RSS

காளமேகம்!


வரதன் என்ற இயற்பெயர் கொண்டு கும்பகோணத்தில் பிறந்தவர்தான் காளமேகப் புலவர். இவர் வாழ்ந்த காலப்பகுதி தமிழ் இலக்கிய வரட்சிக் காலமாகிய நாயக்கர் காலமாகும்.புலவர்களை ஆதரிக்காத அரசர்கள் வாழ்ந்த காலமாதலால் இவர் பாடல்கள் பல, வசை பாடுவனவாக இருந்தன. வைணவ குலத்தைச் சேர்ந்தவராக இருந்த இவர் திருவானைக்கா கோவிலில் இறை தொண்டுகள் செய்து வரும்போது அங்கு நாட்டியம் ஆடும் தேவமங்கையைக் கண்டு காதல் மணம் புரிந்தவர். திருமணத்தின் பின்னர் வைணவசமயத்தை விடுத்துச் சைவசமயத்தில் சேர்ந்து கொண்டார். மனைவியின் பெயர் மோகனாங்கி. நாட்டியம் ஆடச் சென்ற மனைவிக்காகக் கோவிலில் காத்திருந்தவர் அசதியில் தூங்கிவிட்டார் . அதே மண்டபத்தில் பாணர் ஒருவர் இரவு பகலாகச் சரசுவதியின் கடாட்சத்தை வேண்டித் தவம் செய்து வந்தார் .
.
தவம் செய்த பாணருக்குச் சரஸ்வதி அருள் பாலிக்க வாயினுள் தாம்பூலத்தை உமிழ்ந்துகொண்டு சிறுபிள்ளை வேடம் பூண்டு வந்தார். சரஸ்வதியைச் சிறுபிள்ளையாகக் கண்ட பாணர் யாரோ தனது தவத்தைக் குலைக்க வந்திருக்கிறார்கள் என்று ஏசித் துரத்திவிட்டார். இந்த அமழியில் நித்திரை குழம்பிய காளமேகப் புலவர் வாயைத் திறந்தபடி சுவரில் சாய்ந்து கொண்டு இருந்தார் .அந்தவழியால் வந்த சரசுவதி காளமேகப் புலவரின் வாயினுள் தாம்பூலத்தை உமிழ்ந்து அருள் பாலித்துவிட்டுச் சென்றார் அன்றிலிருந்து காளமேகப் புலவருக்கு கவிபாடும் வல்லமை வந்தது. புலவர்களில் யமகண்டம் பாடியவர் காளமேகப் புலவராவார்.
.
இவர் சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் .
.
தேங்காயையும் நாயையும் ஒப்பிட்ட ஒரு பாடல்.
.
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாளும் குலை தனக்கு நாணாது....
:
பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு ஒரு பாடல்
.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது -
விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத்
திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம்
.
தண்ணீரை மழை என்றும், நீர் என்றும், மோர் ன்றும் வர்ணித்துள்ள பாடல் .
.
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீனிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”
.
இவரால் பாடப்பட்ட நூல்கள்
.
 திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகியனவையாகும்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுள்மணி!

வணக்கம் எனது அன்பான வாசக நட்புகளே. இந்தக்கதை எனது நிலைக்கண்ணாடியில் 50வது கதையாக வெளிவருகின்றது. ஏறத்தாள ஒருவருடத்தில் இந்த இலக்கை அடைந்துள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.  அதற்கு முகநூல் நட்புகள் தங்கள் கரம்தந்து என்னை ஊக்கிவித்தமையே முக்கிய காரணமாகும். அவர்கள் எல்லோருக்கும் என் இருகரம் கூப்பிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உருத்திராட்ச மரம் (நேபாளம்)
ஒரு பொருளைக் கண்டால் இன்னொருபொருள் இயல்பாகவே நமக்கு ஞாபகம் வருவதுண்டு.  கல்லைக் கண்டால் நாயும், தடியைக்கண்டால் பாம்பும், வலையைக்கண்டால் மீனும், ஆசிரியரைக்கண்டால் பாடசாலையும், குடையைக்கண்டால் மழையும்,.......இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதேபோல் ஒரு உருத்திராட்ச மாலையைக் கண்டால் ஒரு சாமியார் அல்லது ஒரு குருக்கள் போன்றோர் நினைவில் வருவார்கள்.  பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் இந்த உருத்திராட்ச விதைகள்(மணிகள்) பலவகையான நோய்களைக் குணப்படுத்துவதற்காக நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களும்,  இந்திய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும், இமயமலை அடிவாரத்தைச் சுற்றியுள்ளவர்களும் அணியத் தொடங்கினார்கள் என்பது வரலாறு.
.
உற்பத்தியாகும் இடங்கள்
.
Rudraksha என்ற தாவரவியற் பெயரில் அழைக்கப்படும் உருத்திராட்ச மரங்களிலிருந்து உருத்திராட்ச மணிகள் பெறப்படுகிறன. தென்கிழக்காசியாவில் ஜாவா, கொரியா, மலேசியா, தாய்வான், சீனா, போன்ற இடங்களிலும் நேபாளத்திலும்  அதிகமாக விளைகின்றன.
.
குணமாகும் நோய்கள்.
.
இந்த மணிகளைத் தாயத்து மாதிரியோ அல்லது  மாலையாகவோ நம் உடற் தோலிற் படும்படி அணிந்து வந்தால் பலவகையான நோய்கள் குணமாகும் எனச் சித்த ஆயுள்வேத மருத்துவம் கூறுகின்றது. ஆஸ்த்மா, எலும்புருக்கி, மூட்டுவலி, பக்கவாதம், தீக்காயங்களை ஆற்றுதல், மனவழுத்தம், குழந்தைப் பேறு, ஆயுதங்களால் ஏற்படும் காயங்கள், இருமல் தொல்லை, உடற்பருமன், இதயக்கோளாறு, வலிப்பு, பேச்சாற்றல், மூச்சுக் கோளாறு, கால்களில் பாதிப்பு, வயிற்றுப் பிரச்சனைகள், தோல்வியாதி, தன்நம்பிக்கை, மனநலம், போன்றவற்றிற்குச் சிறந்த ஒரு நிவாரணியாகக் கருதப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள வெப்பத்தை இது தணித்து உடலுக்குள் ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. துறவிகள் ஏராளமான மாலைகளை அணிவது இதன் காரணமாக இருக்கலாம் என்று பின்னைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. உருத்திராட்ச மணியை 5 நிமிடங்கள் நீரில் ஊறவைத்துக் குடித்தால் உயர் இரத்து அழுத்தம் குணமாகும் என்றும் கொள்ளப்படுகிறது.
.
உருத்திராட்ச மணியை மாலையாக்கி எந்தச் சமயத்தவரும் அணிந்து கொள்ளலாம். 8 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலாரும் அணிந்து பலன்களைப் பெறலாம் .இதை அணிந்திருக்கும் போது எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கத் தேவையில்லை. ஆனால் இதன் புனிதத் தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்து சமயத்தவர்கள் இதை அணிபவர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றார்கள்.  உருத்திராட்ச மணிகள் அதன்  முகங்களின் எண்ணிக்கையைக் கொண்டு வேறுபடுத்தப்படுகின்றன. முகங்களின் தன்மைக்கு ஏற்ப இதை அணிபவர்களுக்குப் பலாபலன்கள் வித்தியாசமானவையாகக் கிடைக்கின்றன என்று இந்தியச் சித்த வைத்தியம் கூறுகின்றது. அனைத்து மதத்தவர்களும் இதன் பலாபலன் கருதி;  விரும்பி அணிவதால் இதனை ஒரு மதத்திற்கான சின்னமாகக் கருது முடியாது .
.
இந்துசமயத்தின் பா(போ)ர்வையில் உருத்திராட்சம்.
.
ஒரு இந்து சமயத்தவர் தன்னை இந்து என்று காட்டுவதற்குத் திருநீறும் உருத்திராட்சமும் அணிந்து கொள்கின்றார் என ஈழத்து ஆறுமுக நாவலரது விளக்கவுரையில் குறிபபிடப்பட்டுள்ளது.  திருநீறு மழை, தண்ணீர், காற்றுப் போன்றவற்றினால் உடலில் இருந்து அழிந்துவிடும். அதனால் அவர் தனது இந்து என்ற அடையாளத்தையும் இழந்துவிடுகிறார். அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்கும் தன்னை ஒரு இந்து என்று காட்டிக் கொள்வதற்கும் உருத்திராட்சம திருநீற்றைவிடச் சிறந்ததாக இந்து சமயத்தவரால்   கொள்ளப்ப்படுகின்றது.
.
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் கண்களைக் குறிக்கின்றன.   சிவனின் கண்ணீரே உருத்திராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. . பல்லாயிரம் ஆண்டுகளாக உடல் நலம், ஜபம், சக்தி ஆகியவற்றின் ஊடாகச் சமய ஈடேற்றம், நின்மதியான வாழ்க்கை ஆகியன வேண்டி, உருத்திராட்ச மணிகள் மாலைகளாக அணியப்பட்டு வந்தன. இமயத்திலும் ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும், ரிஷிகளும் உருத்திராட்சங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் என இந்துசமய வரலாறுகள் கூறுகின்றன. சித்தர்கள்தான் இந்த மணிமாலையை ஆரம்பத்தில் கண்டுபிடித்தார்கள் என்றும், சித்தர்கள் யாவரும் இந்து சமயத்தினராக இருந்தார்கள் என்றும், புராணங்கள் கூறுவதால் உருத்திராட்சம் இந்துக்களுக்கே உரியது என்றும் இந்து சமயத்தவர்கள் கூறுகின்றார்கள் .
.
வெண்மை, கருமை, செம்மை,  போன்ற நிறங்களால் வகைப்பபடுத்தப்  பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள் முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. நேபாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாகக் கருதப்படுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசதத்தில் உள்ள காசி நகரம்தான் இதன் முக்கிய சந்தையாகக் கருதப்படுகிறது. சில இடங்களில் போலியாக அரக்கு பிளாஸ்டிக் போன்றவற்றாலும் செய்யப்படுகிறது.
.
உருத்திராட்சம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். எங்கெல்லாம் உருத்திராட்சம் வணங்கப் படுகின்றறோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள் என்று நம்பப்படுகின்றது. உருத்திராட்சத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராட்சம் தியான வழியில் குண்டலினியை  எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராட்சம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராட்சம் அதனுடைய உயிரியல் மருத்துவப்
பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் பெற்றது.
.
உருத்திராட்சம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்தவல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளுக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும். இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது. 38 வகையான உருத்திராட்சத்தில், 21 வகை மிக பிரசித்தம் வாய்ந்தவை. மணியின் முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறன. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
ஒரு முகம்
மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய உருத்திராட்சம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராட்சம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராட்சங்களுக்கும் அரசனாகையால், இது தூய உணர்வைக் குறிக்கிறது.
இரண்டு முகம்
மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
இரு முகமுடைய உருத்திராட்சத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. .
மூன்று முகம்
மந்திரம் - ஓம் கிளீம் நம
இந்த மும்முகமுள்ள உருத்திராட்சத்தை ஆளும் கோள் செவ்வாய். இது தீக்கடவுளைக் குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் எரித்த பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராட்சத்தை அணிந்தால்  ஒருவர் தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். .
நான்கு முகம்
மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
இந்த நான்கு முகமுள்ள உருத்திராட்சத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது.
ஐந்து முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஐந்து முகங்களுடைய உருத்திராட்சத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனைக் குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராட்ச மாலை அணிந்தோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது.
ஆறு முகம்
மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
இந்த ஆறு முக உருத்திராட்சத்தை ஆளும் கோள் வெள்ளி. இது  முருகக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வருவோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, திடமான மனம் ஆகியவை  கிட்டும்.
ஏழு முகம்
மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நம
இந்த ஏழு முக உருத்திராட்சத்தை ஆளும் கோள் சனி. இது திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அமையும்.
எட்டு முகம்
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராட்சத்தின் ஆளும் கோள் இராகு. இது விநாயகரைக்  குறிக்கிறது. இது முயற்சிகளிலுள்ள தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது.
ஒன்பது முகம்
மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
இந்த ஒன்பது முக உருத்திராட்சத்தை ஆளும் கோள் கேது. இது துர்க்கையைக்  குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்கள  அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அடைகின்றனர்.
பத்து முகம்
மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முகமுள்ள உருத்திராட்சத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராட்சத்தில் உண்டு. .
பதினோரு முகம்
மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உகந்தது.
பன்னிரண்டு முகம்
மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர்.
பதின்மூன்று முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
இது இந்திரனைக் குறிக்கும். வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தையும்  இது நிறைவேற்றும்.
பதினான்கு முகம்
மந்திரம் - ஓம் நமஹ சிவாய
இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராட்சமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராட்சம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்துவிட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.
பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்
பண்டையகால முனிவர்கள் இந்த உருத்திராட்ச மணிகளைப் பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
கௌரி சங்கர்
மந்திரம் - ஓம் கெளரி சங்கராய நமஹ
இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராட்சங்கள் கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்து உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராட்சம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாகக் கருதப்படுகிறது. கௌரி சங்கர் உருத்திராட்சத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துப் பூசித்து  வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன.
உருத்திராட்சத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராட்சம் "அக்குபஞ்சர்" போல் செயல்பட்டுப் பயன் அளிக்கும். மணிகளைக் கோர்க்கும் போது ஒன்றுடன் ஒன்று முட்டாமல் இடையில் தடையங்களைப் போட வேண்டும். மணிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வு கண்டால் மணிகளின் சக்தி குறைந்துவிடும்.
மணி அளவு
பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பி அணிகிறார்கள். எனினும் உருத்திராட்ச விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராட்ச மணி சிறப்புடையது என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ; இலந்தைக் கனி அளவுள்ளது மத்திமம் ;கடலை அளவுடையது அதமம்.
செபமாலைக்குரிய மணிகள்
இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.
இதனைக் கூறும் பாடல்:
இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனேபத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.
இரு முக வெள்ளை உருத்திராட்சத்தின் மகிமை
தெய்வமணி என்னும் உருத்திராட்சம் கடவுள்களின் சின்னங்களில் மிக முக்கியமானது இது சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, முருகன், பார்வதி, லட்சுமி, வருணன், சரஸ்வதி, நரசிம்மர், அனுமான், இந்திரன், கருடன், அய்யப்பன், சனீசுவரன், வெங்கடாச்சலபதி, மாடசாமி, துர்கா, பைரவி, புவனேஷ்வரி, பவானி, குபேரன், குருவாயூரப்பன், பிள்ளையார் போன்ற வடிவங்களாகும். உருத்திராட்சம் என்பது சிவபெருமானின் திருக்கண், சிவபெருமானின் மணி எனவும் பொருள்படும்.
.
உருத்திராட்சம் அணிந்திருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று எதுவுமில்லை. உருத்திராட்சத்தை எப்போதும் அணியலாம். அவற்றை நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகிய பண்புகளுடன் அணிய வேண்டும். இந்துக்கள் மட்டும்தான் இதை அணிய வேண்டும் என்பதில்லை. பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி மனித வாழ்வைச் சிறப்பிப்பதால் இது கடவுளால் அருளப்பட்டது என்றும் கடவுள் மணி என்றும் இந்துக்கள் கருதுகின்றனர். (இந்த உருத்திராட்சத்தின் மகிமை பற்றித் "தமிழர் வாழ்வில் சைவநெறி" என்ற எனது நூலில் சிறப்பாகக் கூறப்படட்டுள்ளது) நன்றறி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நரேந்திரன்!

அனைவருக்கும் வணக்கம். இவை மிகவும் கடினமானதும் அதே நேரம் இலகுவாக்கப்பட்டதுமான ஆய்வுக்குரிய கட்டுரைகள். வாசித்துப் பயன்பெறுவதோடு அன்றி இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தயவாகக் கேட்டுக் கொள்கிறேன் .

கொழும்புப் பல்கலைக் கழகத்தில் புவியியல் விரிவுரையாளர் ஒரு விரிவுரை நடாத்தினார் .அதன் தலைப்பு "கரைகளைத் தாக்கும் பேரலைகள்"  அப்போது சுனாமி என்ற சொல்லைத்தான் இவ்வாறு அழைப்பது என்பதைப் பட்டப்படிப்பு மாணவர்கள் கூட அறியாமல் இருந்தார்கள். அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை மில்லியன் வருடங்களாகத் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் அலாஸ்காவின் கடற்கரை 200 அடிக்கு மேற்பட்ட உயரமான பாறைகளைக் கொண்டிருப்பதால் எந்தப் பாதிப்பும் பூமிக்கு இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டார். இது முக்கியமானது அல்ல எல்லோரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டேன் என்று சொல்லி விரிவுரையை முடித்துக் கொண்டார். ஆனால் அந்த வருடம் பரீட்சைக்கு அந்தக் கேள்விவந்து மாணவவர்களைச் சுனாமியைவிடக் கூடுதலாக உலுப்பி எடுத்துவிட்டது. அதே பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும் அதன் வளாகத்தில் "கோள் மண்டபம்" என்று ஒன்று இருக்கின்றது. உள்ளே சென்றால் வேற்றுக் கிரகத்தில் நிற்பதுபோல் இருக்கும் .எல்லா மண்டலங்களையும் நட்சத்திரத் தொகுதிகளையும் பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் இருக்கும் . இதைக் கனடிய விண்வெளி ஆராச்சி சிறுவனம் கட்டிக்கொடுத்தது.

இன்றைய நிலைப்பாட எனக்கு அன்று இருந்திருந்தால் ஆன்மீகவாதிகள் குறிப்பிடும் ஹோமமண்டலம் அதனுள் தெரிகின்றதா என்று உற்றுநோக்கியிருப்பேன் .ஜீவாத்மாவாகப் பூமியில் வாழும் நான், அந்தப் பரமாத்மாவின் காலடிகளை அதனுள் தரிசித்திருக்கலாம் . ஆனால் ராமகிருஸ்ணர் என்ற ஒரு ஆன்மீக விஞ்ஞானி அதனுள்ளே (ஹோமமண்டலம்) சென்று வந்த கதைதான் இங்கு விபரணமாகிறது. 18.02.1836 அன்றுதான் பூமியின் புனிதத்திற்காகப் புதிய மகவு ஒன்று அவதரித்தநாள். கதாதர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு பாடசாலை நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கவில்லை. கணிதபாடத்தில் மிகவும் குறைந்த புள்ளிகளை ஈட்டிவந்தார் .பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாததால் பள்ளிப்படிப்பை இடை நிறுத்தி கல்கத்தாவில் உள்ள ஒரு காளி ஆலயத்தில் குருக்களாகப் பணியாற்றி காளி அனுக்கிரகம் பெற்றார். காளி ஆட்கொண்டதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாகின. இதனைக்கண்ட அவரது தாயார் மகனுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்று பெண்பார்த்தார். இதனை அறிந்த அவர் பக்கத்து ஊரில் உள்ள சாரதாமணி என்ற 5 வயதுப் பெண்ணையே தான் மணக்கவேண்டும் என்று அடம்பிடித்து மணந்து மனைவியைக் காளியாக அலங்கரித்துப் பூசைகள் செய்து மகிழ்ந்தார். திருமணமாகியும் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரு மகான் தான் ராமகிருஸ்ணர். கங்கைக் கரையில் ஆசிரமம் அமைத்து அவர் வாழ்ந்து கழித்த நாட்களே அதிகம். அத்வைத வேதாந்தங்களைக் கற்று அதனூடாக இயேசு, அல்லா உட்பட அனைத்து அவதாரங்களையும்  தான் கண்டதாக அவரே கூறியும் இருக்கிறார்
இவருக்கு இருந்த ஒரே ஒரு குறை தனக்குப்பின் உலகத்தில் ஆன்மீகத்தை வாழவைக்க ஒரு சீடன் தேவை என்பதாகவே இருந்தது . அத்வைத வேதாந்தம் கற்று அதன்பயனாக 6 மாதங்கள் "நிர்விகல்ப" சமாதிநிலையில் ராமகிருஸ்ணர் இருந்தார் .இந்தநேரம்தான் தனக்கொரு வாரிசு தேவை என்பதற்காக "ஏழு மண்டலங்களில் ஒன்றான "ஹோமமண்டலம்" சென்றிருந்தார். பல தவவலிமை பெற்ற முனிவர்கள் இவரைப்பார்த்து ஆசை அற்ற உலகத்திற்கு ஆசையுடன் ஒருவன் வருகிறான் என்று நக்கல் அடித்தார்கள் .ஏழனத்தைப் பொருட்படுத்தாத இவர் தனக்கொரு வாரிசு தேவை என்று இறைவனை வேண்டினார் .கையில் ஒரு குழந்தைகிடைத்தது. பின்னர் மாயமாக மறைக்கப்பட்டு பூமியில் 17 ஆண்டுகளுக்குப்பிறகு உன்னைத்தேடி வருவான், அவனது தாயின் பெயர் புவனேசுவரி என்று கூறப்பட்டது. ஆறு மாதகாலத் தவத்தால் அடைந்த இன்பநிலையை எண்ணிப் பூமிக்குவந்து சமாதி நிலை கலைந்து சாதாரண துறவியாக மெய்ஞானியாக வாழ்ந்தார் .

12.01.1863 விசுவநாத் புவனேசுவரி தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அமைதியான ஒரு தேவவிதை கல்கத்தாவில் முளைக்கத் தொடங்கியது. கல்வி கேள்விகளிலும் இசையிலும் சிறந்து விளங்கிய இவர் மனதில் கடவுள் கொள்கைகள் பற்றிய கருத்துக்கள் முரண்பாடாகவே தோற்றம் அளித்தன. அதனால் துறவு வேடம் பூண்டவர்களைக் கள்ளச்சாமி என்றும் வாதிட்டுவந்தார். ராமகிருஸ்ணரிடம் சென்றும் தனது நண்பர்களுடன் எதிர்வாதம் செய்வார். 1881ம் ஆண்டு ஆனிமாதம் இவரை யார் என்று அறிந்திருந்த ராமகிருஸ்ணர் "உனது பிரச்சனை என்ன" என்று கேட்டார். கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் எனது ஆசிரமத்துக்குவா என்று அந்த இளைஞனை அழைத்துச்சென்றார். அவனை இருக்கவைத்து தலையில் அமத்தி இளைஞன் குளறக்குளற ஒரு சக்தியை ஊட்டினார். இளைஞன் களைத்து மயக்கமாகிவிட்டான். எழுந்ததும் ராமகிருஸ்ணரை ஏசிவிட்டுச் செல்ல முற்படும்போது இரண்டு புத்தகங்களைக் கொடுத்து வீட்டில் சென்று படி என்று வழி அனுப்பிவைத்தார் .புத்தகத்தை அலட்சியமாக வாங்கிய இளைஞன் வீடு சென்றதும் புத்தகத்தை விரித்துப் பார்த்தான் .அதிலுள்ள சுலோகங்கள் அனைத்தும் மறைந்து பார்க்கின்ற இடம் எல்லாம் ராமகிஸ்ருணரின் உருவப்படமாகக் காட்சி அளித்தது. அன்று இரவோடு இரவாக நரேந்திரன்(நரேந்திரநாத்) என்ற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ராமகிஸ்ணரிடம் ஓடிவந்து தன்னைச் சீடனாக்கிப் பின்னைய நாளில் விவேகானந்தர் என்ற பெயரைத் தனக்கு மகுடமாகச் சூட்டிக் கொண்டார் .

உலகப் புகழ்பெற்ற பல சமயச் சொற்பொழிவுகளை நடத்திய இவர் 1892  கன்னியாகுமரிக் கடல் மேட்டில் 3 நாட்கள் தங்கியிருந்து எதிர்கால இந்தியாவுக்காகப் பிரார்த்தனை செயதார் .இது இவரைப்பற்றிய சிறுகுறிப்பே தவிர முழுமைப்படுத்தப்பட்ட கட்டுரை அல்ல. கண்ணதாசன் கூறியதுபோல "இறந்தபின்னரும் மக்கள் இறந்த ஒருவரை இளமையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இளமையில் இறக்கிறார்கள் என்பதுபோல இந்த ஆன்மீக விளக்கும் தனது 39வது வயதில் தன்னை அணைத்துக்கொண்டது. இவர் இறக்கும்போது தனது பிரசங்கம் 1500 ஆண்டுகள் இந்த உலகத்தில் நிலலத்திருக்கும் அதன்பின்னர் ஒருவர் தோன்றுவார் எனக்கூறி விடைபெற்றார். இறப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது இறப்பின் திகதியைக் குறிப்பிட்ட ஒரு மகானாகவும் இவர் காணப்படுகின்றார். இவரது குரு 4 நாட்கள் முன்னதாகவேதான் தனது சமாதிநிலைபற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.
என்னை உயர்ந்தவனாக மாற்றியது என்னுள் இருந்த கெட்ட பழக்கங்கள்தான் (விவேகானந்தர்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அது



இன்று மதியம் சுவிற்சர்லாந்தின் தலைநகரம் BERN  சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். நகரத்தை இணைக்கும் Tram வண்டிகள் இங்கு சிவப்பு நிறம். தூரத்தில் பார்த்தால் இராட்சத அட்டைகள் ஊர்ந்து வருவதுபோன்ற ஒரு தோற்றம். ஒரு நிமிடத்திற்கு ஒரு Tram இருந்தாலும் மக்கள் ஓடிவந்தே ஏறுகிறார்கள் அவளவு பிசி. இந்தப் போக்குவரத்து மதிய நெரிசலிலும் Police வாகனம் சத்தம்போட்டு நீல வெளிச்சத்துடன்  மற்றைய வாகனங்களை ஓரங்கட்டி முந்திச் செல்கிறது. கூட்டத்தில் நின்ற ஒருவர் இவர்கள் ஏதோ கடமையில் ஓடுகிறார்கள் என்று நினைக்காதையுங்கோ; அவர்களும் மதியச் சாப்பாட்டிற்குத்தான் ஓடுகிறார்கள் என்றார். நானும் யோசித்துப் பார்த்தன். சரிபோலவே இருக்கிறது. ஏனென்றால் மதியவேளையில்தான் நாலாபக்கத்தாலும் அவர்கள் அதிகமாக ஓடுவதைக் கண்டிருக்கிறேன். இந்தப் பிரகண்டமான நேரத்தில்தான் நானும் மதிய உணவுக்காகப் புறப்பட்டேன்.

சாப்பாடுகள் தெருத்தெருவாக இருந்தும் எதைச்சாப்பிடுவது என்ற பிரச்சனை. அதனால்தான் வெள்ளைக்காரன் இன்று என்ன சாப்பிடவேண்டும் என்பதைச் சென்ற வருடமே எழுதிவைத்துவிடுவான். இன்று என்ன செய்யவேண்டும் என்பதை பாத்றூமுக்குள் இருக்கும்போதுதான் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள் என்று எங்களுக்கு மொழி படிப்பித்த வாத்தியார் 30 வருடங்களுக்கு முதல் சொல்லித்துந்தவர். வெள்ளைக்காரன் சமைக்கும் நேரம் குறைவு. ஆனால் அதே சாப்பாட்டைச் சாப்பிடும் நேரம் அதிகம். நாம் சமைக்கும் நேரம்  அதிகம். அதைச் சாப்பிடும் நேரம் குறைவு. சிலர் சோற்றுக் கவளங்களை வாய்க்குள் எறிந்து எறிந்து சாப்பிடுவதைப் பார்த்து இருக்கிறன். அவளவு பிசி.  

ஒரு உணவு விடுதியில் ஒரு பிற்சாவுடனும் ஒரு காப்பியுடனும் நான் உட்கார்ந்தேன். தூரத்தில் தமிழர் இருவர் சாப்பாட்டிற்காக ஆடர் கொடுத்துவிட்டு அமர்ந்து இருந்தனர். அவர்கள் மெதுவாகக் கதைப்பதாக எண்ணுகிறார்கள் ஆனால் சத்தம் வீதிவரை கேட்கிறது. பல கதைகளையும் கதைத்தார்கள். காதுகொடுத்துக் கேட்டேன். இறுதியில் கர்ணனைப்பற்றித் தொடங்கினார்கள். ஒருவர் உனக்கு கர்ணனைத் தெரியுமா என்று கேட்டார். மற்றவர் அவரைத் தெரியும் அவர் இப்போ கனடாவுக்குப் போய்விட்டார் என்று கூறினார். மற்றவர் கடுப்பானார். நான் கேட்பது பாரதத்தில்வரும் கர்ணனைப்பற்றி என்றார். அவர்கள் கதையில் நான் பொறுக்கி எடுத்தவற்றைக் கீழே தருகிறேன்.

கர்ணனும் அருச்சுனனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரு மாலை நேரம் கண்ணனுக்குத் தெரியாமல் ஆற்றங்கரைக்குச்  சென்றார்களாம். செல்லும் வழியில் ஒரு குடிசை. குடிசைக்குள் ஒரு தகப்பனும் மகனும் இருந்தார்கள். கர்ணனுக்கு தண்ணீர்த்தாகம் எடுத்ததாம். உடனே இருவரும் அந்தக் குடிசைவீட்டுக்குச் சென்று தாகத்தைப் போக்கிக் கொண்டார்கள். அந்த வீட்டு மகனைக் கர்ணனுக்குப் பிடித்திருந்ததாம். கர்ணன் தகப்பனிடம் மகனைத் தரும்படி கேட்டாராம். தகப்பனும் கொடுத்துவிட்டார். கர்ணன் சொன்னாராம். இவனை உச்சியில் இருந்து பாதியாக வெட்டி இன்று ஒரு பாதியையும் மறுவாரம் ஒரு பாதியையும் எடுத்துக் கொள்வதாக அந்தத் தகப்பனிடம் கூற தகப்பனும் சம்மதித்தாராம். கர்ணன் ஒரு உத்துரவு போட்டார். வெட்டும்போது பிள்ளை அழக்கூடாது என்று. வெட்டத் தொடங்கியாகிவிட்டது. வலப்பாகத்தை இன்று கொண்டு செல்வது என்றும் முடிவாகியது. வெட்டிக்கொண்டு இருக்கும்போது இடப்பாகத்துக் கைவிரல்களால் கண்ணீர் பொலு பொலு வென்று ஓடியதாம். அருச்சுனன் ஏன் இவன் அழுகிறான் என்று தகப்பனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு தகப்பன் தன்னையும் (அதாவது இடப்பக்க பாதி) இன்றைக்கே அழைத்துப் போகச் சொல்லி அழுகிறது என்றாராம். கதை சொல்லியவர் கடைசியில் மற்றவரைப் பார்த்து எப்படி என் கதை என்றார். மற்றவர் "நீ சின்ன வயதில் படித்த கம்பராமாயணக் கதைகளை எப்படி நினைப்பு வைத்திருக்கிறாய் என்று கேட்டார். எனக்குப் புரக்கடித்தது. வெளியில் வந்துவிட்டேன். நன்றி. காசு கொடுத்துவிட்டுத்தான் வந்தேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இடுக்கண் கழைந்த நட்பு.



அயோத்யா காண்டம் - குகப்படலத்தில் ஓர் செய்தியை  முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை முற்பிறப்பின் பயனாக குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையைக் குறிப்பிடுவதும்தான்  இப்படலத்தின் சாரம் தனிச்சிறப்பு ஆகும்.
 .
 தனக்குத் துன்பம் வந்த காலத்தில் உற்ற நண்பனை அடைந்தவன்தான்  இராமர். நல்லதொரு காலத்தே மிகச்சிறந்த நண்பனின் இயல்புகளை அளந்து பார்க்கக்கூடிய அளவுகோலாக  ராமனுக்குக் குகன் உதவினான் என்பதைக் கம்பர் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
 .
முருகப் பெருமானுக்குக் "குகன்' என்ற ஒரு பெயர் இருப்பதுபோல இராமாயணத்தில் வரும் குகனின்  பிறப்புக்கும் ஒரு புராணக் கதையுண்டு.

இராமபிரானைப் பார்க்காமலேயே அவரது குணங்களைக் கேட்டறிந்து, அதன் காரணமாக அவர்மீது பேரன்பு கொண்டு வாழ்ந்த வேடன்தான் குகன்.  "பில்' எனும் மலைஜாதி இனத்தவரின் தலைவனான குகன். முரட்டு குணமும், மாமிசம் உண்ணும்  பழக்கமும், பார்க்கவே அருவருக்கத்தக்க உருவம் கொண்டவனாக ஒரு காட்டுப் பகுதியில் குகன் வாழ்ந்து வந்தான். எனதருமை நண்பனே!'' என்று ராமபிரான் கட்டித் தழுவினார் என்றால் - இராமனின் அன்பும், நட்பும், திருவடிப் பேறும் குகனுக்கு வாய்த்திருக்கிறதென்றால், அவன் முற்பிறப்பில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! அந்தப் புண்ணியத்தையும் குகனின் முற்பிறப்புப் பற்றிய வரலாறுமே இந்தச் சிறிய ஆய்வாகும்.
.
ஆன்மாக்களைப் புனிதமாக்கும் புண்ணிய நதி கங்கை. அந்தக் கங்கைக் கரையில் ஓர் அந்தண குலத்தைச் சேர்ந்த முனிவர் தவம் செய்துவந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு புதல்வன் இருந்தான். வேதங்களைக் ஐயந்திரிபுறக் கற்று அன்பும் பண்பும் அடக்கமும் கொண்டு அந்தச் சிறுவன் வளர்ந்து வந்தான்.  ஒருநாள் தந்தையைப் பார்த்து தெய்வங்களுக்குள் சிறந்த தெய்வம் எது?'' என்று கேட்டான்.
 .
மகனே! நமது உடம்பின் உச்சியில் இருப்பது சிகை. வேதங்களின் முடிந்த முடிவாக உள்ளதும் உபநிடதம் அதர்வ சிகை. அதுபோல் தெய்வங்களின் தனிப்பெருந் தலைவர் முருகவேள். முருகன், மூவர் தேவாதி தேவர்கள் போற்றும் முழுமுதற் கடவுள். மறையாயிரங்களும் போற்றும் மகாதேவன். முருகனை வணங்கினால் எல்லா மூர்த்திகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும். அவன் கருணைக் கடல்; குணநிதி. முருகனை வழிபாடு செய்தோர், பிறவிப் பெருங்கடலைக் கடப்பர்; முக்தி பெறுவர்'' என்று முருகன் பெருமையை மகனுக்குக் கூறினார்.

 ஒரு நாள் முனிவர் கேதாரம் வரை வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவரும்வரை முனிவரின்  மைந்தன் ஆசிரமத்தில் இருந்து, முருகன் திருவடிகளைத் சரிசித்துக்  கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மன்னன் ஒருவன், முனிவர் இல்லாததைக் கண்டு மன வருத்தத்துடன் திரும்பி நாடுசெல்ல நினைத்தான். அவ்வாறு திரும்பிய மன்னனைப் பார்த்து,
 .
 வேந்தே! நீர் என்ன காரணமாக வந்தீர்? உமக்கு என்ன கவலை? என்னைச் சிறுவன் என்று எண்ண வேண்டாம். ஓர் இருள் சூழ்ந்த வீட்டில் சிறுவன் ஒருவன் விளக்கை எடுத்துச் சென்றால், இருள் விலகத்தானே செய்யும்? சிறுவன்தானே என்று இருள் அலட்சியமாக எண்ணுமா? விளக்குதானே முக்கியம்! அதுபோல, நான் சிறுவனாக இருப்பினும் என்னிடம் "ஞானதீபம்' இருக்கிறது. உமது அறியாமையாகிய இருளை நான் அகற்றுவேன்'' என்றான் முனிவரின் மைந்தன்.
 .
 மன்னன் மகிழ்ந்து, ""குழந்தாய்! நான் இந்த நாட்டை ஆளும் மன்னன். வேட்டையாடியபோது குறிதவறி, நான் விட்ட அம்பு ஒரு முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால், பிரமஹத்தி (தோஷம்) தொடர்ந்து என்னை வருத்துகின்றது இதற்கு நிவாரணத்தை நாடி வந்தேன்'' என்றான்.

 வேந்தர் பெருமானே! இவ்வளவுதானா! நீங்கள் இந்தப் புனிதமான கங்கையில் மூழ்கி, வடதிசை நோக்கி நின்று, ஒரு மனதுடன், "ஓம் முருகா' என்று மூன்று முறை கூறுங்கள் உங்களைப் பிடித்திருக்கும் பிரமஹத்தி உடனே அகலும்'' என்றான்.

 மன்னனும் அவ்வாறே செய்து, பிரமஹத்தி நீங்கப்பெற்று, முனிவர் மைந்தனைப் பணிந்து, வினை நீங்கி மகிழ்ச்சியாக தன் நகரம் திரும்பினான்.

 முனிவர், சில நாள்களுக்குப் பின் தமது குடிசைக்கு வந்தார். தன் தந்தையைப் பணிந்தான் மகன். முனிவர் தன் மகனைப் பார்த்து, ""மகனே! இங்கே தேர்ச் சக்கரத்தின் சுவடுகள் காணப்படுகிறதே, வந்தது யார்?'' என்று கேட்டார்.

 "தந்தையே! இந்நாட்டு மன்னன் பிரமஹத்தி நீக்கம் பெறுவதற்காகத் தங்களைக் காண வந்தார். அதற்குரிய நிவாரணத்தை நானே கூறினேன். மன்னன் நான் கூறியபடி செய்து, பாவம் நீங்கித் துன்பம் அகன்று மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்'' என்றான்.

 முனிவர் பெரிதும் மகிழ்ந்து, ""மகனே! வந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தாயே, இதுதான் பண்பாடு. அவருக்கு நீ என்ன பரிகாரம் கூறினாய்?''  என்று கேட்டார்.

 "தந்தையே! பிரமஹத்தி விலக - கங்கையில் மூழ்கி, ஒருமனத்துடன் "ஓம் முருகா' என்று மும்முறை கூறுங்கள் என்றேன்''.

இதைக்கேட்ட முனிவருக்குக் கடுங்கோபம் பொங்கி எழுந்தது. "மூடனே! நீ என் மகனா? என்ன காரியம் செய்துவிட்டாய்? உனக்கு முருகன் பெருமை தெரியவில்லையே? ஒருமுறை "முருகா' என்று கூறினாலே ஆயிரம் பிரமஹத்திகள் அகலுமே... ஆனால் நீயோ, ஒரு பிரமஹத்தி விலக மூன்று முறை "முருகா' என்று கூறுமாறு கூறியுள்ளாயே! இது முறையோ? நீ முருக மந்திரத்தின் பெருமையை நன்கு உணரவில்லையே! ஆதலால், நீ வேடனாகப் பிறப்பாயாக!'' என்று மகனைச் சபித்தார் முனிவர்.

 தந்தையைப் பலமுறை வேண்டிப் பணிந்து, தன் பிழை பொறுக்குமாறு மகன் வேண்டினான்.

 முனிவர் சினம் தணிந்து, ""மகனே! புனிதமான இதக் கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய்! வேடனாகப் பிறந்தாலும், "முருகன்' நாமமாகிய "குகன்' என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ராமபிரான் அவதாரம் எடுத்து வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் பெறுவாய்!'' என்று சாப விமோசனமும் கூறினார்.

 அந்த முனிவரின்  மைந்தன்தான் கங்கைக் கரையில் "சிருங்கிபேரம்' என்ற ஊரில் வேடனாகப் பிறந்து, "குகன்' என்ற பெயருடன் வாழ்ந்து  ராமச்சந்திர மூர்த்திக்கு உயிர்த் தோழனாகி சசாபவிமோசனம்  பெற்ற குகப்பெருமாள்! இதுதான் குகனின் முற்பிறவி வரலாறு. முருகப் பெருமானைப் போற்றியதால் கிடைத்த பெரும்பேறு!

 காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பதை நிரூபிப்பவைதான் நமது இந்து இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களுமாகும்.

கம்பர் கூறிய குகப்படலத்தின் சாரம் இதுதான்:- எத்தனை இழிந்த பிறவியாக இருந்தாலும்கூட, இறைவனிடத்தில் தூயபக்தி இருக்குமானால் - கள்ளங் கபடமற்ற அன்பிருக்குமானால், அவன் இறைவனின் திருவடியை அடைந்து அவரது அருளுக்குப் பாத்திரமாகிப் பேரின்பப் பெருநிலையை அடைய முடியும் என்பதற்குக் குகனும் ஒரு உதாரண புருசனாவார். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பழமை

காரைக்குடிக்குச் சென்று முத்தையா என்று யாராவது இருந்தார்களா என்று கேட்டுப் பாருங்கள். அப்படி இங்கு ஒருவரும் இருக்கவில்லை என்று உடனே பதில் வரும். ஆனால் கவிஞர் கண்ணதாசனைத் தெரியுமா என்று அதே இடத்தில் திரும்பவும் கேட்டுப்பார்த்தால்; ஆம் அவர் எங்கள் காரைக்குடியில் தான் பிறந்தவர் என்று பதில் வரும்.  பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் காப்பி அடிப்பவர்கள் என்று;  எழுத்தாளர் சுஜாதா கண்ணதாசன் அவர்களையும் வாலி அவர்களையும் தாக்கி இருந்ததை நான் படித்திருக்கிறேன். அதை உண்மை என்று வாதிட எனக்கு அறிவு இருக்கிறதா என்று பலமுறை சிந்தித்துப் துப் பார்த்தேன்.  ஒன்றில்லாமல் மற்றென்று உருவாகுமா எனற தத்துவ உண்மையைச் சொன்னவர் கண்ணதாசன்.  தான் அனுபவித்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற முறையிலும் பல பாடல்களை எழுதி மக்கள் மனங்களில் அந்தப் பாடல்களை நிலைபெறச் செய்தவர்.
.
ஒருமுறை மன உலைச்சலுடன் திருப்பதிக்குச் சென்று திரும்பும் வழியில் அவரது கடன் தொல்லைகள் தீருவதற்குற் ஒரு வழிவந்துவிட்டது என்று திரு M.S.V யிடம் இருந்து தகவல் வந்தது. அன்று கண்ணதாசனுக்குப் பிறந்த பாடல்தான் "திருப்பதி சென்று திரும்பிவந்தால் ஓர் திருப்பம் நேருமடா" என்ற பாடலாகும்.
.
ஒரு சந்தர்ப்பத்தில் மது வாங்குவதற்காகத் தன் அண்ணனிடம் காசு கேட்டிருக்கிறார் அப்போது அவருக்கு காசு கிடைக்கவிர்லை.  அறிவுரைகளே வழங்கப்பட்டன. அதனால் மனமுடைந்த கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் பாடல்தான் "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே" என்ற பாடலாகும்.
.
திரு MSV அவர்கள் மே மாதம் முழுக்க ஒரு படத்திற்கான பாடலை இசையமைக்கத் திட்டம் இட்டிருந்தார். அதற்காகவே கண்ணதாசன் ஒரு பாட்டில் கடைசிச் சொற்கள் "மே" என்று முடிவதாக ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடல்தான் "அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமே" என்ற பாடலாகும்.
.
ஒரு நாள் தொழிலில் அக்கறை இல்லாமல் தூங்கிவிட்டார் MSV என்பதற்காகவே "அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ" என்ற பாடலை எழுதினார்.
.
திரு கண்ணமாசன் அவர்கள் அறிஞர் அண்ணாத்துரை அவர்களுடன் ஒரு தூய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணாவின் அரசியல் கொள்கைகளின் கருத்து வேற்றுமையால் சிறிதுகாலம் அவரைவிட்டுப் பிரிந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணா அவர்களுக்குப் புற்றுநோய் கண்டது. மனமுடைந்த கவிஞர் "நலம்தானா நலம்தானா என்று பாடலை அவருக்காக எழுதி அதில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பண்பட்ட பாட்டை யாரறிவார்"  என்ற வரிகளையும் சேர்த்திருந்தார். பாடலைக் கேட்காமலே அண்ணா அவர்கள் இறந்துவிட்டார். பிற்காலத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக அந்தப்பாடலில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்" என்று மாற்றி அமைத்திருந்தார். இவ்வாறு பல பாடல்களைச் சந்தர்ப்பங்களுக்காக எழுதி பதிவுசெய்த பெருமை திரு கண்ணதாசன் அவர்களையே சாரும். தனது வசந்தகாலம் என்ற சுயசரிதையில் தனக்கு ஒரு காதலி இருந்ததாகவும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது ஒரு பாடல் தனக்காக எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்தான் "காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை எழுதி இறுதியில் கவிஞன் ஆக்கிளாள் என்னை என்று முடித்திரிந்தார்.
.
இது இவ்வாறிருக்க இலக்கியங்களில் உள்ள கருத்துக்களைத் தோண்டி எடுத்து படித்தவர்களுக்கும் பாமர மக்களுக்கும் விளங்கவைப்பதில் கண்ணதாசன் மிகவும் ஆழுமை பெற்றவராக இருந்தார். ஒரு காலப்பகுதியில் இலக்கியத்துள் எழுந்த கருத்துக்களை மீண்டும் தமிழ் இலக்கியத்தில் கூறுவதைக் "கூறியது கூறுதல்" அல்லது "பழமை பேணும்பண்பு" என்று அழைப்பர். இவ்வாறான நடவடிக்கை சமூகத்தின் தேவைகருதிய ஒரு கவிஞனின் கடமை ஆகிறதே தவிர காப்பி அடித்துல் என்று ஒருவரும் சொல்லுவதில்லை. கவிஞர்கள் இல்லாவிட்டால் காப்பியங்களின் கருப்பொருட்களுக்கு எப்பவோ விலங்கு பூடப்பட்டிருக்கும். இவ்வாறு இலக்கியப் பொருட்களைக் கண்ணதாசன் அவர்கள் பல பாடல்களில் புகுத்தியிருந்தாலும் இரண்டு உதாரணங்களை இங்கு வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறேன்.
.
திருக்குறளில் "நான் நோக்க நிலம் நோக்கும் என்ற அடிகளின் பொருளைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் "உன்னை  நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தாபோகும்" என்று பதிவு செய்தார்.  
.
ஒரு காலத்தில் "வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரையாரோ என்ற பாடல் காலத்தால் அளிக்கமுடியாத தத்துவப் பாடலாகும். பாதகாணிக்கை என்ற படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார். இது பட்டினத்தார் பாடிய ஒரு பாடலின் வரிகள்தான் என்றால் அதைத் தெரியாதவர்கள் நம்பமாட்டார்கள். இதோ அந்தப் பாடல்.
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே (வீடுவரை உறவு)
விழியம்பு ஒழுக மெத்திய மாந்தரும் வீதிமட்டே (வீதிவரை மனைவி)
இரு கைத்தலைமேல் வைத்து அழுமைந்தரும் காடுமட்டே (காடுவரை பிள்ளை)
பற்றித் தொடரும் இருவினை பாவ புண்ணியமே..
.
இதில் கடைசிவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் "கடைசிவரை கூட வருவது செய்த பாவமும் புண்ணியமுமே என்ற கருத்தைத் தனது பாடலில் குறிப்பிடவில்லை. அவரது நண்பர் ஒருவர் இதை ஏன் உங்கள் பாடலில் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு கண்ணதாசன் "இப்படியொரு புனிதமான கருத்தைச் சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு" என்று பதிலளித்திருந்தாராம்.
.
இந்தப் பாடலின் பொருளைக் கண்ணதாசன் அவர்கள் வெளியில் கொண்டுவராமல் இருந்திருந்தால் இவ்வாறான தத்துவ முத்துக்களை நாம் அறியாமலே அழிந்திருக்கும் என்பதுவே உண்மையாகிறது. திரு M.S.V அவர்களை நான் சுவிசில் சந்தித்தபோது ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரைப் பேட்டி காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவரிடம் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிக் கேட்டபோது என் தம்பி என்று கண்கலங்கியவர்; இறுதியில் பல விசயங்கள் கூறியதன் பின்னர் "கண்ணதாசன் தனது வாழ்வில் நின்மதி இல்லாமல் இருந்து எழுதிய பாடல்களைத்தான் நீங்கள் நின்மதியாக இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்" என்று பதிலளித்தார். கண்ணதாசன் காப்பி அடித்தார் என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதற்காகவே இதை எழுதும் முனைப்பு எனக்குக் கிடைத்தது. நன்றி நண்பர்களே.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ரா...ரா....


சிவபூமி இது சித்தர்களில் ஒருவரான திருமூலரின் இலங்கையைப் பற்றியகூற்றாகும்.  இதற்குக் காரணம் இலங்கையில் சிவனை வழிபடும் மக்கள் ஆதிகாலம் தொட்டு வாழ்ந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். "இராவணன் மேலது நீறு! எண்ணத்தகுவது நீறு" இது திருநீற்றின் பெருமைக்கு இராவணனும்  ஒரு காரணம் என்பதைத் திருஞானசம்பந்தர் வாயிலாக நாம் அறிந்த உண்மையாகும். கம்பரின் காமன் என்ற சொல்லை மாற்றிக் கருணைஉளம் கொண்ட கலைஞனாக இராவணனைப்  பார்த்தவர் சம்பந்தராவார். ஒருவன் கதாநாயகனாக வரவேண்டுமானால் அதே கதையில் ஒருவனை வில்லனாக நடிக்கவைக்கவேண்டும் என்பது காப்பியங்களின் பண்பு.  இராவணன் நடித்தாரா நடிக்க வைக்கப்பட்டாரா என்பதில்தான் குழப்பங்கள்.
.
இராவணனுக்கு எப்பவும் தொடாமல் தூக்கும் பழக்கம் இருந்தது. தாய் சிவபக்தை தன்  வயதான காலத்தில் சிவன்கோவிலுக்குச் சென்று வணங்கமுடியாது என்பதால் இராவணன் சிவனை மலையுடன் சேர்த்துத் தாய்க்காகத் தூக்கியவர். அதேபோல் சீதையைத் தொடாமல் தூக்குவதற்கும் பல காரணங்கள்  இருந்ததன. அவை என்னவென்று காண்பதில்தான் குழப்பம். இராவணனுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். இது தணிக்கை செய்யப்பட்ட ஒரு கதை. ஒருவர் பெயர் யாவா; மற்றவர் பெயர் சுமத்திரா. இந்த இரு தங்கையருக்கும் அவர்கள் பெயரில் சீதனம் கொடுக்கப்பட்ட இடம்தான் இந்தோனேசியாவில் இருக்கும் யாவா; சுமத்திரா. இராவணனது ராச்சியம் தென்னிழக்காசியாவில் பரந்து இலங்கையைத் தலைநகராகக் கொண்டு திகழ்ந்தது என்பதற்கு இதுவே போதுமானதாகும். இடையில் ஒரு காமடி.
.
இராமாயணத்தில் இராமரினதும் சீதையினதும்  வயது குறிப்பிடப்படுகிறது. ஆரண்ய காண்டத்தில் சீதையை இராவணன் தூக்கிச் செல்லும்போது அவளுக்கு வயது 18 என்று சொல்கிறார்கள். சீதை அசோகவனத்தில் அனுமானைப் பார்க்கும்போது   இராமரோடு அயோத்தியைவிட்டுக் காட்டிற்கு வந்து 12 வருடங்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறாள். அப்படி என்றால் உப்பரிக்கையில் இருந்து சீதை இராமரை விசுவாமித்திரரோடு பார்த்தபோது அவளுக்கு வயது 6. இந்த 6 வயதுக் குழந்தை பார்த்ததையா கம்பர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றும்; தோள் கண்டார் தோளே கண்டார் என்றும் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது.


அழைப்பின் பெயரில் சிவனிடம் கைலைமலைக்குச் சென்ற இராவணன் சகல வல்லமைகளும் பெற்றுத்திரும்பும் வழியில் வானத்தில் உமாதேவியார் இராவணன்முன் தோன்றகிறார். என்னிடமும் சில வரங்களை வாங்கிச் செல் மகனே என்று உமாதேவியார் சொல்கிறார். சிரித்துவிட்ட இராவணன் கடலுக்கே உப்பா என்ற பாணியில் சிவனைவிட இந்த உலகத்தில் ஒருவரும் எனக்குப் பெரிதில்லை. உனது வரத்தை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்கிறான். ஆத்திரம் அடைந்த தேவியார் இராவணனுக்கு "உன்னை ஒரு பெண்ணாலே அழித்துக் காட்டுகிறேன்" என்று சபதம் இடுகிறார். இராவணன் போடி என்று மகத்திற்குள் சொல்லி நாடு திரும்புகிறான்.
.
இராவணனுக்கு முதலாவதாகப் பெண்குழந்தை பிறக்கிறது. உமாதேவியாரின் சாபத்தை நினைத்துத் தன்னுள் பயந்த இராவணன் அந்தக் குழந்தையை யனகரின் வயலில் கொண்டு சென்று விடுகிறான். யனகர் அந்தக் குழந்தையை எடுத்துச் சீதை என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

இராமருடன் காட்டுக்குச் சென்ற சீதை அங்கு துன்பப்படுவதை ஒரு தகப்பனால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாமல் சீதையைத் தூக்கிச் சென்று அசோகவனத்தில் பாதுகாப்பாக வைக்கிறான் இராவணன். வால்மீகிககு இது தெரிந்திருந்தும் வித்தியாசமான போக்கில் கதையை வணக்கம் வரை கொண்டு செல்கிறார்.
.
இராவணனுக்கு ஒரு மகனும் இருந்தான் அவன் பெயர் இந்திரசித்து.  சீதை சகோதரி என்ற விடையம் இந்திரசித்துக்குத் தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடி உல்லாசமாக வாழும் இந்திரசித்து சீதையின் அழகைக்கண்டு கவர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டால் குலத்திற்கே நாசம் என்பதை எண்ணிய இராவணன் சீதையைத் தூக்கி அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்திருக்கலாம் என்பதற்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
.
இராவணன் ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொடுவானாக இருந்தால் தலைவெடித்து இறப்பான் என்பது கடவுள் வரங்களில் ஒன்று. அதனால்தான் சீதையைத் தொடாமல் தூக்கினான் என்பதையும் உணரலாம்.  இராவணன் இராமர் வேடம் பூண்டு சீதையைத் தொடாமல் இருந்ததற்கும் இதுவே காரணமாகும். ஆனால் கம்பர் ஒரு ஏகபத்தினி விரதனின் உருவத்தை எடுக்க இராவணனுக்கு விருப்பம் இல்லை என்று கதாநாயகன் புகழ் பாடுகிறார். தலை வெடிக்கும் விடையத்தைச் சீதையும் பணிப்பெண்கள் மூலமாக அறிந்து பயம் தெளிந்து இருந்தாள் என்று வால்மீகி கூறுகிறார். .
.
இராமாயணத்தில் போர்முறைகளுக்கு எதிராக வாலியை இராமர் ஒளித்திருந்து தான் கொன்றார் என்று சொன்னவர்கள் அதுதான் அவரது விதி என்று கணக்கை மூடி இராமரை மீட்கின்றார்கள். எது எப்படி இருப்பினும் இராவணனைக் கொன்றவுடன் இராமர் தனது ஆன்மாவைத் தானே கொன்றேன் என்ற குற்ற உணர்வுக்குள் வந்தார் என்று ஒரு ஞானி கருதுவது சரியாக இருக்கிறது. ஆன்மாக்கள் ஒன்று அவை பலவடிவங்களில் பூமியில் தோன்றுகின்றன என்பது நியதி. உலக வரலாற்றில் ஒரு பெண்ணுக்காக நடந்த பெரிய சண்டையும் பெரிய கொல வெறியும் இதுவாகும். பெரியார் சொன்னதுபோல் இந்தப் புத்தகத்தை ஒழித்திருந்தால் அதற்குப் பிற்பட்டவர்களுக்கு எந்தச் சிக்கலும் வந்திருக்காது. விடிய விடிய இராமர் கதை. விடிந்தால் சீதை இராமருக்கு என்னமுறை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கற்பரசன்

அனைவருக்கும் வணகக்கம் நீண்ட நாட்களின் பின் என் இனிய தோழமைகளைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.

படத்தில் கண்ணன் இத்தாலி நாட்டுப் பெண்களுடன் Sபெயின் நாட்டுக் கடற்கரையில் நிற்பதாக நினைத்து விடவேண்டாம். அவரைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் முனிவர்களாக இருந்து பெண்களாகப் பூமியில் வந்து பிறந்தவர்கள்.
.
அதிகமானவர்களுக்கு இராமனும் கண்ணனும் அவதார புருசர்கள் என்று தெரியும். ஆனால் இராம அவதாரமா கண்ணனன் அவதாரமா முதல் வந்தது என்பதில் சந்தேகம் உண்டு. இரண்டுபேரும் காவிய நாயகர்களாகச் சிததரிக்கப் பட்டுள்ளார்கள். இரண்டு காவியங்களையும் இதிகாசங்கள் என்று அழைப்பர் ஆன்றோர்கள். தேவாரம் திருவாசகம் எழுகின்ற காலங்களுக்கு முதல் ஆலயங்களில் இவை பாராயணம் என்ற வடிவத்தில் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. தமிழ் இலக்கியத்தில் ஒரு பாடல்.
"அன்று இலங்கை பொருதழித்த அவனே அந்தப் பாரதப் போர் முடித்து வென்றிலங்கு கதிராளி விசயதரன் என உதித்தான்" என்ற பாடல் இருக்கின்றது.

இதன் அடிப்படைடயில் அன்று இலங்கை பொருதழித்தான் என்பதில் இராமன் இலங்கையுடன் சண்டைபிடித்தான் என்ற கருத்து வருகிறது. அவனே அந்தப் பாரதப் போர் முடித்து என்பதில் இராமன்தான மீண்டும் கண்ணனாக அவதாரம் எடுத்தான் என்ற பொருள் வருகிறது. இந்தப் பாடலின் பொருள் விளக்கத்தில் இராமனுக்குப் பின்னரே கண்ணன் அவதாரம் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தப் பாடலும் விசயதரன் என்ற சோழச் சக்கரவர்த்தி ஒரு கடவுள் அவதாரமாகக் காட்டப் படுவதற்காகச் சோழர்  காலத்ததில் எழுந்த பாடலாகும. கீழே வரும் கதைப்போக்கிற்கு இந்தப் பாடல் முக்கியமானதாககும். சோழர் காலத்தில் அரசனைத் தெய்வமாக மதிக்கும் பண்பு இருந்தது.

பாரதப்போரின் உச்சக் கட்டம் துரோணரும் துரியோதனனும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கருவைக் கலைத்துப் பாண்டவர்களை வேருடன் அழிக்க எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது அபிமன்யு மனைவி உத்தரையின் வயிற்றைத் தாக்கி  உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.
.
இதிலிருந்து அவளைக் காப்பாற்ற ஒரு யோசனை சொல்லப்பட்டது. அவளது வயிற்றைப்  பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும். ஆனால் அவளது வயிற்றைத் தடவப் பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரபலமாக இருந்த பெரிய முனிவர்களும் பிரமச்சாரிகளும் தங்கள் நிலையில் தவறி இருந்தார்கள் என்பதுவே நிரூபணமாகிறது. ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவித் திரிந்த கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவி வலிபோக்கி உயிர்காக்க முன்வந்தான. இதனால் பிரம்மாஸ்திரக் கட்டு விலகி உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் கண்ணனால் காப்பாற்றப்பட்டன. இங்குதான் திரைவிலகிக் காட்சி மாறுகிறது. கிருஷ்ணன் எப்படிப் பிரம்மச்சாரி ஆவாரர் என்ற கேள்வியே எல்லோர் மனதிலும்  வியப்பாக எழுகிறது. புராணங்களின் குட்டு மீண்டும் மீண்டும் உடைக்கப் படுவததற்கு இந்தச் சம்பவம் ஓரு காரணம் என்று மக்கள் கருதலாம்.
.
இராம அவதார காலத்தில் தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர். (முனிவர்கள் போயும் போயும் ஒரு ஆணைணப் பார்த்து மயங்கினர் என்றால் பெண்ணைப் பார்த்திருநந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை) தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். இதனைக் கம்பர்  ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று கூறுகிறார். இதனால்  ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்து தாங்கள் முற்பிறப்பில் விரும்பியபடி கண்ணனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தனர். ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை. (இதனை நான் சொல்லவில்லை புராணம் சொல்கிறது) அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.
.
நாம் படிப்பதற்குக் கீதை எனும் பாடம் தந்தான் என்பதில் மகிழும் கண்ணதாசன் "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்பதிலும அர்த்தம் இருப்பதாக நான் கருதுதுகிறேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முல்லையூரான் - (க)விதை - 17


சாளரம்  திறந்த
சோலை மலர்களைக்
காற்றுக் குழந்தைகள்
பிய்த்து விளையாடின.
மகேசன் முடி தவளும்
தண்மதி பார்ப்பதற்காய்
ஓடிவந்த முகில்கள்
பழந்தமிழர் வரலாறாய்
இனத்துக்குள் அடிபட்டு
வெளிச்சங்கள் போட்டுத்
தூரநின்று அழுதுதழுது
தொலைந்தே போயின.
பந்துகளாய் உருளும்
வெள்ளை முயல்களில்
பட்டாம்பூச்சிச் சவாரிகள்
வானுலக மாளிகையில்
கனவில் பூத்தவளைக் 
காந்தள் மலராளை
நினைவில் சுமந்தவன்.
நிரை காக்கும் நிலத்தில்
மாதுளம்பூ நிறத்தாளின்
வளியிடை நுழையா
முயங்கிய இன்பத்தில்
கனியிடைச் சுவையை
நசித்துப் புசித்தவன்.
முந்தானைக் கடனைக்
கழிக்க நினைத்துக் - குடி
சேறும் இளவேனில்.
மானொத்த நீள்விழியாள்
வசமான இதயத்தில்
இசைவாழும் உள்ளத்தில்
மூச்சு காற்றுக்குள் அவள்
உமிழ்ந்த  செல்ல மொழிகள்
என்றும் எழுதா வேதங்கள்.
துயில் அழகு பார்த்தவன்
துகில் விலகும் எண்ணத்தில்
மயில் கொண்ட அச்சத்தைக்
கார்குழற் பாய்மீது
உறங்கிக் களித்தவன்.
இதழோடு இதழ்வைக்க
இமைமூடும் இல்லத்தாள்
சங்கத்து முல்லைக்கு
இருத்தலே ஒழுக்கம் என்று
இருந்திட்ட இளவரசி
முடங்கல் மடல்கண்டு
உடைந்த தரளத்துப்
பொடி எறிந்த மேனியளாய்
முல்லையூரான் முன்வந்து
இருமரம் தாங்கி நின்றாள். 
........................................
சாளரம் - யன்னல்; மகேசன் - சிவன்; சவாரி - ஓட்டுதல்; நிரை - மந்தைக்கூட்டம்;
வளியிடை நுழையா - காற்றுப் போமுடியாத; முயங்கிய - இறுக்கி அணைத்தல்;
குடி - வீடு; சேறும் - திரும்புதல்; துயில் - தூக்கம்; துகில் - உடை; கார்குழல் - கரியகூந்தல்;
இருத்தல் - ஐவகை ஒழுக்கங்களில் ஒன்று; முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்;
முடங்கல் - கடிதம்; தரளம் - முத்து; பொடி - தூள்; எறிந்த - அப்புதல்;
இருமரம் - ஆல் + அத்தி (ஆலாத்தி)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஐயுறுநிலை


இருள் உமிழ்ந்த இரவில்
அவிழ்ந்த  அல்லிக்குள்
கமழ்ந்தெழும் வாசமாகிப்
பொங்கி எழு  பாலாய்
மாடத்துப் புறாக்களுக்கு
மதனரசம் விஞ்சி நிற்கும்.
போகத்தால் தேகத்தில்
பொருதல் சமர் நடத்திக்
கூடலுக்குத் தீமூட்டி
மெய் எரிக்கும் காமத்தீ!
நீள்வழி சென்ற காளை
மீள்வழி சுணங்கும் காலை;
பூவிதழ்  இதுதான் என்று
பலரிதழ் பட்டுச்சிவந்த
பரத்தையர் அதரம் தன்னை
என்நீத்துக் களிப்பாயோ?
இளமுகிழ் மார்பதனில்
தொய்யிற்படம் பார்த்தவன் நீ;
என்றாங்கு மனமுடைந்து
தென்றலுக்குத் தேள்கொட்டித்
தோளெல்லாம் வலித்திருக்கும்.
சூடிழந்த  கொதிநீராய்
ஆடிப்போய் ஆறி இங்கு
கோதைக்கு ஊடல் ஏறி
பூக்குலைத்துப் பொட்டழித்து
மைதீட்டும் கண்ணுடைந்து
வாடிப்போய்ச் சாய்ந்திருக்கும்.
அத்தாணி மண்டபத்தில்
அத்தானின் மஞ்சத்தில்
கோடிவரம்  நாடியவள்
துணைவரவு காணாமல்
வேர்ப்பலாச் சுழை நிகர்த்த
செம்பருத்திச் சிற்பம் - இங்கு
மரித்து மடிகின்றாள்.
தரை இடை பாய்ந்து
தத்தளிக்கும் மீனாக
இசை இறந்த யாழாய்
நரம்பறுந்து பாழாகித்
தணலிடை குளிப்பதைத்
தடுக்காதே செவிலி என்று
ஈமம் வளர்த்த கிளி;
ஓங்குவரை சென்று
குதிக்கின்ற மனத்தாளாய்க்
குமிறி அழுதிட்டாள்.
.......................................................................................
மதனரசம் - காம உணர்வு; பொருதல் - உறவு; சமர் - போர்;
நீள்வழி - நெடுந்தூரம்; மீள்வழி - திரும்பி வருதல்;
என்நீத்து - என்னைவிட்டுவிட்டு; இளமுகிழ் - அரும்பு
தொய்யில் - மார்பகத்தில் கீறிய படங்கள்;
துணைவரவு - கணவனின் வருகை
செவிலி - வளர்ப்புத்தாய்; ஈமம் - சுடலை நெருப்பு; ஓங்குவரை - மலைஉச்சி

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆண்மைத்தவறு



நியங்களைப் பகற்பொழுதில்
நிழற்படம் பிடித்தவன்
நீழ்துயில் கொள்ளுகின்ற
அயரும் மாலைப்பொழுது.
கானகத்து மஞ்ஞைகள்
கழிநடம் புரிந்தகாலை
கார்பொழில் கனத்த நெய்தல்.
நெறிபடு கூந்தல் கட்டி
எறிவளி கமழும் வேளை
பொன்வண்டு முகம் மோதும்
பகன்றைப்பூப் பரத்தையர்கள்.
கத்தாளைத் தொடைகொண்டு
கருவிளைப்பூ இடை மிளிர
ஆடிப்பாவையில் அழகுபார்த்து
மருள்விழிச் சேலை காட்டி
நடிப்பினில் நாணம் தாங்கி
நாணத்தில் நளினம் ஊற்றி
நளினத்தில் உயிரை வாங்கும்
மெத்தைக்கு வித்தைக்காரர்.
அப்பிய அங்கமெல்லாம்
அந்தரத்தில் தொங்குகின்ற
உப்பிய அழகு பார்த்துக்
குறும்பறை ஆடும்வேளை
சொற்பனத்தில் சுற்றினின்று
தணிகின்ற தணலாகி
நீறாகிப் போகின்றார்.
சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அடிபட்ட தேகங்கள்
நெரிபட்டுச் சுகம் கண்டு
சந்துகளில் சரசம் ஆடி
உயிருக்குள் சிந்துபாடி
விழலுக்கு நீரிறைத்து
விடியும்கரை கமம் செய்வார்.
ஊமைக் காயம் தாங்கி
தேய்புரி பழங்கயிறாய்
அல் வந்து இல் ஏகும்
உழவுநில  மாந்தருக்கு
நித்தம் ஒரு தேன் நிலவு.
.....................................
கார்பொழில் - மழை; மஞ்ஞை - மயில்; நெறிபடு - கறுப்பு; எறிவளி - வீசும் காற்று
ஆடிப்பாவை - முகம் பார்க்கும் கண்ணாடி; சேலை - கண்ணால் ஜாடை காட்டுதல்
உப்பிய - பெரிய; குறும்பறை - ஒருவகைப் பறவை; விழல் - களை; கமம் - தோட்டம்
தேய்புரி பழங்களிறு - திறப்பணக் கயிறு; அல் - இரவு; இல் - வீடு
நெரிதல் - இறுகுதல்; ஏகும் - திரும்பிப் போகுதல்...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலை அரசன்


அவிழ்ந்த குறிஞ்சிப் பூக்களை
உமிழ்ந்த விளைநிலம்
பூவியரசி முலை பார்க்க
அதிகாலையில் எழுந்த
சூரிய தாகங்களை விரட்ட
மலை முகடுகளை
மறைத்துச் சிலிர்க்கும்
முகில் சேலைகள்.
கொம்புத் தேன் சுமந்த
புலிப்பலணிந்த வரைமகளிர்.
கொற்றவன் மாடத்தில்
குவிந்திருந்த பூவனத்தை
இதழ்பிடுங்கிச் சுவைபருக
இசைந்திட்ட கள்வர் கூட்டம்.
அரண் சுமந்து அடைத்த செய்தி
கொஞ்சத்தில் தெரிந்து
அவன் நெஞ்சத்திலே
நெரிஞ்சி முள்ளாகி
மறவன் புலத்து மாவீரன்
நாராய அம்புருக்கிச்
செறுவரை நோக்கிச்
சிவந்த கண்ணாளன்.
எயில் உடைத்து ஆங்கு
தன் அக்கினிப் பழத்தைக்
கொண்டவர் தலை கொய்து
களம் நடாத்திக் கைபிடித்த
தேக்குநிலச் சந்தனக் கட்டை.
புருசப் பசிபோக்க
எந்நாளும் பூத்திருக்கும்
இவள் பரிசமேனி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்திரச்சுமை

 

தரைநோக்கி வானம்
தவழ்ந்து வந்துவிட்டால்
பகலவன் பதிவில்வந்து
தாமரைக்கு இதழ்முத்தம்
தானாகக் கிடைத்துவிடும்.
ஒளிகசியும் கண்ணுக்குள்
உயிர்கசியும் மனத்தோடு
பருவத்தைக் களமாக்கிப
போராடும் புதுவசந்தும்.
பசலைக்கு வசப்பட்டுப்
படலைக்குள் காத்திருந்தாள்.
பூத்திருக்கும் மலர்களிலே
தேன் குடிக்கும் வண்டினங்கள்
கூத்தாடிக் களிப்பதனைப்
பார்த்திருந்து கண்வியர்த்துத்
தோழியிடம் தூதுசொல்லி
மான்குட்டித் துள்ளல்கொண்டு
இந்திரச் சுவைகள்காண
மந்திரத்தில் மறைந்தாள் பாவை.
இமயத்தைத் தூக்குபவன்
இளந்தாரிக் கற்கள் எல்லாம்
இருவிரலால் நகர்த்திக் காட்டும்
இரும்பனைய தோளுடையோன்
வரம்புகளை மீறுகின்ற
வாலிபத்தின் மிடுக்கோடு
முல்லைக்குத் தேராக
கிள்ளைக்குத் தோளானான்.
காற்றுப் புரவிக்குக்
கடிவாளம் அவளாகிப்
பள்ளிக்கு இடந்தேடி
கள்ளி வளர் காடுவரை
இருள்சூழும் வேளைக்குள
கரைமீது நடந்து சென்றான்
அங்குசக் கூர்கொண்டு
முதுகில் அறைகின்ற
அடித்துக் கனியும் பழமாக
நசிந்து கனிகிறது தனம்.
நால்வகைக் குணத்தாளில்
ஐந்துநில அழகுபார்த்து
ஆறுசுவை உணவையுண்டு
எழுபிறப்பின் பலனையெல்லாம்
எட்டுகின்ற இன்பச் சேற்றில்
நவரசம் கண்டார் இங்கே.
தூரத்தில் தோழி ஆங்கே
வெட்கத்தில் சிவந்து நின்றாள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதயத்திருடி. (க)விதை !

 
முல்லைப்பூ வெடிக்கின்ற
தேகத்தின் மணங்கமழும்
ஆம்பல்பூ முகத்தவளே;
அடுக்கிவைத்த பவளப்
பல்வரிசைப் பைங்கிளியே;
அத்திப்பூ இடைக்காறி;
ஆவரசம் பூ மேனி;
முத்தமிழில் நான் படித்த
மூன்றாம்பால் செந்தமிழே!

பொன் உருக்கும் உலை அருகில்
துடிக்கின்ற எறும்பாகக்
கள்ளிருக்கும் காந்தழ் மீது
கனநாளாய் ஆசை வைச்சன்.
வெட்டுக் கிளிபோன்ற
வேலெறியும் கண்களுக்குள்
கொடுத்தும் பறித்தும்
கணக்கின்றி இதழ்சிந்தும்
விசம் எனக்குத் தந்தவளே;
மாதுளைக் கனிதன்னில்

முகத்தினைப் புதைத்திங்கு
தலைகீழாய்ப் புவியெல்லாம்
சுத்தவைத்துச் சாகவைத்தாய்.
எழில் தோகை அருகிருந்து
சுவையரசி இயல் படித்தேன்.
இதயத்துள் அவளைப்போல்
சிற்பங்கள் பல செய்து
பணிமொழியாள் நாமத்தில்
பூசையிலே பூப்போட்டேன்.
பசித்தவளைப் படமாக்கி
அழ்மனத்தில் நான் ஒழித்தேன்.
உலகத்தை ஈடாக்கி
உன்னவளை அழி என்றால்
உலகையே அழித்துவிட்டு
என்னவளைக் களித்திருப்பேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நெய்தல் தலைவன்!


சிறு மணல் வீடுகளை
அழித்துச் சிரித்த
அலைகளைத் தின்ற
கடலின் நிசப்தம்.
முகில் வேட்டிக்கு
நிறம் தீட்டிக்களைத்துக்
குணதிசை மேவி
வெள்ளாடை அணிந்து
தீவெட்டி கொழுத்தி
புவியழகு பார்க்கும்
உதயத்துச் சூரியன்.
பன்னீர்க் குடம்
உடைந்த புற்கள்.
பூக்கள் மலரும்
மத்தாப்புச் சத்தம்
காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்.

இரவுக்குறி வென்ற
சாமச் குஞ்சுகளில்
கரவுக் கண் எறியும்
வெள்ளைத் தலைகள்.
பறவைகளின் இசைக்குள்
மௌனித்த விலங்குள்.
விழி எழுதும்
முடங்கள் கண்டு
ஊனமுற்ற மொழிகள்.

மெய் சுகத்தில் மொய் எழுதி
ஊடலில் தோற்றவர்
வெல்லுகின்ற வேளையிலே
பொழுது விடிந்ததனால்
கட்டுமேனிக் கரம் விலக்கி
கட்டுமரக் கலமேறி
புள்விழும் திசைபார்த்துக்
கடல் சென்றான் காளை.
கைக்குட்டைத் திருக்கைகள்
கலைத்துவிட்ட குழலழகில்
கக்கிய கணவாய் மை.

வாழை மடல் துடையை
மனத்திற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்.
காதல் கடிசுமந்த
கழுத்தின் உருவத்தில்
வங்கத்துச் சங்கினங்கள்.
விரல் அனைய முரல்கள்.
இருளுக்கு இருள்பூசிய
நெய்தல் நிலத்தவனின்
உடல் அழகு பார்க்கதத்
திமில் ஏறிப்பாய்கின்ற
அடிக்கடல் மீன்கள்.

பார்க்கின்ற திசையெங்கும்
பாவையவள் முகம்காட்ட
ஊதக்காற்றுக்குள் ஒழித்திருந்து
கதைகள் சொன்னாள்.
மறுமைப் பிறப்பெடுத்தும்
மன்னுவேன் செல்லம் என்று
மார்தட்டி ஊர் சொல்லி
மகிழ்ந்திட்டான் மச்சக்காளை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நெய்தல் தலைவி!


உச்சி வெயிலை
உண்ணும் கடற்கரை;
பிச்சிப் பூக்களின்
வாசம் சுமந்த காற்று;
முகடுவழி விண்நோக்கித்
துள்ளும் மீன்கள்;
கரையேறிப் படம் கீறி
விளையாடும் சிறுநண்டுகள்;
உறு மீன்களுக்காய்த் தவம் கிடந்து
சிறு முரல்களை வரமாய்ப் பெறும்
ஏமாளிக் கொக்குகள்;
ஆம்பல் மரத்துள்
மறையும் அவசரக் குஞ்சுகள்
கலவிச் சோம்பலிற்
களைத்த ஜோடிப்புறாக்கள்;
ஆங்காங்கே அலரிமர நிழலின் மீது
பொடிவைத்துப் பேசுகின்ற
பெண்டிர் கூட்டம்;
கடல்மீது அலைநுரை
பொங்கும் சிரிப்பழகன்;
உடல்மீது இதழால்
உப்புக் கோலமிடும் கலை அரசன் ;

நாண்டு விட்ட பொழுதுகளில்
வஞ்சி இடை மீது
நண்டு விட்டுக்
கொஞ்சும்  நாயகன் - ஆழி
உறவாடும் திசை பார்த்து
நங்கை சென்றாள்.
துருத்தி வழிவந்த
வெப்பம் போல - இங்கு
பருத்தி வெடித்திருக்குப்
பரவைக் காட்டில்;
பனைமரத்து அன்றிலின்
காமக் கூச்சல் - அதை
உள்வாங்கும் உடலுக்குள்
ஏதோ காச்சல்
மட்டில்லா ஆசைகளை
மனதில் தாஙகி
நாணத்தில் சிவந்த
பாவை முகம்;
வலை விரித்தால்
அள்ளிக் கொள்ளும்
சுறாவைப் போல - அவன்
தலை அசைததால்
மையல் கொள்வாள்
இந்த மங்கை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புலன்விசாரணை!


பருவக் களமாடும்
பவழவல்லிக் கொடியே; உனக்குப்
பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?
புகல் தந்த உன் இதயத்தால்
என் புலன்களை ஆளும்
உலகத்துப் புதிய அதிசயம் நீ;
சூரியனைத் தூங்கவைத்த
பூமிமங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன்விசாரணைகள்.

நீ புனலாடும் போதெல்லாம்
வெட்கத்தின் நிறம் போக்கி
கங்கை சிவக்கிறது
வள நதியில் இள வயதில்
களவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவன் நான்.
அனிச்சத்தின் சிரிப்பிற்கு
அர்த்தஙகள் நான் தேடிக்
கணனித் திரையில் காத்திருக்கிறேன்!

உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆனபின்னும்
எனக்கு ஏன் ஆயுள்தண்டனை.
உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்-
வள்ளலாக நீ இருந்தும்
வதை செய்யும் தேவதையே! - உன்
மடியில் நான் உறங்க
ஒரு வினாடி போதுமடி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதயம் பேசுகிறது


இரவின் முற்றுப் புள்ளிக்குள்
கசங்கிக் கிடந்தது வானம்.
ஆதவன் வருகைக்கு முன்
நிலவு மங்கை நித்திரையானாள்.
அன்னத்தின்  முகத்தைக்
கண்வழித்துப் பார்த்திருந்தவன்;
சீனத்து மந்திரம் போல் அவள்
சிணிங்கி எழும் அழகு கண்டு;
ஆரண்ய காண்டத்து
அயோத்திப் பஞ்சணைமேல்;
வதனத்து வார்த்தைகளை
உறிஞ்சிவிட்ட களிப்பில்
இருவருமே களைத்து விட்டார்.

அவனது இதயத்தின் மொழி
அவளது நாடிக்குள்
அங்கங்களில் உயிர் ஊட்டி
வேகவைத்த தண்ணீரில்
நோகவைத்த இடம் எல்லாம்
நெருடிக் குளிப்பாட்டி
பொட்டிட்டுப் பொலிவு காட்டி
தொட்டில் குழந்தைபோல
சுமந்திருப்பேன் என்றாங்கு

இதயங்கள் ஓயவில்லை
ஓடுகின்ற நாடிக்குள்
தேடுகின்ற இடம் எல்லாம்
அவள் நாமம் சிந்திக் கிடக்கிற
சேதிதனை யாரறிவார்.
என்னவள் பெயர் சொல்லி
இன்னும் துடிக்கிறது.
என் இதயம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இரங்கல்.


வானத்தில் ஒரு சிரிப்பொலி;
கல்லறைக் கதவு தட்டும்
சில்லறைச் சிணுங்கல்கள்;
விடிவெள்ளி ஒளி மங்கி
தரை விழுந்து முகம் பார்க்கும்
கீழ்த்திசையின் தாரகை நீ;
பூத்துக் குலுங்கும் முல்லை;
கால் முளைத்த கனகாம்பரம்;
உலகத்தில் ஒரு புள்ளியில் நீ
தேசம் தாண்டிய நதியாய் நான்;
என் உயிரைத் துளியாக்கி
உன்மீது சொரிவதற்காய்
அனல் இடை மெழுகாகிப்
புதுப் புனலாகப் பொழிகிறது
அவள்மீது என் அடைமழை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புருசவண்டு


வண்டைத் தேடிய
புது மலர் நான்;
மொட்டவிழ்ந்தவுடன்
கட்டழகைப் பார்த்தவனே
விரல் கொண்டு கதை எழுதி
என் மேனி சுட்டவனே
இதழ்மீது படங்கீறி
உயிருக்குச் சாணை பிடித்தாயே
வெற்றுக் குடத்துள்ளும்
பால் தேடும் பசி உனக்கு
உறிஞ்சிவிட்ட தேனெல்லாம்
ஒரு நெடியில் தீர்த்ததுபோல்
புலருமுன்னே சென்றாயோ
புது மலரை நாடி.
வண்டே நீ வாழ்ந்துவிடு
போதை தலைக்கேறி
நாளெல்லாம் போதாகி
மாலை மடிகின்றேன்.
நீ கூதி மனை சென்று
குளித்துவிட்டு வந்தாலும்
நாளையும் மலந்த்திடுவேன்
என் புருச வண்டே..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தலைவன் ஆற்றாமை.


காத்திருந்த கண்ணுக்குள்
பூத்திருந்த புது மலரே
நேற்று வந்த செய்தி ஒன்று
நெருப்பாகக் குத்துதடி
இடுப்பொடியத் தாலிகட்டி
இளம் சிவப்பில் பட்டுடுத்தி
சேர்ந்து படம்  பார்க்கச்
சிலநாளாய் ஆசையடி
கொல்லைப் புறம் வந்து
கொடுத்ததெல்லாம் நீ மறந்து
அல் வந்து எனையாழும்
செல்விருந்துத் தேவதையே
தொல்லை உனக்கென்று
தொலைதுர்ரம் சென்றாயோ
முல்லைக் கொடி நான் என்று
பாரி எந்தன் தேர் கேட்டாய்
கள்ழொழுகும் சிரிப்பில்
என் மெய் ஒழுக முத்தமிட்டு
மை ஒழுகும் கண்ணாளே
நீ மறைந்த மாயம் என்ன.
ஆத்தோரம் நீ நடந்து
அசலூர்க் காரனுடன்
சென்றுவிட்ட செய்தி கேட்டேன்
செத்தாலும் பதில் எழுது.
ஊராரின் பேச்சை
உமி அளவும் நம்பவில்லை
தேரோடு நிற்கின்றேன்
என் திருவிளக்கே வந்துவிடு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

களவியல்.

















காதலெனும் கணவாய்வழி
இதயம் புகுந்த புதிய தேசம் நீ
பல்லவி இழந்த சரணங்களாய் நான்;
இரவைக் குழைத்து அப்பிவைத்த
உன் கூந்தல் வெளிச்ச இருட்டில்
நட்சத்திரங்களைத் தேடுகின்றேன்.
உறவாய் வந்த என் இரத்தத் தாமரையே
உன் வரவுகள் தந்த சிறகால்
உயரங்கள் சிறுமை கொண்டன.
நிலவைத் தொலைத்த வானம்
பூமியில் உன் முகம் கண்டு மகிழ்ந்தது.
பசலை பூத்த உன் பரிச மேனி
விதைத்த வளையல்கள்  வழிபார்த்து
கருக்கலுக்குள் வந்திடுவேன்
கண்மணியே காத்திரடி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலைக்கண்ணாடி - 42 - புராணப்புரட்டு


"பெண்ணை - ஆடை கட்டிப் பார்த்தால் கலை; இல்லாமல் பார்த்தால் கவிதை; பிணமாகப் பார்த்தால் தத்துவம்." இது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று. அவரே தொடர்ந்து கூறுகையில் "உலக அழகியே மடியில் கிடந்தாலும் இவளைவிட அழகி இல்லையா என்று மனம் அங்கலாய்க்கும். கிடைத்தற்கரிய பொருள் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு குறைந்துவிடும்" என்கிறார். என்னைப் பொறுத்துவரையில் கிடைத்தற்கரிய பொருள் கிடைத்துவிட்டால் அதுவே எனது பிறப்பின்பயன் என்று கருதுவேன்.

கவி என்று ஒரு மதம் இருந்தால் அதற்குக் கண்ணதாசனையே நான் கடவுளாக வைத்திருப்பேன் என்று சொல்லும் அளவிற்கு அவர்மீது எனக்கு பக்தி அதிகம். அவரது ஒரு பாடலைப் பலவருடங்கள் கழித்து இன்று கேட்கும் சந்தர்ப்பம் வந்தது. "கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்; கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம்! காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!! .........பத்தினிகள் பெயரைவைத்துப் பரத்தையரை வளர்த்துவிடும் பாரத பூமி; இதை பாருங்கள் சாமி. அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய்; இவள் பெயரோ அகலிகை அறுபதுரூபாய்..... இப்படி அந்தப் பாடல் போகிறது. இந்தப் பாடலுக்குத் திரு MGR அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் பாரதிதாசன் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக "கோரிக்கை அற்றுக் கிடக்குதையா வேரில் பழுத்த பலா" என்று பெண்களைக் குறிப்பிட்டார். பாரதியார் மட்டும் பெண்களின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பவற்றை வேருடன் சாய்த்துப் பெண்களுக்கு இருக்கவேண்டிய குணங்கள் அறிவு துணிவு ஞானம் கல்வி என்று புதுமைப் பெண்ணாக ஒவ்வொரு பெண்களையும் விடுதலை பெறவேண்டும் என்று புரட்சியாகச் சிந்தித்தார். சிந்தித்தும் என்ன நடந்தது.
கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் சொல்வதுபோல இங்கிலாந்துப் பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் காமம் அதிகம் என்று சொல்வதையே இந்திய ஆண் சமூகம் செய்துகாட்டி மகிழ்ந்தது என்பது வரலாற்று உண்மை. பாரதம் என்றதும் ஆங்லேயர் "காந்தி" சினிமாப் பார்த்துப் பலவற்றைப் புரிந்து கொண்டார்கள்.(இந்தியர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய விடையம். காந்தி சினிமாவையும் ஆங்கிலேயர்கள்தான் எடுத்தார்கள்)  மிகுதியைக் "காமசூத்ரா" சினிமாப் பார்த்து விளங்கிக் கொண்டார்ள். பாரதத்தில் பரத்தையர்கள் எப்படி வந்தார்கள். முற்றும் திறந்த முனிவர்களே பாரதக் கதையில் மனைவிமாருடன்தான் வாழ்கின்றார்கள். அரசனின் அந்தப் புரத்தில்  இருந்து தட்டப்படும் பெண்கள் ஐயர் மாருத்குத் தானமாக வளங்கப்பட்டதாம். இவர்கள் கோவில்களை அண்டிய பகுதிகளில் ஐயர் மார்களாலும் கைவிடப்பட்டுத் தேவதாசிகள் என்ற முத்திரையுடன் வாழ்பவர்கள். சங்ககாலத்தில் இசையையும் கலையையும் வளர்த்த பாணர் குடும்பங்கள் மற்றவர்களின் இம்சைக்கும் இயைந்து போனார்கள். இவ்வாறு பெண்கள் வரலாற்றில்; கெடுதவர்கள் தப்பிக் கொண்டார்கள். கெடுக்கப்பட்டவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
இது நிரபராதிகள் தண்டிக்கப்படும் ஒரு செயலாகவே காணப்படுகிறது. கீழே இப்படி என்றால் மேலே இருக்கும் பெண்கள் எப்படியோ?

இது பிரம்மாவின் கூற்று.  அகலிகையை மணக்க விரும்புவோர் மும்முறை உலகைச் சுற்றி வரவேண்டும். அதில் வெல்பவருக்கே அவள் மனைவியாக்கப்படுவாள்  என நிபந்தனை விதிக்கப்பட்டது. பல தேவர்களோடு இந்திரனும் கௌதம ரிசியும் கலந்து கொண்டார்கள். விதியின் பயனாய் கௌதமர் வென்று அகலிகைக்கும் அவருக்கும் திருமணம் நடந்தேறியது.போட்டியில் தோற்ற இந்திரனுக்கு அவளை ஒருமுறையேனும் அடையவேணடும் என்ற விருப்பம் மேலிட்டது. ஆசை தணியவில்லை அவனுக்கு.
இந்திரன் ஒருநாள் முனிவரது இடத்திற்குவந்து கோழிச்சேவல் கூவுவதுபோல் கூவ கொதமர் விடிந்துவிட்டது என்று நினைத்து நீராடி மலர் பிடுங்க ஆற்றங்கரை சென்று விட்டார். இந்திரன் சந்தர்ப்பம் பார்த்து அகலிகையை நெருங்குகிறான். அகலிகை பார்த்த மாத்திரத்திலேயே இவன் தன் கணவன் அல்ல எனப் புரிந்து கொண்டாலும் தன் அழகின் மீது இந்திரனுக்கு இருந்த தணிக்கமுடியாத ஆசையால் (இதுதான் உண்மை. மறைக்கப்பட்ட மறுபக்கம். ஆதாரம் இருக்கிறது)  அவனுக்கு(விதியின் பிரகாரம்) உடன்படுகின்றாள். வெளியே சென்றிருந்த கெளதமர் திரும்பி வருவதற்குள் அங்கிருந்து பூனை வடிவில் மறைய முற்பட்ட இந்திரன் முன்னே; நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு வந்த ஈசனைப் போல் தோன்றிய கெளதமர் இந்திரனுக்கும், அகலிகைக்கும் சாபம் கொடுக்கின்றார். இந்திரன் தன் ஆண்மையை இழக்குமாறும், அகலிகை உண்ண உணவின்றி, காற்றையே உணவாய்க் கொண்டு, புழுதியில் புரண்டு, எவர் கண்களுக்கும் தெரியாததோர் பிறவியாகத் தூசியிலும் தூசியாக ஒரு அணுவாக இங்கேயே நெடுங்காலம் கிடந்த பின்னர், தூயவனும், நன்னடத்தையின் நாயகனும் ஆன ராமன் வருவான். அப்போது உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றார்.
வில்லை ஒடிக்கச் சென்ற ராமன் விசுவாமித்திரருடன் சாபவிமோசனத்திற்காகக் காத்திருக்கும் இடம் சென்றான்.  ராமனும் அந்த ஆசிரமத்தின் உள்ளே பிரவேசித்ததும், அகலிகை தன் பழைய உருவை அடைந்தாள். ராமரை வணங்கி நின்ற அவளை அப்போது தன் மனோவலிமையால் அங்கே வந்து சேர்ந்த கெளதமரும் மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார். ராமனும், லட்சுமணனும் விசுவாமித்திரருடன் மிதிலை நோக்கிச் செல்கின்றனர்.  தவ வலிமையால் அகலிகை சாபவிமோசனம் பெற்றதை விண்ணுலகில் இருந்து அறிந்த கொதமருக்கு தனது வீட்டு முற்றத்தில் இந்திரன் வந்து கோழிபோல் கூவியது மட்டும் தெரியாமல் போய்விட்டது ரிசிகளின் கேவலம்.  இது கதையா புரட்டா. பெண்களை அடிமைப்படுத்தும் அரக்கர் கூட்டமா புரியவில்லை.
அதுசரி கலியாணத்தில் அகலிகைதான் அம்மிக் கல்லாக இருக்கிறாள் என்று மணமகளை வெருட்டி அதில் வைத்து மெட்டி அணிவிக்கிறார்கள். கொதமர் அவள் தூசியிலும் துர்சியாக இருக்கவே சாபம் இட்டார். பார்க்கப்போனால் மாப்பிளை கனக்கக் குனியக்கூடாது என்பதற்காக சிறிது உயரமாகக் காலைவைப்பதற்கே அம்மிக்கல் பாவிக்கப்படுகிறது என்பதுவே உண்மைபோல்இருக்கிறது. வாழ்க மணமக்கள்.நப்பண்ணனார் இயற்றிய பரிபாடல் தொகுப்பின் பத்தாம் பாடல் அகலிகையின் கதை கூறுகிறது.
இந்தியா பரவாயில்லை. அமரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 300 பேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறார்களாம். உண்மை தானா?

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காமன் தோட்டம்


அன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான்.  எனது துவிச்சக்கரவண்டியில் வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். வேகத்திற்கு காரணம் குடை இல்லாததுதான். வேல்ட் றைக்கோட்டுக்காக அல்ல. கிராமத்து மக்கள் மழைநீரை கடலினுள் செலுத்துவதற்காக வீதிகளை வெட்டி வாய்க்கால் செய்து கொண்டிருந்தார்கள். வீதியைப் போடும்படி அரசிடம் கேட்பார்கள். வெட்டும்போது யாரிடமும் கேட்கமாட்டார்கள் சைக்கிளில் வேகமாக வந்தவர்கள் வெட்டிய குழிகளுக்குள் விழுந்து எழுந்து சிரித்துவிட்டு மீசையில் மண்படவில்லை என்பதை ஞாபகம் ஊட்டிச் சென்றார்கள்.  முருங்கை மாதிரி வளர்ந்து இருக்கிறாயே தவிர உன்னால் ஒன்றும் இயலாது என்று தெருவில் நின்ற தன் புருசனைப்பார்த்து மனைவி திட்டுகிறாள்.திட்டுதலுக்கு இங்கு காரணம் எதுவும் இல்லை. புருசன் என்ற சுய மரியாதைதான். முருங்கை; முள்முருங்கை என்று இரண்டு உண்டு. அதில் எந்த முருங்கையைத் திட்டினாள் என்று எனக்குச் சந்தேகம். இந்தியாவில் முருங்கைக்காய் இப்போது கொடியில் காய்க்கிறது. புடலங்கயைப்போல. முருக்குப் பெருத்துத் தூணுக்கு உதவாது என்று சொன்ன வாத்தியாரும் துலாவடி முருங்கில் முதுகு தேய்த்ததை நான் பார்த்து இருக்கிறேன். திடீரென்று பக்கத்துவீட்டு அக்கா என்னை அழைக்கும் சத்தம் கேட்டது. அந்தக்காலத்து வாய்த் தொலைபேசி. 50 மீட்டருக்குள் கதைக்கலாம்.
ஓடிச்சென்று பார்த்தேன் மழை காலத்தில் எங்கள் கிராமத்தில் பனாட்டு சாப்பிடுவார்கள். எனக்கும் சாப்பிட பனாட்டுக் கிடைத்தது. அது மண்கும்பான் பானாட்டு என்று நினைக்கிறன். இடை இடையே மண் கடிபட்டது. அது யோசப்பின் பாபா கொடுத்த அல்வாவைவிட ருசியாக இருக்கும். "அத்தானுக்கு 2 சிகரட் வாங்கிவாடா. பிறகு துள்ளு பிராண்டி கிள்ளுபிராண் விளையாடுவம் என்றார் அக்கா. அவர் திருமணம் ஆனாலும் முந்தானை முடிச்சில் வரும் ஊர்வசிபோல் எங்களுடனேயே காலத்தைக் கழிப்பார். சிகரட்டை வாங்கி வரும்வழியில் நெருப்பு மூட்டாமலே 2 இழுவை இழுத்துப்பார்ப்பது என் வழக்கம். அத்தான் என்னடா நனைந்து இருக்கிறது என்றுகூட கேட்டிருக்கிறார்.
விளையாடத் தொடங்கியாச்சு. ஆறு ஏழு பேர் வட்டமாக உட்கார்ந்து கையை கவிட்டுவைத்து ஆரம்பமாகியது. அக்காதான் தலைவர். அவர் எங்கள் பிறங்கையில் நுள்ளி நுள்ளி "நுள்ளு பிராண்டி கிள்ளுப்பிராண்டி உங்கக்கா தலையில் என்னபூ என்று கேட்பார். நாங்கள் முருக்கம்பூ என்று சொல்லவேண்டும். பிறகும் முருங்கை மரம் காட்சிக்கு வருகிறது. அதே நேரம் "மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது என்று சிறிய வயதில் அம்புலிமாமா புத்தகத்தில் படித்த நினைவும் வருகிறது. வீட்டு முற்றத்தில் நிற்கும் முருங்கையில் இருந்து காகங்கள் கரைந்து கத்தும்போது என்னை அகத்திய முனிவர் பற்றிச் சிந்திக்க வைத்தது. அவரது கமண்டலத்தில் இருந்து காகத்தால் தட்டி விடப்பட்ட நீரே கங்கையாக ஓடிற்று என்று புராணம் கூறுகிறது. அகத்தியரைக் குறு முனிவர் என்று படித்தபோது யாரோ ஒருவர் அவரை உயரத்தில் நின்று பார்த்து இப்படிக் கூறினார்களோ என்றும் யோசித்து இருக்கிறன். எங்கள் கிராமத்திலும் ஒரு கட்டை மனிதர் அகத்தியர் உருவத்தில் இருந்தார். மிகவும்  புத்திசாலி. அவரை நாங்கள் பெரியவர் என்று அழைப்போம். எனக்கு மரங்களில் ஏறியிருந்து கதைபடிக்க ஆசை. அதனால் மு.வரதசாசரின் "நெஞ்சில் ஒரு முள்" கதையை முருங்கை மரத்திரத்தில் ஏறியிருந்து படித்துக்கொண்டு இருந்தன். திடீரெனக் கொப்பு முறிந்து நான் கிளுவை வேலியில் விழுந்து தொடை எல்லாம் முள்ளுக் குத்தி வேலிக்குப் பக்கதில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன். நெஞ்சில் ஒரு முள் தொடையில் ஒரு முள்ளாக மாறியதை நான் இப்பவும் இரைமீட்கின்றேன். கால் கை தொடை எல்லாம் காயங்கள். காயப்பட்டுத் தண்ணீருக்குள் விழுந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
மறுவாரம் எங்கள் கிராமத்தில் ஒரு கலைவிழா நடக்க இருக்கிறது. அதில் "காமன் தோட்டம்" என்ற நாடகத்தில் நான் இந்திரனது மகனாக  நடிக்க இருக்கிறேன். அந்தக் கதையில்கூட எனக்கு முள்முருங்கை பற்றிய விளக்கத்திற்கான சிறிய பாத்திரம் தரப்பட்டீருந்தது. அதில் எங்கள் ஊர் பெரியவர் அகத்தியர் வேசம் போடுகிறார். கதை இதுதான்.
தென் பொதிகை மலையில் தவம் செய்துகொண்டிருக்கும் அகத்தியர் மிகவும் கட்டுப்பாடானவர். தமிழை வளர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். சித்தர் வரிசையில்அவருக்குத் தனிமரியாதை உண்டு. பல மூலிகைகள் மூலம் ஆயுள்வேத மருத்துவத்திற்கு உதவி பண்ணியவர். இப்படிப்பட்ட அவரைக் கௌரவிக்க வேண்டும் என இந்திரன் பலநாட்களாகத் திட்டம் ஒன்று போட்டான். இந்திரனின் அழைப்பை ஏற்று அகத்தியமுனிவரும் இந்திரனது சபைக்குப்போகின்றார். அகத்தியரை வரவேற்பதற்காக இந்திரன் தனது நடன மங்கைகளான அப்சரா குழுவின் நடனத்தை ஏற்பாடு செய்திருந்தான். அதில் ரம்பை ஊர்வசி மேனகை என்பவர்கள் மிகவும் அழகானவர்களாக இருந்தார்கள்.

அகத்தியருக்குப் பக்கத்தில் இந்திரனது மகன் உட்கார்ந்து நடனத்தைக் களித்தான். இந்திரனின் மகன் என்றால்சொல்லவா வேண்டும். அழகில் சிறந்தவன். (அதனால்தான் என்னை இந்த நாடகத்திற்கு எடுத்தார்கள்) நடனமாடிக் கொண்டிருந்த ஊர்வசியைக் காமக்கண்கொண்டு பார்க்கத் தொடங்கினான். ஊர்வசியும் அவனது கணையில் விழுந்தவளாக அவனையே பார்த்துப் பார்த்துக் கண்களால் கதைபேசினாள். இதை அகத்தியர் பார்த்துவிட்டார். அகத்தியர் தனக்கு இழைக்கப்பட்ட மரியாதைக் குறைவாக இந்த நிகழ்வை எண்ணினார். இந்திரனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்திரன் அகத்தியரைப் பார்த்து இவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்.இந்திர லோகத்தைக் காப்பற்றுங்கள் என்றும் கட்டளை இட்டான். உடனே அகத்தியர் இந்திரனது மகனைப் பார்த்து "நீ பெண்களைக் காமக்கண்கொண்டு பார்ப்பதால் பூமியில் முள்முருங்கை மரமாகப் பிறக்கக் கடவாய் என்று சாபமிட்டார். ஊர்வசியைப் பார்த்து நீ பூமியில் ஒரு ஆடலரசியாகச் சென்று பிறந்து சாபவிமோசனத்தைத் தீர்த்துக்கொள் என்றார்.

அந்த ஊர்வசிதான் காவிரிப்பூம் பட்டினத்தில் மாதவியாகப் பிறந்து  நாட்டியப் பேரொளியாகத் திகழ்ந்தாள் என்று ஐதீகக் கதைகள் கூறுகிறன. சைவத் திருமணங்களில் அக்கினி எரித்து அருந்ததி காட்டித் திருமணம் நடைபெறும் பகுதியில் ஒரு முள் முருங்கை மரமும் நடுவார்கள். அதுதான் இந்திரனது மகனது பிறப்பு. அந்த முருங்கை மணமகனுக்கு "நீயும் அடுத்தவன் பொண்டாட்டியையோ பிற மாதர்களையோ பல யோனிபேதங்களையோ பார்த்தால் உனக்கும் மறுபிறப்பு முருங்கை மரம்தான்" என்பதை நினைவு கூரவும் ஆண்களை ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகவுமே முள்முருங்கை நடப்படுகின்றது. அதனால்தான் முருங்கை மரத்தில் இருக்கும் முட்கள் பெண்களின் குறிகள் போல் அமைந்திருக்கின்றன. அதைப் பொத்திப் பிடிக்கும்போது கைகளில் சேதம் உண்டாகி இரத்தமும் வழிந்துவிடும். பல பெண்கள் தொடர்பு மணமகனுக்கு இப்படி அழிவைக்கொடுக்கும் என்ற தத்துவமே முருங்கைமரம்.
அந்த அடைமழைக் காலத்தில் தெருவில் நின்ற அக்கா முருக்கு பெருத்துத் தூணுக்கு உதவாது என்று திட்டியது என்னைத்தானோ என்று இப்ப யோசிக்கிறன். ஏனெனில் நான் நாடகத்தில் இந்திரனின் மகனாக நடத்தேன். அவரும் நாடகம் பார்த்தவர். மகனுக்கே இந்தத் தண்டனை என்றால் பூமியில் வந்து அகலிகையைக் கெடுத்துவிட்டுப்போன இந்திரனுக்கு என்ன தண்டனை என்று யாரிடம் நாம் கேட்பது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூல்வேலி



எங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று அழைப்பார்  மகனே என்பது மான என்று மருவி அவரை மான சின்னையா என்று அழைத்தார்கள். இப்படி ஊரில கத்தல்; அசம்பாவிதம்; சைவம்; சின்னவன்; தாலியறுப்பு என்றெல்லாம் சிலருடைய பெயருக்கு முன்னுக்குத் தாங்களாகத் தேடிக்கொண்ட பட்டப்பெயர்கள் உண்டு. ஒருநாள் இப்படித்தான் டென்மார்க்கில் ஒரு திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்திப் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தார்கள். (ஒபாமா: மண்டேலா: ரகுமான்; வைரமுத்து என்று நினைத்து விடாதீர்கள். நம்ம சனம்தான் வந்தது) திடீரென மண்டபத்தில் நின்ற ஒருவர் தனது மனைவிக்கு "சிறி அண்ண பேசுகிறார்" என்றார். எனது பேச்சு முடிந்ததும் எனதருகில் வந்து "நீங்கள்தானே சிறி அண்ணா" என்றார். 30 வருடங்கள் களிந்துவிட்டது எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றேன். அவர் சொன்னார் "நீங்கள் பேசுகின்றபோது பாவிக்கும் சொல்லில் இருந்து நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன் என்றார். அந்தச் சொல் என்னவென்று கேட்டு மகிழ்ந்தேன். வாசகர்களுக்கு அது தணிக்கை செய்யப்பட்டுள்ளது. பிறகு எனக்கும் ஒரு பட்டம் வந்துவிடும் அல்லவா!  ஊரில் தாலியறுப்பு என்று அழைக்கப்படும் அந்த தாத்தா ஒரு தாலியையும் அறுக்கவில்லை ஏனென்றால் அவர் ஒருவருக்கும் தாலிகட்டவில்லை. பிரமச்சரிய விரதம்.
தாலி என்றவுடன் பத்திரிகைகளில் வரும் செய்திகள் மனத்திரையில் பதிவாகிறன. "தாலியை ஒற்றிய வாலிபர் பொலிசில் சரண்"  தாலியைத் திருடிய கணவன்" தாலியைக் கழற்றியெறிந்த தாரம்"  தாலியை விற்றுப் பிள்ளைகளைப் படிப்பித்த தாய். கையில்காசு கழுத்தில் தாலி"  "தாய் மகளுக்குக் கட்டியதாலி(இது ஒரு சினிமாவின் பெயர்). இதைவிட ஈழத்தில் போர்க் காலத்தில் சிங்கள ராணுவம் தமிழ்ப் பெண்களின் தாலிகளைக் களவாடித் தங்கள் கழுத்துக்களில் அணிந்து கொண்டார்கள். 2002 ம் ஆண்டு புலிகள் மண்டதீவு முகாம் அடித்து ஆயிரக்கணக்கில் ஆமிகளைக் கொண்றபோது சிலரது கழுத்துக்களில் தாலிக்கொடிகள் கிடந்ததைக் கண்டார்கள்.
தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை ஆபரணம்  ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது அதன் முக்கிய குறியீடு. குறியீடு இருந்து என்ன பலன். சிலர் குறிதவறியும் விடுகிறார்கள். குறியீடு இல்லாமலும் பல பெண்கள் குறிதவறாமல் வாழ்கிறார்கள். சிறை காக்கும் பாதுகாப்பைவிட நிறைகாக்கும் காப்பே கற்பு என்று வள்ளுவர் சொல்லி 2000 வருடங்கள் சென்றுவிட்டன. அதனால் உலகம் அதை மறந்துவிட்டதுபோலும். களவையும் கற்றுமற என்பது களவியலுக்குத்தான் சொல்லப்பட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.
தாலி – என்ற சொல்லின் பிரயோகம் அதன் வேர்ச்சொல் என்பன இன்றுவரை. இனங்காண முடியவில்லை. நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து அதாவது சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவற்றில் அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததிற்கு எந்தவிதமான பதிவுகளும் இல்லை. கோவலன் கண்ணகி திருமணத்திலும் தாலிகட்டியதாக எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன் அவர்கள்தான். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி அவர்கள் மட்டுமே. இருந்தும் அவரால் எந்த வரலாற்றுப் பதிவுகளையும் ஆதாரமாகக் காட்ட முடியவில்லை. கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டிலும் தமிழர் மத்தியிலும் தாலி என்ற சொல் வழக்கத்தில் இருந்தது கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார் அவர்கள் பழந்தமிழர்களிடத்தில் தாலிகட்டும்  வழக்கு இல்லவே இல்லை என்று கூறுகின்றார்.  திருவள்ளுவர் கூட ஒரு இடத்திலும் தாலிபற்றிக் கூறவில்லை. சொற்களுக்குப் பொருள்கூறும் தொல்காப்பியத்திலும் தாலிபற்றி எதுவும் கூறப்படவில்லை. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலிகட்டுதல் என்ற விடையமே பாடப்படவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.காஞசி கைலாசநாதர் கோவில் தூண் கல்வெட்டு ஒன்றில் குந்தவை கொடையாகக் கொடுத்தது."ஆறு களஞ்சேய் குன்றி தாலிமணிவடம் என்று ஒரு குறிப்பு வருகின்றது.
தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. 11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.

பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆணாதிக்கச் செயற்பாடாக தற்போது சில முற்போக்கு எண்ணமுடையவர்களினால் பார்க்கப்படுகிறது. இப்படி பல விடயங்கள் வரலாற்றில் உள்ளபோதும் அவற்றை எல்லாம் ஒரு அறிவுக்காக அறிந்து கொண்டு  நாம் இப்போ  நிகழ்கால நிகழ்வுக்கு வருவோம்.
தற்போது கல்யாணத்திற்கு தாலிக்கொடி செய்வதை ஒரு போராட்டம் என்றே கருதவேண்டும். காரணம் தாலி என்னும் வறட்டுக் கெளரவம்  படியேறிப்  படியேறி  தற்போது 50 பவுனில் வந்து நிற்கின்றது. இதைவிட சிலர் பேரப்பிள்ளையையும் கண்டபின், தமது பழைய தாலியை புதுப்பித்து 50 பவுணில் பெருப்பித்து கட்டுவதும் நடைபெறுகிறது.
சிலர் தமது மகளின் கல்யாணத்திற்குச் சிங்கப்பூர்  சென்று, மகளுக்கு உரிய நகை; தாலி வாங்குவதுடன் கணவன் தன் மனைவிக்கும் புதுத்தாலி வாங்கி வருகின்றார். 
தமிழ் நாட்டில் என்னதான் பணக்காரர்கள் என்றாலும் அவர்கள் மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அப்போதுதான் மூன்று முடிச்சு போடமுடியும்! பின்னர் தாலிப்பெருக்கம் என்ற கிரியைசெய்து பவுண் கொடியில் தாலியை மாற்றுவார்கள். ஆனால் ஈழத்தில் மட்டும் எப்படிப் பவுனில் தாலிக்கொடி கட்டும் வழக்கம் வந்ததோ தெரியவில்லை. இந்தத் தாலியக்கட்டின சண்டைப் பிரச்சனையால் எத்தனை தாலியைத்தான் கட்டுதுகள். சாமத்தியவீட்டுக்குப்போக ஒரு தாலி; ஆசுப்பத்திரிக்குப்போக ஒரு தாலி; திருமணவீட்டுக்குப்போக ஒரு தாலி என்று வித்தியாசமான மொத்தங்களில் சிலர் தாலி வைத்திருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால் "தாலி ஒரு சங்கிலியில் களற்றாமல் கழுத்துடனேயே கிடக்கிறது. கொடிதான் மாத்தி மாத்தி போடுகிறது என்று புருசனது உயிரையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் காப்பாற்றுபவர்கள்போல் ஒரு பில்டப். சிலருக்கு தாலிகட்டு அன்று எந்தக்கூறைச்சேலை உடுத்தது என்றே தெரிவதில்லை. இருப்பதெல்லாம் ஒருமுறை உடுத்த கூறைகள். தாலிகட்டுப் படத்தைப்பார்த்துத்தான் அதைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானம் வீடுகளில் வளர்ந்துவிட்டது.
முடங்கப் பாய் இல்லாவிட்டாலும் சடங்கை நிறுத்தாத சம்பிரதாயம் தமிழர் கலாச்சாரமாகிவிட்டது. பிற்பட்டகால கலாச்சாரத்தில் வியாபாரம் கொரவம் என்ற இருவேறுபட்ட வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடித் தாலிகளுக்குப் பல பெயர்களைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவற்றின் பெயர்களைப் பாருங்கள். எது பொருந்தும் என்பது உங்கள் பெருந்தன்மையில் தங்கிநிற்கிறது.
1. பெருந்தாலி, 2. சிறுந்தாலி, 3. தொங்கு தாலி, 4. பொட்டுத் தாலி, 5. சங்குத் தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத் தாலி, 8. உருண்டைத் தாலி, 9. கருந்தாலி 10. ஜாகத்தாலி, 11. இருதாலி, 12. தாலிக்கட்டி 13. வைரத்தாலி 15. சங்கிலித்தாலி என புதிய வடிவங்களில் நீண்டு செல்கிறது.
கொம்புத்தாலி அல்லது தொங்கு தாலி (கொம்புத் தாலி நடுவில் இருக்க காசுகள் இருபக்கமும் இருக்கும்) என்பது தமிழ் சைவ கலாச்சாரத்தையும்பின்பற்றி அணிவது வழக்கமாகும்
கொம்புத் தாலிக்குப் பக்கத்தில் இரு பக்கமும் குறைந்தது ஒவ்வொரு பவுணில் காசுகள் போடுகிறார்கள். இதற்கு தடை என்று பெயர். ஏன் எதற்கு என்ற கேள்வி இல்லாமலே ஊரோடு ஒத்தோடுகின்றார்கள். ஒருவராவது ஏன் என்று கேட்டு ஓடவில்லை. அணியப்படும் காசுகுளில் ஒரு பக்கம் ராசாவும் மறுபக்கம் ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துபடி இருக்கிறார்கள். அதுவும் ஆங்கில நாட்டு ராசா ராணி. இவர்களுக்கும் தமிழர் தாலிக்கும் என்ன சம்பந்தம். ஒருவேளை ஒருகாலத்தில் ஒன்றும் அறியாத தமிழர் இவர்களை ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று கருதினார்களோ தெரியாது. அதுதான் போகட்டும். சாள்சு டயானா கதை தெரிந்த பின்னரும் ஏன் என்ற கேள்வியை எந்த மாப்பிளை மாரும் குருக்களிடமோ தங்கள் பெற்றோர்களிடமோ கேட்டது கிடையாது. சுவிசில் பல வருடங்களுக்கு முன்பு UBS வங்கியில் தமிழ்ச்சனம் ராசா ராணி காசுக்கு கியூவில் நின்றார்கள். அப்போது வங்கியில் வேலைபார்த்த வெள்ளைக்காரன் கேட்டான். "ஏன் இதைப் போடுகிறீர்கள். உங்கள் அப்பாவையும் அம்மாவையும் இந்தக் காசில் போட்டு தாலியில் கொழுவினால் என்ன" என்று. சில தமிழர்கள் அவனைப்பார்த்துச் சிரித்தார்கள். சில தமிழர்களுக்கு மொழி விளங்கவில்லை.
இந்த உத்தியைத் தனக்குச் சாதகமாகப் பாவித்து சிங்கப்பூர் நகைக்கடைக்காரர் ஒருவர் 18 கரட்டில் ராசா ராணி போட்டு காசு செய்து சுவிசுக்கு அவரது தரகர் மூலமாக 22 கரட் என்று கொடியுடன் சேர்த்து  அவித்துவிட்டார். இப்போது சிலரது காசுகள் கறுக்கிறதாம். இலங்கைத் தமிழர் உலகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்பது இதைத்தானோ?.
ஒரு திருமணத்திற்கு 4 கிராம் பவுணும் ஒரு மஞ்சள் கயிறுமே போதுமானது. தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது. ஈழத் தமிழினமே கொஞ்சம் சிந்தியுங்கள். எங்கள் தொப்புழ் கொடி உறவுகள் என்பீர்கள். ஈழத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு தாலி கொடுத்திருக்கிறீர்களா? புலம் பெயர்ந்த தமிழ் பெண்ணினமே அடுக்கி வைத்திருக்கும் கூறைச் சேலைகளை பெட்டியுடன் இருந்து இத்துப் போவதற்கு இடையில் உங்கள் உறவுகளுக்கு ஈழத்திற்கு அனுப்பி வையுங்கள்.
தாலி பெண்ணிற்கு ஒரு வேலி என்பது ஆணாதிக்க சமுதாய சுலோகங்கள். வேலி நூலில் இருந்தாலும் தங்கத்தில் இருந்தாலும் அதற்கான புனிதத்துவத்தைப் பாதுகாத்துவாழும் பெண்களே போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஒரு பாடல் இருக்கிறது. "ஒத்த ரூபா தாறன் நீ ஓடப்பக்கம் வாவேன்........இதில் கடைசியில் பெண்ணுக்கான பாடல் வரிகளில் "மஞ்சள் கயிறு தந்தால் மாமா மடியில நான் வாறன்"  இதுதான் உண்மையான நூல்வேலி. தாலி என்பது கணவன் மனைவிக்கான அங்கீகாரமே தவிர ஒரு பெண்ணிற்கான விலங்கு என்று கருதுவது முட்டாள்தனமானது.
(இந்தக் கதை புலம்பெயர்ந்தத ஈழத்தமிழர்களை மையப்படுத்தியே எழுதப்பட்டது)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனக்கணக்கு



அவன் ஒரு பாவப்பட்ட யென்மம். அவன் மட்டுமல்ல அவனைப்போன்ற ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அந்நிய தேசத்தில் மனைவி பிள்ளைகளை வசதியாக வாழவைப்பதற்காக இரும்புத் தொழிற்சாலைகளிலும்; கட்டிட வேலை நிறுவனத்திலும்; பாரிய கைத்தோழில் பேட்டைகளிலும் இரத்தத்தைப் பிழிந்து உழைக்கின்றார்கள். -20 பாகை குளிரிலும் ஒரு நிமிடம் கூடப் பிந்தாமல் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலை தொடங்கும் நேரம் காலை 7 மணி என்றால் 7 மணிக்கு முதலே நமது வரவுக் card  ஐ அடித்துவிடவேண்டும். 7 மணி ஒரு நிமிடத்திற்கு அடித்தால் card இல் 7.15 க்கு வேலை தொடங்கியதாகவே பதிவாகும். அந்தப் பிந்திய 15 நிமிடங்களுக்கும் சம்பளம் வழங்கப்படமாட்டாது. இப்படி 4 தொழிலாளர்கள் பிந்திவந்தால் ஒருமணித்தியாலத்திற்கான உழைப்பு கம்புனிக்கு வருமானம் ஆகிறது.சுருக்கமாகச் சொன்னால் ஒருகாலத்தில் வெள்ளைக்காரன் நமது நாட்டுக்கு வந்து எங்களைச் சுரண்டி வாழ்ந்தான். இப்போ நாங்கள் அவர்கள் நாட்டுக்குவந்து நாமாக அவர்களைச் சுரண்டவிட்டு வாழ்ந்து காலத்தை ஓட்டுகிறோம். ஐரோப்பிய நாடுகளில் சிரிப்பைப் பலவழிகளிலும் தொலைத்த தமிழர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காது. வெளியில்தான் வேதனை என்றால் சிலருக்கு வீட்டிலும் நரகவேதனைகளும் உண்டு.

அவனுக்கு காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வேலை. எழும்பும்போது அலார்ம் அடிக்கும் கடிகாரத்தில் எரிச்சல். தானாகக் காப்பிவைத்துக் குடிக்கும்போது மனைவியில் எரிச்சல். வேகமாகக் கிளம்பும்போது முதலாளியில் எரிச்சல். மொத்தத்தில் இது ஒரு நரகம். சொர்க்கமும் பூமியில்தான் இருக்கிறது என்பதை இறக்கும் வரை உணரமுடியாத நிலை. அவனுக்கு 4 மணிக்கு வேலை முடிகிறது. வேலை நேரத்தில் கைத்தொலைபேசிகளை ஓவ் பண்ணிவைக்கவேண்டும் என்பது அவனது கம்பனியின் கட்டுப்பாடு. வேலை முடிந்து ஒரு காப்பியைக் குடித்துவிட்டு கைத்தொலைபேசியை ஓண் பண்ணினான் அவன். வீட்டில் இருந்து அவனது மனைவி 10 நிமிடத்திற்கிடையில் 23 தரம் கால்பண்ணியிருந்தாள். அவசரமாகத் தனது காரை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
திருப்பி எடுப்பதற்கிடையில் மறுபடியும் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. "நான்தான் கதைக்கிறன். எப்ப வேலை முடிந்தது. ஏன் உடனே தெலைபேசியைப் போடவில்லை. 108 தரம் எடுத்து களைத்து சீ என்று போய்விட்டது. நான் தம்பியின் கலியாணத்திற்கு ஒரு சட்டை தைப்பிக்க தையல்காரவீட்டுக்குப் போகவேண்டும். (தையல் காரர் ஒரு ஆண். நன்றாக உடைகள் தைப்பார். அமத்தி அமத்தி அளவு எடுப்பதால் சிலருக்கு பிளவுசுகள் இறுக்கமாகவும் வந்துவிடும்.அதனால் அதிகமான பெண்கள் அளவு சட்டைகளைக் கொண்டு செல்வார்கள்) 5 மணிக்கு தையல்காரர் வேலைக்குப் போய்விடுவாராம். வாற வழியில இரவு மேசையில் எழுதிவைத்த சாமான்களையும் வாங்கி வாருங்க. இரவுக்குச் சமையலுக்கு ஒன்றும் இல்லை. மத்தியானம் ஒன்றும் சமைக்கவில்லை. நான் சூப்பு சூடாக்கிக் குடித்தனான். எனக்கு கொஞ்சம் உடமபு சரியில்லை. இரவு சாப்பாட்டிற்கு தம்பி வீட்ட வாறன் என்றவன்.(தம்பியையும் தனது மனைவியையும் ஒன்றாக அவன்தான் கூப்பிட்டவன்) அவனுக்கு எங்கேயாவது இறால் இருந்தால் பார்த்து வாங்குங்க. நாளைக்கு அம்மாவுடன் கதைக்கவேண்டும். ஒரு மலிவான தொலைபேசி அட்டையும் வேணும். காசு 1000 ரூபா கைமாத்துக் கேட்டவன் அதையும் வங்கியில் எடுத்து வாருங்க. பியரை கியரை; போத்தில கீத்தில வேண்டீராதேங்க. சொல்வதெல்லாம் விளங்குதா?" என்று தொலைபேசியை வைத்தாள். அவனுக்கு தலை சுற்றியது. வேலை முடிந்து நடைப்பிணமாக வெளியேறியவனுக்கு ஒருசிகரட் பத்தவேண்டும்போல் இருந்தது. காருக்க கீருக்க சிகரட் மணத்தால் நான் ரைக்சியிலதான் போகவேண்டிவரும் என்று அன்றொருநாள் தன் மனைவி சொன்னது நினைவு வந்தவனாக வெளியில் நின்று பத்தினான்.

மறுபடியும் தொலைபேசி. "எங்க நிக்கிறீங்க; இன்னும் 45 நிமிடங்கள்தான் இருக்கிறது. நான் ஆயத்தமாகிறன். இடையில தொலைபேசியை எடுக்காதீங்க" குளித்து றெடி ஆகவேணும் என்றாள். இவளவு சாமான்களையும் பார்ப்பதற்கே பலமணிநேரம் தேவை; அதிலும்  பல கடைகள் ஏறி இறங்கவேண்டும். கடைகளுக்குப் பக்கத்தில் கார் பாக் பண்ணுவதே கடினம். எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு காரில் ஏறியவன் குளிர் தாங்கமுடியாமல் காரினுள் சூட்டைப்போட்டுவிட்டுப் பொறுத்திருந்தான்.

மறுபடியும் அவனுக்கு ஒரு தொலைபேசி; அமைதியான குரலில் சாந்தமே அதன் சொந்தமான பாணியில் தொலைபேசியில் முத்தமழைபொழிந்து டார்லிங் வேலை முடிஞ்சுதாஅ.. களைப்பாக இருக்கிறதாஅ.. அமைதியாக இருந்து முதலில் ஒரு காப்பி குடியுங்க.. காலையில் போடடுத்தந்த காப்பி முடிந்தால் கடையில் ஏதாவது நல்ல சூடாக குடியுங்கஅ; மதிய சாப்பாடு சாப்பிட்ட நீங்களா?..முதுகெல்லாம் நோகிறதாஅ... ஆறுதலாக வாருங்க ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு சிகரட் ஒன்றை பத்தி றிலாக்சாகுங்க குஞ்சு. தம்பியும் வீட்ட வாறன் என்று சொன்னவன். எனக்கும் உங்களுடன் கடைத்தெருவில் கைகோர்த்து நடக்கவேண்டும்போல் உள்ளது. நீங்கள் வந்தபின் இருவருமாகக் கடைக்குப்போவோம். உங்களுக்குப் பிடித்த கறிவகைகளையும் எனக்குப் பிடித்த காய்கறிகளையும் வாங்குவோம். நீண்ட நாட்காக நீங்கள் பியர் ஒன்றும் வாங்கவில்லை. உங்களுக்கு நான் இன்று வாங்கித் தருகிறேன். நீங்கள் வீட்டக்கு வந்ததும் சாப்பாட்டைப் போட்டுத் தந்துவிட்டு அந்த நேரத்தில் நான் குளித்து றெடியாகிவிடுவன். புருசன் வெளியில் நிற்கும்போது மனைவி தலை முழுகக்கூடாது என்று பாட்டி சொல்லித்தந்தவோ. கதவில் வந்து மணி அடிக்கத்தேவையில்லை. வழமைபோல் நான் வாசலிலேயே காத்திருப்பேன் என்று தொலைபேசியை வைத்தாள். உலகத்தில் இவ்வாறான மனைவிமார் இருப்பதால்தான் முழத்திற்கு முழம் பூக்கடைகள் இருப்பதை அவன் உணர்ந்தவனாகச் சிந்தனையில்இருந்து விடுபட்டான். சொர்க்கம் என்றால் இதுவல்லவோ என்று அங்கலாய்த்தான். இது தனது மனக்கணக்கிற்குள் வந்த வெறும் பிரமை என்பதை நினைத்துக் கவலைப்பட்டான். எதிர்பார்த்தது கிடைக்காததால் கிடைத்ததுடன் மாரடிக்கிறான்.

கார் சூடாகியது. அதைவிட அவன் சூடாக இருந்தான். எந்தக் கடைக்கு முதல் போவது என்ற யோசனை. ஏதோ ஒரு கடைக்குச் சென்றான் சாமான்களை வாங்கி காசு கொடுக்கும் தருவாயில் முன்னுக்கு நின்றவர் இழுத்த கிறடிற்காட்டில் ஏதோ கோளாறு. அதனால் 15 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. ஒரு தமிழ் கடைக்குச் சென்றான். அங்கு அப்பதான் மரக்கறிவந்தது என்று வரும்வரை உண்ணாவிரதம்இருந்ததுபோல் சனக்கூட்டம். ஒருமாதிரி வெளியேறி வங்கிக்கு காசு எடுக்கச் சென்றான். நமது நாட்டு பாணுக்கு நிற்கும் கியூவைவிட பெரிதாக இருந்தது. காசு எடுக்காமல் சென்றால் மனைவியிடம் திட்டுவிழும் என்பதை உணர்ந்து வரிசையில் நின்றான். மணி 4.40 ஆகிவிட்டது. காசை எடுத்துத் திரும்பி காரை விட்ட இடத்தில் எடுக்கச் சென்றபோது காரின் ஒரு சில்லு கோட்டுக்கு வெளியில் நின்றுவிட்டது என்று சொல்லி அதற்கு 100 டொலர் தண்டப்பணத்துண்டு வைக்கப்பட்டிருந்தது. இவற்றை மனைவியிடம் காட்ட முடியாது. காட்டினால் "அது என் கவனக்குறைவு என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வீடு செல்வோம் என்றால் மனைவியின் நச்சரிப்பாலும் 9 மணிநேர வேலை செய்ததாலும் உடம்பில் ஒரு பதட்டம் ஏற்பட்டது.

மனைவியிடம் இருந்து மீண்டும் தொலைபேசி. எரிச்சலான குரலில் என்ன செய்கிறயள் இவளவு நேரமும். உங்களைப் பார்த்துப் பார்த்து இருந்துவிட்டு நான் வாடகைக் கார் பிடித்துச் சென்றுகொண்டு இருக்கிறன். வீட்டக்குச் சென்று இறாலை தண்ணிருக்குள்போட்டுவிட்டு சமையலுக்கு ஆயத்தப்படுத்துங்க" என்று தொ.பேசியை வைத்தாள். அன்பிலாப் பெண்டிரை ஒரு இடத்தில் ஓளவையார் யமன் என்று சொல்லியிருப்பதை அவன் மீட்டுப் பார்த்தான்.
மறுபடியும் ஒரு தொலைபேசி. இவோ தான். "ஐயோ அப்பா அவசரத்தில் அளவுசட்டையை விட்டுவிட்டு வந்துவிட்டன். இவன் அளவெடுத்தால் இறுக்கமாகத் தைத்துவிடுவான். சாமான்கள் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுக்குப்போய் அளவுசட்டையை உடனே கொண்டு வாருங்க.

அவனால் இயலவில்லை. காரை வேகமாகச் செலுத்தினான். 60 இல் போகவேண்டிய இடத்தில் 90 இல் போனதால் பொலிசார் அவனை மறித்துவிட்டார்கள். 20 நிமிடம் சுணங்கிவிட்டது. நிலமையைச் சொல்லுவதற்கு தையல்காரர் வீட்டுக்குத் தொலைபேசி எடுத்தான். "உங்களைக் காணாததால் அவோவை நான் அளவு எடுத்தவுடன் கிளம்பிவிட்டா" என்று பதில் வந்தது.

"பத்தாவிற்கு ஏற்ற பதிவிரதை உண்டாகில் ..........................சற்றேனும் கூடி வாழலாம்; ஏறு மாறாக நடப்பாளேயாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்.
அவன் நமக்கு ஒரு பாடமா அல்லது மனைவி அவனுக்கு ஒரு பாடமா?.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS