இரண்டு இனம் தெரியாத பறவைகள் ஒரு மரத்தின் அடியில் ஒன்றும் உச்சியில் ஒன்றுமாக வாழ்ந்துவந்தன. பறவைகள் என்ற வகையில் தங்களுக்குள் எந்தத் தகராறும் இல்லாமல் கிடைப்பதைப் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தன. அந்தமரமே அவர்களுக்குச் சுதந்திரத் தாயகம்போல் சொர்க்கத்தை அளித்து வந்தது. திடீரென்று ஒருநாள் அதிகாலை உச்சியில் இருந்த பறவை திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்போது மரத்தின் அடியில் வசித்துவந்த தன் உறவுக்காறப் பறவையைக் காணாது திகைத்து நின்றது. பலநாட்கள் கழிந்த பின் உச்சிப்பறவை ஒரு முடிவுக்கு வந்தது. உயர்ந்த இடத்தில் வாழ்பவனுக்கே இந்த உலகத்தில் பாதுகாப்பு அதிகம் என்று தனக்குள் தன் இனத்தைச் சூறையாடிய அந்த மிருகத்தைத் திட்டிக்கொண்டது.
0 Comments:
Post a Comment