"அவன் நடத்தும்
நாடகத்தில் உங்கள் பகுதி முடிந்துவிட்டது" இது என் கணனிக்கு வந்த மின்னஞ்சல். இதை வாசிக்கும் போது ஒரு சாத்தான் எனக்கு வேதம்
ஓதியதுபோல் இருந்தது. மனத்தில் சபலம் வந்ததும் சாபம் போடத் தோன்றும். சலனம்
வந்ததும் சமாளிக்கத் தோன்றும். சந்தேகம் வந்ததும் கொலைசெய்யத் தோன்றும். எனக்கு
அப்படி ஒன்றும் தோன்றவில்லை. என்னை; மற்றவர்கள் இவர்
என்ன புடம் போட்ட தங்கமா என்று உரசிப் பார்ததவர்களுக்கு அப்படித் தோன்றியது. அது
அவர்களது 5ம் அறிவு. எனது அம்மா என்னை டாக்டருக்கு படிப்பிக்க எண்ணியிருந்த
காலத்தில் சத்திர கிசிச்சை என்ற சொல் எனக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. எந்த
உயிருக்கும் துன்பம் விளைவிக்காத மனதின் பிரதிபலிப்பு அது. ஆமிக்காரர்களை வீதியில்
காணும் போது இவர்கள் தான் மக்களைச் சித்திரவதை செய்பவர்கள் என்ற எண்ணம் என்னைப்
பலமுறை சித்திரவதை செய்திருக்கிறது. "டோபி" யைக் கண்டால் கூட அவர்
வெளுத்து விடுவார் என்ற பயம் எனக்கு! பூக்கள் பறிக்க கோடாரி எடுப்பவர்களை நான் கொலைகாரர்களாகப்
பார்க்கிறேன். எனது பார்வையில் பூக்களில் இரத்தமும் பூமியில் யுத்தமும் இந்த
பிரபஞ்சத்தை விட்டு அகல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அல்லாத பட்சத்தில்
நானே பூமியைத் தள்ளிவைத்து வாழப்பழகி விடுவேன்.
மகாபாரதப் போரில்
பெருவாரியான போர் வீரர்கள், வித்தியாசம் தெரியாமல் தங்களுக்குத் தாங்களே அடிபட்டுச்
செத்தார்கள். இதைத் தடுப்பதற்க்காக ஒரு வழி செய்தார்கள். ஒரு சாரார் மட்டும் நெற்றியில் பட்டை தரித்துக்
கொண்டார்கள். ஆனால் மறுசாரார் எதிரியிடம் இருந்து தப்புவதற்காக அவர்களும் பட்டை
தரித்துக் கொண்டார்கள். மறுபடியும் போர்க்களத்தில் அதே நிலைமை தான். இறுதியில் பிணக் குவியலின் மேல் ஒரு சாராரின் வெற்றிக்
கொடி அழுது அழுது காற்றில் பறக்கும். திரௌபதயை பத்தினியாக வர்ணித்த பாண்டவர்களின்
கூற்றை எதிரிகளான கௌரவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருபெண் எந்த வேடம் போட்டாலும் உடை அலங்காரங்களைப் பார்த்து அவர்
போட்டுள்ள வேடத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மனத்தில் ஒருவர் பத்தினி வேசம்
போட்டால் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாது என்று வேடம் போட்டவர்கள் கருதுவார்கள்.
கௌரவர்கள் இதையே தங்கள் விவாதத்தின் தலைப்பாக எடுத்துக் கொண்டார்கள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி
சிரித்ததால் தான் பல்லாயிரக் கணணக்கானோர் பாரதப் போரில் மாண்டதாக வரலாறு
கூறுகின்றது. வாழ்க்கை என்றால் போராட்டம்(போர்+ஆட்டும்) என்ற சிந்தனை பிற்காலச்
சந்ததியினருக்கு இதிகாசங்கள் மூலம் பரிசாக அளிக்கப்பட்டது உண்மை என்றே நான்
கருதுகிறேன். ஏனென்றால் கடவுளே போர்க்களங்களில் A.K.47 க்குப் பதிலாக பல ஆயுதங்களைப் பிடிக்க வைத்துள்ளார்.
சிவபெருமானிடம் சூலாயுதமும் கண்ணனிடம் தடியும்; யேசுவிடம் ஒரு
கோலும்; முருகனிடம் வேலும் இருந்ததாக வரலாறு சித்தரிக்கிறது. கர்ணனிடம்
இருந்த நாக அஸ்திரம் இக்காலத்து ஏவுகணையை விட சக்தி வாய்ந்ததாக வர்ணிக்கப்படுகின்றது. சூதுதனை வாது
வெல்லும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பது எனது கொள்கை. கண்ணதாசன் அவர்கள் சொல்லுவதுபோல் இந்த உலகத்தில் வெல்லுபவன்
சொல்லுவதே வேதமாகிவிட்டது. ஆனால் நான் அவரைவிட்டு ஒரு படி உயர்ந்து சென்று
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" (ஆன்மீக விடுதலை அடைந்த சான்றோர்கள்)
என்ற தொல்காப்பியரின் வார்த்தைக்குள் என்னை அற்பணிக்கிறேன்.
போர் என்றதும்
எனக்கு முள்ளிவாய்க்காலை விட சிறிய வயதில் நேரே பார்த்த சூரன் போரே நினைவு வருகின்றது. அப்போது சூரனை விழுத்தும் முருகனின் கதாபாத்திரமாக
நான் மாறி விடுவேன். மூன்று நான்கு நாட்களுக்கு முருகன் நினைவுதான். சூரன்
முருகனை விழுத்த எவளவோ மாறுவேடங்கள் எல்லாம் போட்டு வருவார். இருந்தாலும் தர்மம்
முருகன் பக்கம் இருப்பதால் வேசங்களையும் வென்று மீண்டார். சின்னவீட்டு
சமாச்சாரம் தெருவுக்கு வந்த போது ஆணுலகம் முருகனைச் சந்திக்கு இழுத்து
மனைவிமாருக்கு நம்ம முருகனே சின்னவீடு வைத்திருப்பதாக விரிவுரை நடாத்தினார்கள்.
அக்காலத்தில் கி.பி 9ம் நூற்றாண்டளவில் இந்துப்
பெண்களெல்லாம் போர்க்கொடி தூக்கினார்கள். முருகனை வணங்க வணங்க சின்னவீடுகள்
பெருகுவதை உணர்ந்தார்கள். ஆண்வர்க்கம் அதிரடியாக பெண்கள் சமூகத்தைச் சமாளிக்க
வீரசைவத்திற்குள் தனியாக பிரமச்சாரியாக இருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து
"இவர் திருமணமாகவில்லை; இவரை வணங்குங்கள்" என்று இந்து
சமயத்திற்குள் கொண்டு வந்தனர். இவர் கடவுளா
என்பதில் பலருக்கு இப்பவும் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் சமயகுரவர்கள் என்று
அழைக்கப்படும் நால்வரும் திட்டத்தட்ட 12 ஆயிரம் பாடல்கள்
பாடியுள்ளார்கள். அவற்றில் ஒரு வரிகூட பிள்ளையாரைப்பற்றி வரவில்லை. ஆனால்
பிள்ளையார் பெண்களோடு இருந்த அமைப்பிலான விக்கிரகம் யப்பானில் தொல்பொருள்
காட்சியகத்தில் இருக்கிறது. அதே உருவும் சிறிய அளவில் நியூயோர்க் நகரத்தில் உள்ள
கிறிsதோப்பர் வீதியில் 135ம் இலக்கத்திலுள்ள
ஒரு வெள்ளைக் காரனின் நகைக்கடையில் இருக்கிறது. இது கடவுள் சமாச்சாரம் விட்டு விடுவோம். நம்பிக்கையே கடவுள்! தன் நம்பிக்கையே வாழ்க்கை! பிள்ளையார் பிரசித்தி பெற்றார்
தனியாக இருக்கும் அவரை உசுப்பி உசுப்பி (poke) அடியார்கள் தங்கள் வேண்டுதல்களைச் செய்தனர்.
அறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் (இவர்தான் இந்திய புகையிரதப் போக்குவரத்திற்கான நேர அட்டவணையை
அமைத்துவர்) எழுதிய "வொல்காவிலிருந்து கங்கைவரை" என்ற நூலில்
அந்தப்புரத்தில் அரசனால் கழிக்கப்பட்டவை அந்தணர்களுச் சின்னவீடாகியது என்றும்
அந்தணர்களால் கழிக்கப்பட்ட பெண்கள் தேவதாசிகளாகித் தெருத்தெருவாக அலைந்தனர்"
என்று குறிப்பிடுகிறார். என்னை முகநூலில் உசுப்புபவர்களைப்பற்றி கதை எழுத எனக்கும்
ஒரு அம்பேத்கார் இப்போது தேவைப்படுகின்றார்.
Kumar Kanagasabai இவர் ஆரம்பத்தில் கமலா கனகசபை; மலேசியா என்று அறிமுகமாகி இருப்பிடம் லண்டன் என்று மாற்றி இருப்பவர். கணனியில் காதல் மொழிபேசி; கடைசியில் காசு அனுப்பமுடியுமா என்று கேட்டவர். இப்போது kumar kanagasabai என்று தன்னை ஆணாக மாற்றியுள்ளார். ஆணாக மாற்றினாலும் எழுதிய எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன. Bairavi Sri இவர் முதலில் செல்வியாக இருந்து கொஞ்சநாள் பேசாமல் விட்டுவிட்டு தன்னைத் தானே Bairavi Sri ஆகமாற்றிக் கொண்டவர். இவரின் மாறுவேடம் தெரிந்து நான் நண்பர் பட்டியலில் சேர்க்கவில்லை. SELVY இந்தச் செல்வி களவியலில் காமமொழி பேசி என்னை நிலைகுலையச் செய்தது. நான் யாரென்று கண்டுபிடித்ததும் "கெட்டிக்காரன்" கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று பாராட்டுப் பத்திரமும் வேறு தந்தது. அடுத்தது தமிழ் மீது பிரியம் உள்ளவர் போல் காட்டும் ஒருவருடன் இந்தப்பேய் சேர்ந்து "மாலா கிறிs" என்ற பெயரில் வந்தது. ஆசை வார்த்தைகள் கூறியது. தனது கணவன் யுத்தகாலத்தில் இறந்துவிட்டதாகவும்; தன் கணவர் என்னைப் போல்தான் இருப்பார் என்றும் காமச்சதிர் ஆடியது. என்னைப் பலவீனப்படுத்தியது. திரும்பவும் இப்போ முருங்கைமரம் ஏறிவிட்டதாக நினைக்கிறன்.
ஒருவன் தன் விதிவசத்தால்
வாழ்க்கையில் பலவழிகளாலும் துன்பப்பட்டுக்கொண்டு தனிமையிலும் தியானங்களிலும்
இருக்கும்போது அன்பும் ஆறுதலும் காட்டுவதற்குப் பதிலாக அவனது தனிமை வாழ்க்கைச்
சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆசைவார்த்தைகளைக்காட்டி அவன் மனத்தைப் பேதலிக்கச் செய்து
அதில் சுகம் காண விளைந்தவர்கள் எல்லாம் திருமணமான மாற்றான் தோட்டத்து மல்லிகைகள். பாவம் தோட்டக்காரன்!
நடந்தது என்ன! குற்றமும்
பின்னணியும்" (இது vijai TV யில் திரு கோபி நாத் அவர்களின் வார்த்தை தான்) kamala, bairavi, bairavi Sri, mala Krish, Selvi என்ற முகநூல் ID களுக்கு ஒரு பெண்தான்
முதலாளி. இதைவிட தனக்கென்றும் ஐந்து ID பப்ளிக்காக வைத்திருக்கிறது.
பின்னர் அந்தக் கிறுக்கி நான் எழுதிய விடையங்களில் சிலவற்றை எனது உண்மையான
கள்ளங்கடபமற்ற நண்பர்களுக்கும் நண்பியர்களுக்கும் அனுப்பி என்னை மட்டம்
தட்டத் தொடங்கியது. உலக அரங்கில் என்னை அசிங்கப் படுத்தத் தொடங்கியது. கடவுள்
விடுவானா? ஒரு குருவை எனக்காகத் தயார் செய்தான். கடந்த 07.09.2011 அன்று எனக்குத் தரிசனம் கிடைத்தது. எதிரிகள் ஈட்டிகளைத்
தயாரித்தார்கள். நான் பாதுகாப்பிற்குக் கேடையங்களை மட்டுமே தயாரித்தேன். இது
குருவின் உபதேசம்!
ஓசோ சொல்கின்றார் "இந்த
உலகத்தில் மகான்கள் தோன்றும்போது கூடவே சாத்தான்களும் அவரது மகிமையை
இழிவுபடுத்துவதற்காகத் தோன்றிவிடுகிறார்கள். சாத்தான்கள் ஆன்மீகவாதிகள் போல்
வேடமணிந்து அவரிடம் சென்று சிதைத்து விடுவார்கள். ஆன்மாக்களே விழிப்பாக
இருங்கள்" என்று சொல்கிறார். "அவன் நடத்தும் நாடகத்தில் உங்கள் பகுதி
முடிந்துவிட்டது" என்று கூறும் சாத்தான்களை உங்கள் பார்வையே பொசுக்கிவிடும்
அளவு வல்லமை பெறுங்கள். இக்கருத்தையே சுவாமி விவேகானந்தரும் தனது
"ஞானதீபம்" என்ற நூலில் 258வது பக்கத்தில்" ஆன்ம
ஞானத்தில் ஒருவர் சிறந்து தோன்றினால் உடனே அவரைப்பற்றிப் பல கட்டுக்கதைகள்
கட்டப்பட்டுவிடுகின்றன" என்று. எனது ஆன்மீகக் குருவால் என் உள்ளத்தில்
வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மீகத் தீயின்முன் இந்த ஆவிகளின் ஆட்டம் இனிப்
பலிக்காது. இப்போது என் மனம் வெறுமையாக இருக்கிறது. தூரத்தில் ஓர் ஒளி தெளிவாகத்
தெரிகிறது.
2 Comments:
ஆண் பெண் உறவின் தூய்மையான பக்கத்தை மறந்து, விடுதலை உணர்வும் உண்மையும் அற்று, நட்பிலும் அன்பிலும் மாயம் சேர்த்து விளையாட்டாக பாவிக்கும் அனைவரும் மானிடராய் பிறந்த சிறப்பை உணர நினைவு படுத்துகின்றது இந்த பதிவு! என் தோழரின் உண்மையை ஏற்று கொள்ளும் மனதினை வணங்குகின்றேன்.
வருகின்ற எதிர்ப்புகளை தெளிவாக எதிர்த்துநிற்கின்ற தைரியம் வந்துவிட்டால் எதற்கும் அஞ்சத்தேவை இல்லை.நிலைக்கண்ணாடி இருக்கும் வரை எல்லோருக்கும் தெளிவு கிடைக்கும். விளக்கம் கிடைக்க எடுத்துக்காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுக்கள் உங்கள் திறமையை பறை சாற்றுகின்றது . தொடருங்கள்
Post a Comment