RSS

காதலர்தினம் (14.02.கிமு 270)



14ம் திகதி பெப்ரவரி மாதம் கி.மு 270ம் ஆண்டு ரோம் நகரத்தில் ஒரு பாதிரியார் கல்லால் அடிக்கப்பட்டுக் கொடுரமாகச் சித்திரைவதை செய்யப்பட்டு அந்தநாட்டு அரசனது உத்தரவின் பெயரில் பொதுமக்கள்முன் கொல்லப்படுகின்றார்.
எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ காதல் வசப்பட்டு இருக்கும்போது கல்வியி'லொ அறிவிலோ வேறு வகை முயற்சிகளிலோ சாதாரணமானவர்களைவிட ஒருபடி மேலோங்கியே காணப்படுவார். இந்த அறிவியல் அன்று இருந்திருந்தால் இன்று காதலர் தினம் என்ற ஒரு நாளை நாம் கொண்டாடியிருக்க முடியாது. அல்லது வேறு ஒரு நாளில் கொண்டாடப்பட்டு இருக்கலாம்.

ரோம் நகரத்தை முட்டாள் தனமாகவும் கோமளித்தனமாகவும் கொடூரத்தனமாகவும் ஆட்சி செய்தவன்தான் 2ம் கிளாடி என்ற அரசனாவான். அவனது முட்டாள் தனமாக கட்டளைகளால் அவனிடம் இருந்த அத்தனை படைவீரர்களும் மந்திரிமார்களும் அவனைவிட்டு விலகிச் சென்று விட்டார்கள். 2ம் கிளாடி புதிய இராணுவ வீரர்களைப் படையில் சேர்ப்பதற்குப் பகிரதப்பிரயத்தனம் எடுத்தும் யாருமே அவனது படையில் வந்து சேர மறுத்துவிட்டனர். அவனது எதேச்சாதிகாரப் போக்கால் அவனுக்கு ஆலோசனை வழங்கவும் ஒருவரும் முன் வரவில்லை.

ஒருநாள் தனது ஆசைநாயகியுடன் மெய்மறந்து பொய்பேசிக்கொண்டிருந்தவேளை அவனுக்கு ஓர் சிந்தனை உதயமாகியது. "இந்த நாட்டில் திருமணமானவர்கள் தங்கள் மனைவிமாரைவிட்டுப் பிரிந்துவர மனமில்லாத காரணத்தாலும்; காதலர்கள் தங்கள் காதலிகளைவிட்டுப் பிரிந்துவர மனமில்லாத காரணத்தாலும் தான் இராணுவத்தில் ஒருவரும் வந்து சேருகின்றார்கள் இல்லை என்று முடிவுக்கு வந்தான்.குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் மனமொறுத்து இராணுவத்தில் சேர்வார்கள் என்றும்: மூர்க்கத்தனமாகப் போர்புரிந்து தனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள் என்றும் கற்பனை செய்தான்.
மறுநாள் "இனிமேல் ஒருவரும் திருமணம் செய்யக்கூடாது என்றும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஒருவரும் காதலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டான். மீறுவோர் சிறையில் அடைக்கப்பட்டு குறிப்பிட்டதினத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்படுவார்கள்" என்றும் உத்துரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அறிவித்தலால் சொர்க்கத்தின் வாசலாக இருந்த ரோமாபுரி சோகத்தின் வசமாகியது.
அரசனின் இந்த முடிவு அநியாயமானது என்று கொதித்தெழுந்தவர்தான் கிறித்தவப் பாதிரியார் வலண்டைன் ஆவார். இவர் அரசன் கட்டளையைமீறி காதலர்களுக்கு இரகசித் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனை அடைந்ததும் பாதிரியார் வலண்டைன் சிறைவைக்கப்பட்டார். அவருக்கான கொலைத் திகதியும் அறிவிக்கப்பட்டது. அதுதான் 14ம் திகதி பெப்ரவரி கிமு 270ம் ஆண்டு.
அவர் சிறையில் இருந்த காலத்தில் சிறைக் காவலனின் கண்தெரியாத மகள் அசுடோரியசு பாதிரியாரைச் சிறையிலிருந்து மீட்கப் பலவழிகளிலும் முயற்சி செய்தவேளை இருவருக்கும் காதல் எனும் பூ இதயத்தில் மலர்ந்தது. இதை அறிந்த அரசன் அவளையும் வீட்டுச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.இருந்தும் வலண்டைனுக்கான தண்டனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
குறிப்பிட்ட நாளில் அரச கட்டளைப்படி வலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டுச் சித்திரைவதை செய்யப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இத்தனைக்கும் இடையில் வலண்டைன் தனது காதலிக்காக எழுதப்பட்ட அட்டை மட்டும் அசுடோரிசுக்குக் கிடைத்தது.

"விழி இருந்தும் வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.விழி இழந்து பார்க்க வழி இழந்து
நீ மனவலி தாங்காமல் கதறும் ஒலி கேட்டும்;
உனை மீட்க வழி தெரியாமல் மக்களுக்காகப்
பலியாடாகப் போகிறேன். நீ ஒளியாய் வாழ். பிறருக்கு வழியாய் இரு.
சந்தோச ஒளி உன் கண்கணில் மின்னும்.
அன்புடன் உன் வலண்டைன்.
கட்டளையை மீறித் தன்னையே பலிகொடுத்த வலண்டைன் அன்றிலிருந்து மனித மனங்களில் வாழத் தொடங்கினார். இது நடந்து ஏறக்குறைய 200 வருடங்களின்பின் போப்பாண்டவர் ஒருவரால் பாதிரியார் வலண்டைன் புனிதமானவராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் காதலர் தினமாக இன்று உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகின்றது.
காதலெனும் தேர்வெழுதிக்  காத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: