RSS

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே"


பக்தி இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலம் என்று அழக்கப்படுகின்றது. இக்காலத்தில்தான் சைவம் என்ற மதம் தமிழ் இலக்கியத்தில் எக்காலத்திலும் இல்லாதவாறு அதனை மக்கள் மனங்களில் பிரவாகம் அடையச் செய்தது. பிற மதங்கள் சைவத்தை மக்கள் மனங்களில் இருந்து அகற்றி தாங்கள் குடிபுகவந்த வேளை சமயகுரவர்கள் தோன்றி அக்காலச் சமுதாய வரலாற்றையே மாற்றி அமைத்தனர்.
இந்த ஆலயம்தான் திருவதிகை ஆலயமாகும். அப்பர் சுவாமிகள் தனது சூலைநோயை இந்தக் கோவிலில் பாடல்பாடியே குணமாக்கினார் என்பது வரலாறு.

சம்பந்தரும் அப்பரும் ஒரே வயதினராக இல்லாவிட்டாலும் ஒரேகாலத்தில் வாழ்ந்தார்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன. இறைவனுக்குப் பூசை எவ்வாறு செய்யப்படல் வேண்டும் என்பதைக்கூட சமய குரவர்கள் மிகவும் தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள். அவற்றில் அப்பர் ஸ்வாமிகள் பாடிய ஒரு பாடலை இங்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரே கருத்தை சம்பந்தரும் தனது பாடல்களில் குறிப்பிட்டிருக்கின்றார். 
சிவ பூஜைக்கு மிகவும் முக்கியமானது தூய அபிஷேக ஜலமும்,பசும் பாலும் , வில்வ இலைகளும் ஆகும். "புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு " என்று திருமூலரும் பாடி இருக்கிறார். அதோடு தூய மலர்களால் அர்ச்சனை செய்வதால் விசேஷமான பலன் கிடைக்கும். மனத்தூய்மையும் முக்கியம்.எனவேதான்,"கரவின்றி நன் மாமலர்கள் கொண்டு இரவும் பகலும் தொழுவார்கள்" என்று மயிலாடுதுறையில் பக்தர்களைச் சிறப்பித்தார் ஞானசம்பந்தர். இறைவனை வணங்கி மலர்களால் அர்ச்சனை - தோத்திரங்கள் செய்து , அன்பு மேலிட்டு கண்ணீர் மல்க அவனது நாமங்களைச் சொல்லி பூஜிப்பவர்களைக் கணக்கில் எழுதி வைத்துக்கொள்கிறான் ஈசன் என்று அப்பர் பெருமான் பாடியதைநாமும் அறிந்து கொள்ளலாம். 

"தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும் "
"பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே."

நாம் செய்வதைப் பார்க்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்ற அகம்பாவதில் அக்கிரமங்கள் செய்பவர்களுக்கு இப்பாடல் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சித்திரபுத்திரன் கணக்கு இறைவனாலேயே நமக்கு எழுதப்படுகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். 
திருநூவுக்கரசு நாயனார் இவ்வுலகத்தில் 81 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்கள் செய்து சைவத்தை நிலைநிறுத்தி அவனருளாலே அவன்தாழ் வணங்கி இறைபதம் அடைந்தவர். இவரால் பாடல் பெற்ற தலங்களில் இவருக்கென்றே சில இடங்களில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர் சமண சமயத்திற்கு மாறி பின்னர் சைவசமயத்திற்கு வந்தவர். இதையறிந்து பாண்டியர் இவருக்குச் சூலை நோயை உண்டாக்கி திரும்பவும் தங்கள் மதத்திற்கு வரும்படி அழைத்தனர். (இறைவனே சூலைநோயை உண்டாக்கி இவரை சைவமதத்திற்கு அழைத்ததாகவும் கதைகள் உண்டு). சமணமதத்திற்குத் திரும்பாத அப்பர் சுவாமிகளைப் பாண்டியர்கள் சித்திரவதை செய்தனர். சுண்ணாம்பு அறையில் அடைத்துப் பார்த்துனர். இறைவன் அருளால் தீங்கின்றி வெளிவந்தார். 

அப்பர் சுவாமிகள் சமணத்தில் இருந்து சைவத்தின்பால் வந்தபோது அவர் பாடிய முதுலாவது பாடல் "கூற்றாயினவாறு விலக்ககலி கொடுமை பல செய்தன நானறியேன்" என்ற பாடலாகும். 

"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே"

இப்பாடலில் கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாச்சினும்; நற்றுணை ஆவது நமச்சி வாயவே! என்ற வரிகள் இங்கு நோக்கத்துக்கது. நம்மில் பலர் இப்பாடல் கல்லோடு கட்டி கடலில் போடப்பட்டபோது பாடப்பட்டது எனக்கொள்வர். "கடலில் பாச்சினும்" என்ற சொல் எதிர்கால வினையாகும். இறைவன் திருவருளால் சமணர்களது இக் கொடிய செயலை அப்பர் ஏற்கனவே அறிந்து இவ்வாறு பாடினார் என்பதே பொருந்தும். இப்பாடல் கல்லுடன் கட்டி கடலில் போடுவதற்கு முன்னரே பாடப்பட்டது என்பதுவே உண்மை.

மேற்குறிப்பிட்ட தகவலை உண்மைப் படுத்தும் முகமாக திருநாவுக்கரசு நாயனாரே தன்னைக் கல்லுடன் கட்டி கடலில் போடப்பட்ட பின்னர் பாடிய பாடல் இங்கு நோக்கத்துக்கது. 

"கல்லினோடு என்னைப்பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நுக்கவென் வாக்கினால் 
நெல்லு நீள்வயல் நீலக் குடியரண்
நல்ல நாமம் நவிற்றி உயர்ந்தேன் அன்றே".

"ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே" என்ற பாடலை நாம் கேட்கும்போது கவிஞர் கண்ணதாசனது ஞாபகமே எமக்கு வருகிறது. ஆனால் இந்த வரி கிட்டத்தட்ட 1250 ஆண்டுகளுக்குமுன் அப்பர் சுவாமிகளால்தான் பாடப்பட்டது. 

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரோருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆரோருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே"
இவை எனது ஆய்வுகளுக்குக் கிடைத்த முடிவுகள். ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு தெளிவை முன்வைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்- கங்கைமகன்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: