அனைவருக்கும் வணகக்கம் நீண்ட நாட்களின் பின் என் இனிய தோழமைகளைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.
படத்தில் கண்ணன் இத்தாலி நாட்டுப் பெண்களுடன் Sபெயின் நாட்டுக் கடற்கரையில் நிற்பதாக நினைத்து விடவேண்டாம். அவரைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் முனிவர்களாக இருந்து பெண்களாகப் பூமியில் வந்து பிறந்தவர்கள்.
.
அதிகமானவர்களுக்கு இராமனும் கண்ணனும் அவதார புருசர்கள் என்று தெரியும். ஆனால் இராம அவதாரமா கண்ணனன் அவதாரமா முதல் வந்தது என்பதில் சந்தேகம் உண்டு. இரண்டுபேரும் காவிய நாயகர்களாகச் சிததரிக்கப் பட்டுள்ளார்கள். இரண்டு காவியங்களையும் இதிகாசங்கள் என்று அழைப்பர் ஆன்றோர்கள். தேவாரம் திருவாசகம் எழுகின்ற காலங்களுக்கு முதல் ஆலயங்களில் இவை பாராயணம் என்ற வடிவத்தில் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. தமிழ் இலக்கியத்தில் ஒரு பாடல்.
"அன்று இலங்கை பொருதழித்த அவனே அந்தப் பாரதப் போர் முடித்து வென்றிலங்கு கதிராளி விசயதரன் என உதித்தான்" என்ற பாடல் இருக்கின்றது.
இதன் அடிப்படைடயில் அன்று இலங்கை பொருதழித்தான் என்பதில் இராமன் இலங்கையுடன் சண்டைபிடித்தான் என்ற கருத்து வருகிறது. அவனே அந்தப் பாரதப் போர் முடித்து என்பதில் இராமன்தான மீண்டும் கண்ணனாக அவதாரம் எடுத்தான் என்ற பொருள் வருகிறது. இந்தப் பாடலின் பொருள் விளக்கத்தில் இராமனுக்குப் பின்னரே கண்ணன் அவதாரம் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தப் பாடலும் விசயதரன் என்ற சோழச் சக்கரவர்த்தி ஒரு கடவுள் அவதாரமாகக் காட்டப் படுவதற்காகச் சோழர் காலத்ததில் எழுந்த பாடலாகும. கீழே வரும் கதைப்போக்கிற்கு இந்தப் பாடல் முக்கியமானதாககும். சோழர் காலத்தில் அரசனைத் தெய்வமாக மதிக்கும் பண்பு இருந்தது.
பாரதப்போரின் உச்சக் கட்டம் துரோணரும் துரியோதனனும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கருவைக் கலைத்துப் பாண்டவர்களை வேருடன் அழிக்க எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது அபிமன்யு மனைவி உத்தரையின் வயிற்றைத் தாக்கி உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.
.
இதிலிருந்து அவளைக் காப்பாற்ற ஒரு யோசனை சொல்லப்பட்டது. அவளது வயிற்றைப் பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும். ஆனால் அவளது வயிற்றைத் தடவப் பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரபலமாக இருந்த பெரிய முனிவர்களும் பிரமச்சாரிகளும் தங்கள் நிலையில் தவறி இருந்தார்கள் என்பதுவே நிரூபணமாகிறது. ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவித் திரிந்த கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவி வலிபோக்கி உயிர்காக்க முன்வந்தான. இதனால் பிரம்மாஸ்திரக் கட்டு விலகி உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் கண்ணனால் காப்பாற்றப்பட்டன. இங்குதான் திரைவிலகிக் காட்சி மாறுகிறது. கிருஷ்ணன் எப்படிப் பிரம்மச்சாரி ஆவாரர் என்ற கேள்வியே எல்லோர் மனதிலும் வியப்பாக எழுகிறது. புராணங்களின் குட்டு மீண்டும் மீண்டும் உடைக்கப் படுவததற்கு இந்தச் சம்பவம் ஓரு காரணம் என்று மக்கள் கருதலாம்.
.
இராம அவதார காலத்தில் தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர். (முனிவர்கள் போயும் போயும் ஒரு ஆணைணப் பார்த்து மயங்கினர் என்றால் பெண்ணைப் பார்த்திருநந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை) தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். இதனைக் கம்பர் ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று கூறுகிறார். இதனால் ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்து தாங்கள் முற்பிறப்பில் விரும்பியபடி கண்ணனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தனர். ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை. (இதனை நான் சொல்லவில்லை புராணம் சொல்கிறது) அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.
.
நாம் படிப்பதற்குக் கீதை எனும் பாடம் தந்தான் என்பதில் மகிழும் கண்ணதாசன் "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்பதிலும அர்த்தம் இருப்பதாக நான் கருதுதுகிறேன்.

0 Comments:
Post a Comment