்கில்தான் சேர்க்கவேண்டும் என்று காரில் வந்தவர்கள் புறுபுறுத்ததும் எனக்குக் கேட்டது. 

வாழ்க மணமக்கள். நான் அறுகரிசி போடுகிறன். சாப்பிடாமலே செல்கிறன். மணமக்களுக்கு சொல்லிவிடாதீர்கள் பிறகு குறைநினைப்பார்கள். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாங்கல்யம் தந்துனானே......


மாங்கல்யம் தந்துனானே- இந்த மங்கல நாணை
கண்டே பத்னாமி -  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து 
சுபாகே- மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 
த்வம் சஞ்சீவ சரத சதம்”- நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
திருமணம் என்பது ஒரு சமூக, ஒழுக்க, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது.
மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தப் பதிவுமுறை பெண்கள் பாதுகாப்புக் கருதியே அமரிக்காவில் 1760 களில் சட்டமாக்கப்பட்டது. மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும்காணப்படுகின்றன. திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி தம் விருப்பத்தின் பெயரில் இணைந்திருந்தால் சமூகச் சீர்கேடு என்றும்; ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் பழி சுமத்துப்படுகின்றார்கள். ஆனால் அதே விடையத்தைப் பலர் அறியச் செய்து அவர்களைச் சமூகத்தில் அங்கீகரித்தலையே திருமணம் என்கிறார்கள். கவுண்டமணி சொல்லுவதுபோல் போர்த்திக்கொண்டு படுத்தாலென்ன; படுத்துக்கொண்டு போர்த்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஒப்பான இந்நிகழ்ச்சியை மணம் என்று அழைத்துனர். மேன்மையான ஒன்றைக் குறிப்பிடத:  'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.


திருமணம் குறித்த பிற சொற்கள்
மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத்தமிழ் இலக்கியத்தில் வழிக்கில் இருந்தன. அவை முறையே கடிமணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. ஆனால்  "கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் வழக்கில் வந்துள்ளமையைக் காணலாம்.

கடி-மணம்
 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் தனிவாழ்க்கை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம். மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் காணப்படுவதால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்தும் திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.

கரணம்
ஒரு தலைவனும் தலைவியும் களவியலிலேயே சுகம் காணுமிடத்து அது தவறெனக்கூறி சமயாசாரப்படி சமூகத்தினர் ஒரு ஒழுக்க நெறிக்குள் கொண்டுவந்துனர். கரணம் என்ற சொல் திருமணத்தை விளக்கும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணமென்பஎன்று தொல்காப்பியத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே" .."புணர்ந்துடன் போகிய காலையான" என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் தற்காலத்தில் வழக்கில் இல்லை.

மன்றல்
'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, திருமுணத்தைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. தற்காலத்தில் இச் சொல்லும் வழக்கொழிந்து போயிற்று.

வதுவை
பாரதியார் தனது பாடலில் மூத்தவர் அவையில் வதுவை முறைகள் பிறகு செய்வோம் என்று குறிப்பிடுகிறார். வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டுள்ளது.

வரைவு
வரை என்பதற்கு மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம்.

தமிழரும் திருமணமும்
பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது.
ஆகிய மண முறைகளைக் காணலாம்.

மரபு வழி மணம்

இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருநது

ஏறு தழுவுதல்
தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது கலித்தொகையில் முல்லைக்கலியில் ஆயர்மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். வீரத்தின் அடிப்படையில் தங்கள் மகளுக்கு மணமகனைத் தேர்வுசெய்யும் ஒரு தமிழர் முறையாகும். 

மடலேறுதல்
பனை மட்டையைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெண்கள் தங்கள் நாணம் கருதி மடலேறுவதில்லை. 

போர் நிகழ்த்தி மணமுடித்தல்
தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை தொல்காப்ப்பியம் சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப் புறநானூறு என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன. தசரதன் கையேகியை இவ்வாறே மணந்து கொண்டார். 

துணங்கையாடி மணத்தல்
துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக்காலங்களில் துணங்கையும், மன்னர்ப்போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது.

பரிசம் கொடுத்து மணத்தல்
மணமகளின் பெற்றோர் தனது மகளுக்கு வழங்கிய சீர்வரிசைப் பொருள்கள்
மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும் மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு" உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர்.இக்காலத்தில் இவை பல சமூகத்தினரிடையே மாறி நடைபெறுகிறது. மணமகளைப் பெற்றவர்களே பொருள் பண்டம் பணம் கொடுத்து மணமகனைப் பெறவேண்டியுள்ளது. 

பலதார மணம்
ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறது. சங்க இலக்கியங்களில் காமக்கிழத்தி, பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மகட் பேறு மட்டும் கருதி மட்டுமே இப்பலதார மணம் நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம். இதன் காரணமாகவே சங்ககாலத்தில் பரத்தையர் என்ற ஒரு குலம் தோன்றக் காரணமாயிற்று.

உறவு முறைத் திருமணம்
உறவு முறைத் திருமணம் மணிமேகலை காப்பியத்தில் முதல் முதலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. . மைத்துனன் மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர். (இக்காலத்தில் நானறிந்தவரை ஐரோப்பாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகள் சொந்த மச்சானையோ சொந்த மச்சாளையோ மணம் முடிக்க விருப்பப் படுகிறார்கள் இல்லை)

திணைக் கலப்பு மணம்
சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்ததை அகநானூறறுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. 

சேவை மணம்
மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மணத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணி யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மணந்ததும், பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும். 

தமிழரின் திருமண நிகழ்வுகள்
காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது.
ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது.

பொருத்தம் பார்த்தல்
பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம் நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி சிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். திருமணத்திற்குரிய பொருத்தங்களாக
" பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடுஉருவு, நிறுத்த காமவாயில்,நிறையே, அருளே, உணர்வோடு திருவெனமுறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"
என கி.மு 7ம் நூற்றாண்டில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை
  1. இளமை
  2. வனப்பு
  3. வளமை
  4. தறுக்கண்
  5. வரம்பில் கல்வி
  6. நிறைந்த அறிவு
  7. தேசத்தமைதி காத்தல்
  8. குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது.(இவை பொதுவாக மணமகனிடம் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களாகும்)
சீவக சிந்தாமணியில் குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட பின்பே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம் பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது.(10 பொருத்தம் பார்த்த திருமணமும் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. சாயிபாபா தாலி எடுத்துக் கொடுத்த திருமணமும் விவாகரத்தில் முடிந்திருக்கின்றது)

மண நாள் குறித்தல்

தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் சாத்திரிமாரிடம் கேட்டு முடிவு செய்தனர். (சாத்திரிமார் பூமியை இருப்பில்வைத்து ஏனைய கிரகங்கள் சுற்றுகின்றன என்பதை அடிப்படையாகவைத்தே நம்மை சுத்துகிறார்கள்)

மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோவலன் - கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய" என்றார்.  கம்பராமாயணத்திலும் வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம். இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும் பின்பற்றப்பட்டது. (ஐரோப்பாவில் விடுமுறை நாட்கள் எல்லாம் திருமண நாட்களாகக் கொள்ளப்படுகிறது மிகவும் முரணான விடையமாகும்)

நகருக்கு உரைத்தல்
மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில் இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில்
பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்"
என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண்ச் செய்தியை நகருக்கு உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து அறிவித்தனர். பெருங்கதையில் மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச் சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து, மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின் மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில் மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும், திலகமும் அணிவித்தனர் என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, (காரைக்கால் அம்மையார் )பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது.

[தொகு]மணவினை நிகழும் இடம்
பழந்தமிழர் திருமணத்தை பெண்வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டிருந்தன்ர். களவொழுக்கம் காரணமாகஉடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வது மரபாக இருந்தது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இதனை

" நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்வையற விளங்கிய கழலடிப்பொய்வல்
காளையை யீன்ற தாய்க்கே" 

என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளி வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின் படி பரிசம் போடுதலும் பெண்வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்தது. இன்று அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், பொதுமன்றில்கள், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது.
[தொகு]மணப் பந்தல் அமைத்தல்


தற்காலத்தில் வீட்டில் மணவினை நடைபெறுவதைக் குறிக்க அமைக்கப்படும் தென்னை ஓலை மற்றும் வாழைத் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ள பந்தல்
தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம் பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல் அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து காலகள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை

ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇயகைபுனை வனப்பின் கான்முதல் தோறும்ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்" 

என்ற பெருங்கதை ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் நிறை குடங்கள் அழகுற அமைக்கப்படது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முகூர்த்தம் பார்த்து, மங்கல இசை முழங்க நடுதல் வழக்கம். இறை வழிபாடு நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல் அமைப்பர். 

இறைவழிபாட்டிற்குரிய பொருள்கள்
திருமணச்சடங்கில் பயன்படும் மங்கலப்பொருள்கள்
தக்கோலம் , ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மணப் பொருள்களுடன், வெற்றிலையையும் வலப்பக்கம் வைத்து, சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி, ' தேவீர் நீர் மலையிடத்திருந்தாலும், மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று தேவர்களை வேண்டினர். பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுள் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த இடங்களை செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர்,வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகைகளில் அடக்கிக் கொண்டு, காந்தள் இதழ் போன்ற தம் மெல்லிய கரம் குவித்து எல்லீரும் இங்கணம் ஏழுமுறை வணங்குமின் என உளுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டுவர். அக்கன்னியரும் அவ்வாறே வணங்கித் தெய்வங்கட்கு மடை கொடுப்பர். 

தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள்
பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு மலர் தூவி வழிபட்டனர்.
மங்கல ஒலி
திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின.கம்பராமாயணம் இதனை

" மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்மாகடலும் போன்றதே" [12]
எனக் குறிப்பிடுகிறது.

நகரை அழகு செய்தல்
மன்னர் மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாக அரண்மனை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் கோலமிடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டனர்.

மணமேடை ஒப்பனை
மணவறை எனப்படும் நிலத்தை திருமகளின் இடை போலப் புனைந்தனர். வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை (இருக்கை) இட்டனர். பொற்காசும், மணியும், முத்தும் குவிக்கப்பட்டன. மங்கலகரமாக விளக்குகள் எழுந்தன. புகைகள் எழுந்தன. பெண்கள் கவரி ஏந்தி நின்றனர். இச்செயல்கள் மன்னரின் மணமேடைகளில் இடம் பெற்றன.

[தொகு]புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள்
பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம் மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது.
  • காப்பு நூல் கட்டுதல்
  • மங்கல நீர் கொண்டு வருதல்
  • மண மக்கள் ஒப்பனை
  • மணமகன் அழைப்பு
  • வேள்வித்தீ
  • அம்மி மிதித்தல்
  • பாத பூசை செய்தல்
  • அருந்ததி காட்டல்
  • அறம் செய்தல்
  • மங்கல அணி
  • சீதனம் கொடுத்தல்

(தொ

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS